சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967

சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தல் 1967 (Fourth legislative assembly election of Madras State) ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடை பெற்றது.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான எதிர்க் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று, கா. ந. அண்ணாதுரை தமிழகத்தின் முதல்வரானார்.

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967
← 1962 பிப்ரவரி 5-21, 1967 1971 →

சென்னை மாநில சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
  சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967
தலைவர் கா. ந. அண்ணாதுரை காமராஜர்
கட்சி திமுக காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
போட்டியிடவில்லை விருதுநகர் (தோல்வி)
வென்ற
தொகுதிகள்
179 51
மாற்றம் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967123 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 196788
மொத்த வாக்குகள் 8,051,437 6,293,378
விழுக்காடு 52.59% 41.10%
மாற்றம் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 196715.69% சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 19675.04%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967

முந்தைய சென்னை மாநில முதல்வர்

எம். பக்தவத்சலம்
காங்கிரசு

சென்னை மாநில முதல்வர்

கா. ந. அண்ணாதுரை
திமுக

தொகுதிகள்

1967-ல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 189 பேர் பொதுத் தொகுதிகளிலிருந்தும் 45 பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசியல் நிலவரம்

  • 1962 சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறை முதலமைச்சராக வெற்றி பெற்ற காமராஜர் இந்திய முழுவதும் காங்கிரசு வலுவிழக்கத் தொடங்கியது.
  • இதனால் (1954-1963) முதல் ஒன்பது வருடங்களாக முதல்வராக இருந்த காமராஜர் தான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியில் இருந்து தாமகவே விலகி அவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டு தில்லி சென்று விட்டார்.
  • காமராசருக்கு பதிலாக தமிழக முதல்வரான பக்தவத்சலத்திடம் காமராஜரிடமிருந்த மக்கள் செல்வாக்கு இல்லை.
  • மேலும் 1964-ல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் காங்கிரசு அரசு மக்களின் நம்பிக்கையின்மையையும் எதிர்ப்பையும் பெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.
  • 1964ஆம் ஆண்டு காங்கிரசின் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு இந்தியா மற்றும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி பலமான சரிவை சந்தித்து.
  • இதனால் காங்கிரஸ் கட்சியில் அடுத்த பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் 1965ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி கட்டாயமாக்கபடவேண்டும் என்று கொண்டு வந்த சட்டம் தமிழகத்தில் இந்தி தினிப்பு போராட்டமாக தமிழகத்தில் திமுக தலைமையில் மாறி இருந்தது.
  • இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, 1965 வரை ஆங்கிலமும், இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர்.
  • இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 1965-ல் சனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும் இந்தியை ஆதரித்து, அதற்கெதிரான போராட்டத்தைக் கடுமையான முறைகளைக் கையாண்டு ஒடுக்கினர்.
  • இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.
  • முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தின் மூலம் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் வந்தது. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சித்து மக்களிடையே நினைவுபடுத்தும் வகையில் “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.
  • வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுகவின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்), நடிகர் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் திமுகவுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது.

கட்சிகள்

இத்தேர்தலில் காங்கிரசு தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் காமராஜரையும் காங்கிரசையும் ஆதரித்தது. திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியை உருவாக்குவதில் அண்ணாதுரையும், ராஜகோபாலச்சாரியும் பெரும்பங்கு வகித்தனர். இந்திய பொதுவுடமைக் கட்சி இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள்

இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி 5 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது. நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிடட இடங்கள் வென்ற இடங்கள் மாற்றம்
ஐக்கிய முன்னணி


இடங்கள்: 179
மாற்றம்: +123
வாக்குகள்: 8,051,437
வாக்கு %: 52.59%

திமுக 6,230,556 40.69% 174 137 +87
சுதந்திராக் கட்சி 811,232 5.30% 27 20 +14
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 623,114 4.07% 22 11 +11
பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி 136,188 0.89% 4 4 +4
முஸ்லிம் லீக் 95,494 0.62% 3 3 +3
சங்கதா சோஷ்யலிஸ்ட் கட்சி 84,188 0.55% 3 2 +2
திமுக ஆதரவு சுயேட்சைகள் 70,665 0.46% 2 2 +2
இந்திய தேசிய காங்கிரசு
இடங்கள்: 51
மாற்றம்: -88
வாக்குகள்: 6,293,378
வாக்கு %: 41.10%
காங்கிரசு 6,293,378 41.10% 232 51 -88
மற்றவர்கள்
இடங்கள்: 4
மாற்றம்: -5
சுயேட்சைகள் 591,214 3.86% 246 1 -4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 275,932 1.80% 32 2
ஃபார்வார்டு பிளாக் 44,714 0.29% 1 1 -2
இந்திய குடியரசுக் கட்சி 31,286 0.20% 13 0
பாரதீய ஜன சங் 22,745 0.15% 24 0
மொத்தம் 11 கட்சிகள் 15,310,702 100% 234

தாக்கம்

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர் விருதுநகர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அண்ணாதுரையின் அரசியல் நுட்பம் ஆகியவையே திமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்

கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள், வாக்கு வேறுபாடுகள் ஆகியவை கீழ்காணும் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன.

கட்சி < 500 500-1000 1000-3000 3000-5000 5000-10000 10000-20000 20000+
திமுக 3 1 10 9 42 56 17
சுதந்திரா 5 1 5 8 1
காங்கிரசு 5 5 20 10 5 3 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 1 4 4 1

ஆட்சி அமைப்பு

தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் அண்ணாதுரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு (ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மேலவை உறுப்பினரானார்.

அண்ணாதுரை அமைச்சரவை

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 

திமுக அமைச்சரவையில் 6 மார்ச் 1967 இலிருந்து 10 பிப்ரவரி 1969 வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்

அமைச்சர் துறை
கா. ந. அண்ணாதுரை முதல்வர், பொது நிர்வாகம், நிதி, திட்டம், மதுவிலக்கு, அகதிகள்
இரா. நெடுஞ்செழியன் கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சி மொழி, கைத்தறி, அறநிலையங்கள்
மு. கருணாநிதி பொதுப் பணிகள், சாலைகள், போக்குவரத்து, துறைமுகங்கள்
கே. ஏ. மதியழகன் உணவு, வருவாய், வணிக வரி
ஏ. கோவிந்தசாமி விவசாயம், கால்நடை, மீன்வளம், வனங்கள்
எஸ். ஜே. சாதிக் பாட்சா சுகாதாரம்
சத்தியவாணி முத்து ஹரிஜனர் நலம், தகவல்
எம். முத்துசாமி உள்ளாட்சி, காதி, கிராமப்புறத் தொழில்
எஸ். மாதவன் சட்டம், கூட்டுறவு, வீட்டு வசதி
என். வி. நடராஜன் தொழிலாளர் நலம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 தொகுதிகள்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 அரசியல் நிலவரம்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 கட்சிகள்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 தேர்தல் முடிவுகள்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 தாக்கம்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 ஆட்சி அமைப்புசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 மேலும் பார்க்கசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 மேற்கோள்கள்சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 வெளி இணைப்புசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967இந்திய தேசிய காங்கிரசுகா. ந. அண்ணாதுரைசென்னை மாநிலம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பல்லவர்விஜயநகரப் பேரரசுகொன்றைஇராமலிங்க அடிகள்விண்ணைத்தாண்டி வருவாயாபோயர்இரட்சணிய யாத்திரிகம்மயக்க மருந்துநிலாகரிகால் சோழன்புதன் (கோள்)விராட் கோலிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கட்டபொம்மன்அறம்திருமூலர்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)கபிலர் (சங்ககாலம்)முருகன்நாயக்கர்வெள்ளி (கோள்)மாதம்பட்டி ரங்கராஜ்தமிழ்விடு தூதுநீதி இலக்கியம்கன்னி (சோதிடம்)அட்சய திருதியைஇரட்டைமலை சீனிவாசன்அகரவரிசைஅமலாக்க இயக்குனரகம்மொழிபெயர்ப்புதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்நந்திக் கலம்பகம்பர்வத மலைதமிழ்ஒளிவல்லினம் மிகும் இடங்கள்ரச்சித்தா மகாலட்சுமிதினமலர்சாகித்திய அகாதமி விருதுஅரிப்புத் தோலழற்சிசேக்கிழார்ந. பிச்சமூர்த்திமாநிலங்களவைஇந்திய தேசிய சின்னங்கள்காதல் கொண்டேன்நீ வருவாய் எனபதிற்றுப்பத்துவாட்சப்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இராவணன்அடல் ஓய்வூதியத் திட்டம்பாடாண் திணைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சென்னை சூப்பர் கிங்ஸ்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தங்கம்இரண்டாம் உலகப் போர்சுற்றுச்சூழல்இளங்கோவடிகள்சேமிப்புபரணி (இலக்கியம்)பாண்டியர்முத்துராமலிங்கத் தேவர்தற்கொலை முறைகள்குகேஷ்நாச்சியார் திருமொழிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)காளமேகம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஜிமெயில்கோவிட்-19 பெருந்தொற்றுகிராம சபைக் கூட்டம்மானிடவியல்பாலின விகிதம்செண்டிமீட்டர்அழகர் கோவில்நெல்பெண்🡆 More