ஹூக்லி மாவட்டம்

ஹூக்லி மாவட்டம் (Hooghly district) (/ˈhuːɡliː/), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும்.

வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். ஹூக்லி மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் கூக்ளி-சூச்சுரா நகராகும்.

ஹூக்லி மாவட்டம்
হুগলী জেলা
ஹூக்லி மாவட்டம்
ஹூக்லிமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வர்தமான் கோட்டம்
தலைமையகம்கூக்ளி-சூச்சுரா
பரப்பு3,149 km2 (1,216 sq mi)
மக்கட்தொகை5520389 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,753/km2 (4,540/sq mi)
படிப்பறிவு82.55 %
பாலின விகிதம்958
மக்களவைத்தொகுதிகள்3
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை16
முதன்மை நெடுஞ்சாலைகள்3
சராசரி ஆண்டு மழைபொழிவு1,500 mm
[hooghly.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தளம்]

இம்மாவட்டம் 23 காவல் நிலையங்களும், 18 வட்டார வளர்ச்சி அலுவலகங்களும், 12 நகராட்சி மன்றங்களும், ஒரு மாநகராட்சியும், 210 ஊராட்சி மன்றங்களும் கொண்டுள்ளது.

ஹூக்லி ஆற்றின் பெயராலேயே இம்மாவட்டம் ஹூக்லி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இம்மாவட்டம் சின்சுரா சதர், செரம்பூர், சந்தன்நகர் மற்றும் ஆரம்பாக் என நான்கு உட்கோட்டங்களை கொண்டுள்ளது

புவியியல்

மேடு பள்ளமற்ற தட்டையான நிலப்பரப்பு கொண்ட இம்மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து இருநூறு மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் ஹூக்லி ஆறு பாய்கிறது. மேலும் தாமோதர் ஆறு இம்மாவட்டத்தில் பாயும் ஆறாகும்.

மாவட்ட எல்லைகள்

இம்மாவட்டத்தின் வடக்கில் வர்தமான் மாவட்டம், வடகிழக்கில் நதியா மாவட்டம், கிழக்கில் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கில் ஹவுரா மாவட்டம், மேற்கில் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மற்றும் வடமேற்கில் பாங்குரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

பொருளாதாரம்

அரிசி, சணல் பயிரிடுதல், சணல் நூல் மற்றும் சணல் பைகள் உற்பத்தி ஆலைகள் அதிகம் கொண்டுள்ளது. மேலும் இந்துஸ்தான் மோட்டர் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை ஒன்று இம்மாவட்டத்தின் உத்தர்பாராவில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

ஹூக்லி மாவட்டம் சிங்சுரா, சந்தன்நாகூர், ஸ்ரீராம்பூர் மற்றும் ஆராம்பாக் என நான்கு உட்கோட்டங்களை கொண்டது.

சின்சுரா உட்கோட்டம்

சின்சுரா கோட்டத்தில் ஹூக்லி-சுச்சுரா மற்றும் பன்ஸ்பெரியா என இரண்டு நகராட்சிகளும், பாலகர், சின்சுரா-மொக்ரா, தனியாகாளி, பாண்டுவா மற்றும் போல்பா-தாத்பூர் என ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் கொண்டுள்ளது.

சந்தன்நாகூர் உட்கோட்டம்

சந்தன்நாகூர் உட்கோட்டம் சந்தன்நாகூர் மாநகராட்சியும், பத்ரேஷ்வர், சம்ப்தானி மற்றும் தாரகேஷ்வர் என மூன்று நகராட்சி மன்றங்களும், ஹரிபல், சிங்குர் மற்றும் தாரகேஷ்வர் என மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் கொண்டுள்ளது.

ஸ்ரீராம்பூர் உட்கோட்டம்

ஸ்ரீராம்பூர் உட்கோட்டமானது ஸ்ரீராம்பூர், உத்தர்பராகோட்ரங், தங்குனி, கோன்நகர், ரிஷ்ரா மற்றும் வைத்தியவதி எனும் ஆறு நகராட்சி மன்றங்களும்; சாந்தித்லா–I, சாந்தித்லா–II, ஜங்கிபரா மற்றும் ஸ்ரீராம்பூர் என நான்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் கொண்டுள்ளது.

ஆரம்பாக் உட்கோட்டம்

ஆரம்பாக் உட்கோட்டம் ஆரம்பாக் நகராட்சி மன்றம் மற்றும் ஆரம்பாக், கணக்குல்–I, கணக்குல்–II, கோக்காட்–I, கோக்காட்–II மற்றும் புர்சுரா என ஆறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.

அரசியல்

சட்டமன்ற தொகுதிகள்

இம்மாவட்டம் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. அவைகளின் விவரம்; 1. ஜங்கிபரா சட்டமன்ற தொகுதி, 2 சண்டிதலா சட்டமன்ற தொகுதி 3 உத்தர்பரா சட்டமன்ற தொகுதி, ஸ்ரீராம்பூர் சட்டமன்ற தொகுதி, 4 சம்ப்தானி சட்டமன்ற தொகுதி, 5 சந்தன்நகர் சட்டமன்ற தொகுதி, 6 சிங்குர் சட்டமன்ற தொகுதி 7 ஹரிபால் சட்டமன்ற தொகுதி, 8 தாரகேஷ்வர் சட்டமன்ற தொகுதி 9 சுன்சுரா சட்டமன்ற தொகுதி 10 பன்ஸ்பெரியா சட்டமன்ற தொகுதி 11 பாலகர் சட்டமன்ற தொகுதி, 12 பாண்டுவா சட்டமன்ற தொகுதி 13 தானெக்காளி சட்டமன்ற தொகுதி 14 புர்சுரா சட்டமன்ற தொகுதி 15 கணக்கல் சட்டமன்ற தொகுதி 16 ஆரம்பாக் சட்டமன்ற தொகுதி மற்றும் கோகாட் சட்டமன்ற தொகுதிகள் ஹூக்லி மாவட்டம் கொண்டுள்ளது.

மக்களவை தொகுதிகள்

ஹூக்லி மாவட்டத்தில் ஆரம்பாக் மக்களை தொகுதி, ஹூக்லி மக்களவை தொகுதி, ஸ்ரீராம்பூர் மக்களை தொகுதி என மூன்று மக்களை தொகுதிகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,519,145 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,814,653 மற்றும் பெண்கள் 2,704,492 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 961 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,753 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 81.80% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.03% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.36% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 533,210 ஆக உள்ளது.

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 4,574,569 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 870,204 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 7,300 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை கணிசமாகவும் உள்ளது.

போக்குவரத்து

தொடருந்து

இம்மாவட்டத்தில் தொடருந்து]] சேவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பண்டல் தொடருந்து சந்திப்பு பெரியதும், சுறுசுறுப்பான தொடருந்து சந்திப்பாகும். ஹூக்லி மாவட்டத்தில் பண்டல், தன்குனி, கமர்குண்டு மற்றும் சியோப்புலி என நான்கு தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளது.

தரைவழி போக்குவரத்து

இம்மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 2, தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் கிராண்ட் டிரங்க் சாலைகள் செல்வதால், நாட்டின் அனைத்து பகுதிகளும் ஹூக்லி மாவட்டம் இணக்கப்படுகிறது.

கல்வி

இம்மாவட்டத்தில் 2992 துவக்கப்பள்ளிகளும், 408 உயர்நிலைப்பள்ளிகளும், 127 மேல்நிலைப்பள்ளிகளும், 22 கல்லூரிகளும் மற்றும் ஆறு தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஹூக்லி மாவட்டம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hooghly
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஹூக்லி மாவட்டம் புவியியல்ஹூக்லி மாவட்டம் மாவட்ட எல்லைகள்ஹூக்லி மாவட்டம் பொருளாதாரம்ஹூக்லி மாவட்டம் மாவட்ட நிர்வாகம்ஹூக்லி மாவட்டம் சந்தன்நாகூர் உட்கோட்டம்ஹூக்லி மாவட்டம் ஸ்ரீராம்பூர் உட்கோட்டம்ஹூக்லி மாவட்டம் ஆரம்பாக் உட்கோட்டம்ஹூக்லி மாவட்டம் அரசியல்ஹூக்லி மாவட்டம் மக்கள் வகைப்பாடுஹூக்லி மாவட்டம் சமயம்ஹூக்லி மாவட்டம் போக்குவரத்துஹூக்லி மாவட்டம் தரைவழி போக்குவரத்துஹூக்லி மாவட்டம் கல்விஹூக்லி மாவட்டம் மேற்கோள்கள்ஹூக்லி மாவட்டம் வெளி இணைப்புகள்ஹூக்லி மாவட்டம்இந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உதவி:IPA/Englishகூக்ளி-சூச்சுராமாவட்டம் (இந்தியா)மேற்கு வங்காளம்வர்தமான் கோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விருத்தாச்சலம்ஊராட்சி ஒன்றியம்நாளந்தா பல்கலைக்கழகம்தொழினுட்பம்சாய் பல்லவிதமிழ்நாடு அமைச்சரவைமாடுசவுக்கு (இணையதளம்)யூடியூப்ஸ்ரீநுரையீரல் அழற்சிஇரத்தப் புற்றுநோய்பெருஞ்சீரகம்விவேகானந்தர்கருமுட்டை வெளிப்பாடுதமிழிசை சௌந்தரராஜன்சுற்றுச்சூழல் மாசுபாடுஇலங்கைதமிழ் படம் 2 (திரைப்படம்)சிலப்பதிகாரம்விஜயநகரப் பேரரசுஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்தில்லையாடி வள்ளியம்மைசிவவாக்கியர்பழமொழி நானூறுகௌதம புத்தர்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்அட்சய திருதியைஇரவீந்திரநாத் தாகூர்பாரிசோழர் கலைசுற்றுச்சூழல்தமன்னா பாட்டியாபரணி (இலக்கியம்)வெள்ளிவீதியார்பின்வருநிலையணிகணையம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்காச நோய்ஆபுத்திரன்இந்திய நிதி ஆணையம்உன்னை நினைத்துசன்ரைசர்ஸ் ஐதராபாத்மலைபடுகடாம்காப்பியம்ருதுராஜ் கெயிக்வாட்பெரும்பாணாற்றுப்படைவட்டார வளர்ச்சி அலுவலகம்தமிழ் மாதங்கள்எதற்கும் துணிந்தவன்சிவபெருமானின் பெயர் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்ஏ. ஆர். ரகுமான்சேதுபதிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சீர் (யாப்பிலக்கணம்)வரிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கில்லி (திரைப்படம்)திருச்சிராப்பள்ளிவணக்கம்சங்ககாலப் போர்முறைதிரிசாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முதலாம் உலகப் போர்இராமானுசர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிறுபாணாற்றுப்படைமுதல் மரியாதைமாணிக்கவாசகர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பார்க்கவகுலம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மகரம்திணைதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஆறுமுக நாவலர்அங்குலம்முருகன்🡆 More