காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி (Kankesanthurai Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும்.

இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் காங்கேசன்துறை பட்டினசபை, பண்டத்தரிப்பு கிராமசபை, தெல்லிப்பழை கிராமசபை, மல்லாகம் கிராமசபை, மயிலிட்டி கிராமசபை என்பனவற்றை உள்ளடக்கியது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

தேர்தல் உறுப்பினர் படிமம் கட்சி காலம்
1934 சு. நடேசன்
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி 
சுயேச்சை 1934-1936
1936 1936-1947
1947 சா. ஜே. வே. செல்வநாயகம்
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி 
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1952
1952 சு. நடேசன்
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி 
ஐக்கிய தேசியக் கட்சி 1952-1956
1956 சா. ஜே. வே. செல்வநாயகம்
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி 
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956-1977
மார்ச் 1960
சூலை 1960
1965
1970
1977 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி 
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

அரசாங்க சபைத் தேர்தல்கள்

1931 தேர்தல்

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது. தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது. இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்கு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

1934 இடைத்தேர்தல்

வட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் சு. நடேசன் தெரிவு செய்யப்பட்டார்.

1936 தேர்தல்

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. முடிவுகள் வருமாறு:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சு. நடேசன் சுயேட்சை - 14,827 16.31%
அ. பொன்னையா சுயேட்சை - 6,391 16.31%
மொத்த வாக்குகள் 21,218
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 47,961
வாக்குவீதம் 44.24%

நாடாளுமன்றத் தேர்தல்கள்

1947 தேர்தல்

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சாவி 12,126 55.39%
  பொன்னம்பலம் நாகலிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி கை 5,160 23.57%
  சுப்பையா நடேசபிள்ளை ஐக்கிய தேசியக் கட்சி தராசு 4,605 21.04%
தகுதியான வாக்குகள் 21,891 100.00%
நிராகரிக்கப்பட்டவை 534
மொத்த வாக்குகள் 22,425
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,871
வாக்கு வீதம் 57.69%

1952 தேர்தல்

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சுப்பையா நடேசபிள்ளை ஐக்கிய தேசியக் கட்சி சாவி 15,337 57.00%
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி சைக்கிள் 11,571 43.00%
தகுதியான வாக்குகள் 26,908 100.00%
நிராகரிக்கப்பட்டவை 355
மொத்த வாக்குகள் 27,263
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,439
வாக்கு வீதம் 70.93%

1956 தேர்தல்

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 14,855 54.30%
சுப்பையா நடேசபிள்ளை சுயேட்சை குடை 8,188 29.39%
  வி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 4,313 15.77%
தகுதியான வாக்குகள் 27,356 100.00%
நிராகரிக்கப்பட்டவை 317
மொத்த வாக்குகள் 27,673
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 40,964
வாக்கு வீதம் 67.55%

1960 (மார்ச்) தேர்தல்

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 13,545 67.61%
  வி. காராளசிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி சாவி 5,042 25.17%
  ஆர். என். சிவப்பிரகாசம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 1,448 7.23%
தகுதியான வாக்குகள் 20,035 100.00%
நிராகரிக்கப்பட்டவை 244
மொத்த வாக்குகள் 20,279
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,473
வாக்கு வீதம் 71.22%

1960 (சூலை) தேர்தல்

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 15,668 88.63%
  ஆர். என். சிவப்பிரகாசம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கண்ணாடி 2,009 11.37%
தகுதியான வாக்குகள் 17,677 100.00%
நிராகரிக்கப்பட்டவை 131
மொத்த வாக்குகள் 17,808
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,473
வாக்கு வீதம் 62.54%

1965 தேர்தல்

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 14,735 58.24%
  எஸ். சிறீ பாஸ்கரன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 6,611 26.13%
  வி. காராளசிங்கம் இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி விளக்கு 2,257 8.92%
  கே. வைகுண்டவாசன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 958 3.79%
  வி. சீனிவாசகம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்கு) குடை 741 2.93%
தகுதியான வாக்குகள் 25,302 100.00%
நிராகரிக்கப்பட்டவை 269
மொத்த வாக்குகள் 25,571
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,309
வாக்கு வீதம் 72.42%

1970 தேர்தல்

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 13,520 44.29%
  வி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 8,164 26.75%
சி. சுந்தரலிங்கம் சுயேட்சை சேவல் 5,788 18.96%
  ரி. திருநாவுக்கரசு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 3,051 10.00%
தகுதியான வாக்குகள் 30,523 100.00%
நிராகரிக்கப்பட்டவை 140
மொத்த வாக்குகள் 30,663
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,804
வாக்கு வீதம் 81.11%

1975 இடைத்தேர்தல்

புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சா. ஜே. வே. செல்வநாயகம் 1972 அக்டோபர் 2 இல் தமது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். இவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை அன்றைய அரசு உடனடியாக நடத்தவில்லை. இறுதியில் 1975 பெப்ரவரி 6 இல் இடைத்தேர்தல் இடம்பெற்றது. இதன் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 25,927 72.89%
  வி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 9,457 26.61%
எம் அம்பலவாணர் சுயேட்சை கப்பல் 185 0.50%
தகுதியான வாக்குகள் 35,569 100.00%
நிராகரிக்கப்பட்டவை 168
மொத்த வாக்குகள் 35,737
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 41,227
வாக்கு வீதம் 86.68%

சா. ஜே. வே. செல்வநாயகம் 1977 ஏப்ரல் 26 இல் காலமானார்.

1977 தேர்தல்

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 31,155 85.41%
சிவப்பிரகாசம் சிறீதரன் சுயேட்சை தராசு 5,322 14.59%
தகுதியான வாக்குகள் 36,477 100.00%
நிராகரிக்கப்பட்டவை 218
மொத்த வாக்குகள் 36,695
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 43,907
வாக்கு வீதம் 83.57%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அ. அமிர்தலிங்கம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

Tags:

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி உறுப்பினர்கள்காங்கேசன்துறை தேர்தல் தொகுதி அரசாங்க சபைத் தேர்தல்கள்காங்கேசன்துறை தேர்தல் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல்கள்காங்கேசன்துறை தேர்தல் தொகுதி இவற்றையும் பார்க்ககாங்கேசன்துறை தேர்தல் தொகுதி மேற்கோள்களும் குறிப்புகளும்காங்கேசன்துறை தேர்தல் தொகுதிஇலங்கைஇலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989இலங்கையில் தேர்தல்கள்காங்கேசன்துறைதெல்லிப்பழைபண்டத்தரிப்புமயிலிட்டிமல்லாகம்யாழ்ப்பாண மாவட்டம்வட மாகாணம், இலங்கைவலிகாமம் வடக்கு பிரதேச சபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

காந்தள்புங்கைமுன்னின்பம்பாடாண் திணைவண்ணார்அறுவகைப் பெயர்ச்சொற்கள்பெ. சுந்தரம் பிள்ளைமகாபாரதம்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்திய உச்ச நீதிமன்றம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மருதநாயகம்நவரத்தினங்கள்சுந்தர காண்டம்ரோசுமேரிஉயர் இரத்த அழுத்தம்ந. பிச்சமூர்த்திமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்உலா (இலக்கியம்)குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்ஜி. யு. போப்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்ஜோதிகாபாரதிதாசன்விண்டோசு எக்சு. பி.அஸ்ஸலாமு அலைக்கும்முல்லைக்கலிநற்கருணைஐம்பூதங்கள்வசுதைவ குடும்பகம்போயர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்காவிரி ஆறுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மட்பாண்டம்கடையெழு வள்ளல்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்வெள்ளி (கோள்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பெரியாழ்வார்அருணகிரிநாதர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்ஐம்பெருங் காப்பியங்கள்இனியவை நாற்பதுபிரீதி (யோகம்)குண்டூர் காரம்கலாநிதி மாறன்மாமல்லபுரம்சிறுநீரகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்கட்டபொம்மன்காடுவெட்டி குருஅவதாரம்அழகிய தமிழ்மகன்கருத்தடை உறைசங்கம் (முச்சங்கம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பள்ளுமுடக்கு வாதம்சீரடி சாயி பாபாகல்லணைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சிவாஜி கணேசன்தமன்னா பாட்டியாஉலகம் சுற்றும் வாலிபன்திருக்குர்ஆன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நக்கீரர், சங்கப்புலவர்சைவத் திருமுறைகள்வனப்புராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அக்கிபட்டினத்தார் (புலவர்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்🡆 More