இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி

இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி (Lanka Sama Samaja Party (Revolutionary)) என்பது துரொட்ஸ்கிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும்.

1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி நான்காம் அனைத்துலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. லங்கா சமசமாசக் கட்சி தேசிய அரசில் இணைவதை எதிர்த்த அக்கட்சியின் சில கடுமைவாதிகள் சிலர் நான்காம் அனைத்துலகத்துடன் நல்லுறவைப் பேண விரும்பியவர்களாய் புதிய கட்சியை ஆரம்பித்தனர். நான்காம் அனைத்துலகம் இக்கட்சியைத் தமது இலங்கைப் பிரதிநிதியாக அறிவித்தது.

இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி
Lanka Sama Samaja Party (Revolutionary)
தொடக்கம்1964
பிரிவுலங்கா சமசமாஜக் கட்சி
செய்தி ஏடுFight, Samasamajist
கொள்கைதுரொட்ஸ்கியிசம்
பன்னாட்டு சார்புநான்காம் அனைத்துலகம்
இலங்கை அரசியல்

புரட்சிகர சமசமாசக் கட்சியின் நிறுவனர்களில் லங்கா சமசமாசக் கட்சியின் 14 மத்திய குழு உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான எட்மண்ட் சமரக்கொடி, மெரில் பெர்னாண்டோ ஆகியோரும் அடங்குவர். ஏனைய முக்கிய தலைவர்கள் வி. காராளசிங்கம், தொழிற்சங்கவாதி பாலா தம்பு ஆகியோர் ஆவர்.

உட்பூசல் காரணமாக புரட்சிகர சமசமாசக் கட்சி நாளடையில் உடைந்து போனது. 1964 திசம்பர் 3 இல் இக்கட்சியின் நாடாளுமன்றக் குழு வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களுடனும் இணைந்து அன்றைய சுதந்திரக் கட்சி அரசுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. இதையடுத்து சுதந்திரக் கட்சி அரசு கவிழ்க்கப்பட்டது. இதன் காரணமாக வி. காராளசிங்கம், அவருடன் சக்தி பிரிவு கட்சியில் இருந்து விலகி மீண்டும் லங்கா சமசமாசக் கட்சியில் சேர்ந்தனர்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

1964அரசியல் கட்சிஇடதுசாரிஇலங்கைநான்காம் அனைத்துலகம்லங்கா சமசமாஜக் கட்சிலியோன் திரொட்ஸ்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

குமரகுருபரர்மயக்கம் என்னபிரேமம் (திரைப்படம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திரிகடுகம்உணவுஜோதிகாவடிவேலு (நடிகர்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)இயேசு காவியம்இயேசுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நிதிச் சேவைகள்நன்னூல்கேழ்வரகுவினோஜ் பி. செல்வம்சப்தகன்னியர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வணிகம்இந்தியன் பிரீமியர் லீக்கலாநிதி மாறன்அய்யா வைகுண்டர்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்ஆய்த எழுத்து (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்நீக்ரோசங்ககாலத் தமிழக நாணயவியல்ஸ்ரீசச்சின் (திரைப்படம்)தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்வேதம்ஐங்குறுநூறுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்அருந்ததியர்சைவ சமயம்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தொடை (யாப்பிலக்கணம்)இராசேந்திர சோழன்இமயமலைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சிறுத்தைபாரத ரத்னாதமிழ்நாடு காவல்துறைசெண்டிமீட்டர்பரிவர்த்தனை (திரைப்படம்)இந்திய ரிசர்வ் வங்கிதமிழ் நீதி நூல்கள்கழுகுசுயமரியாதை இயக்கம்திருத்தணி முருகன் கோயில்ஐக்கிய நாடுகள் அவைவிபுலாநந்தர்பித்தப்பைபாரதிதாசன்முருகன்அம்மனின் பெயர்களின் பட்டியல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநம்ம வீட்டு பிள்ளைமுகம்மது நபிபழமொழி நானூறுமாதம்பட்டி ரங்கராஜ்திருமந்திரம்தனுசு (சோதிடம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்பூரான்தேவநேயப் பாவாணர்சட் யிபிடிதாயுமானவர்கொன்றை வேந்தன்தேவேந்திரகுல வேளாளர்சிதம்பரம் நடராசர் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திக்கற்ற பார்வதிஆளி (செடி)மு. வரதராசன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்🡆 More