ஸ்ரெஃபி கிராஃப்

ஸ்ரெஃபி கிராஃப் (அல்லது ஸ்டெபி கிராப்) (பிறப்பு: யூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை.

செர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிசு வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் சிலாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிசு தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர்., இச்சாதனை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. ஒவ்வொரு கிராண்ட் சிலாம் போட்டிகளையும் தொடர்ச்சியாக நான்கு முறை வென்ற ஒரே டென்னிசு வீரரும் இவரே.

ஸ்ரெஃபி கிராஃப்
ஸ்ரெஃபி கிராஃப்
நாடுஸ்ரெஃபி கிராஃப் இடாய்ச்சுலாந்து
வாழ்விடம்லாச் வேகச், நேவாடா, அமெரிக்கா
உயரம்1.76 மீ
தொழில் ஆரம்பம்1982
இளைப்பாறல்1999
விளையாட்டுகள்வலது கை; ஒற்றைப் பின்கை ஆட்டம் (One-handed backhand)
பரிசுப் பணம்அமெரிக்க டாலர்21,895,277
(4வது in all-time rankings)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்900–115 (88.7%)
பட்டங்கள்107
3வது உலக பட்டியல் (3rd in all-time rankings)
அதிகூடிய தரவரிசைNo. 1 (ஆகஸ்ட்17, 1987)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (1988, 1989, 1990, 1994)
பிரெஞ்சு ஓப்பன்W (1987, 1988, 1993, 1995, 1996, 1999)
விம்பிள்டன்W (1988, 1989, 1991, 1992, 1993, 1995, 1996)
அமெரிக்க ஓப்பன்W (1988, 1989, 1993, 1995, 1996)
ஏனைய தொடர்கள்
Tour FinalsW (1987, 1989, 1993, 1995, 1996)
ஒலிம்பிக் போட்டிகள்ஸ்ரெஃபி கிராஃப் Gold medal (1988)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்173–72
பட்டங்கள்11
அதியுயர் தரவரிசைNo. 5 (November 21, 1988)
இற்றைப்படுத்தப்பட்டது: N/A.

பெண்கள் டென்னிசு அமைப்பின் மூலம் 107 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். மார்ட்டினா நவரத்திலோவா 167 பட்டங்களையும் கிரிசு எவர்ட் 157 பட்டங்களையும் பெற்றுள்ளனர். மார்கரட் கோர்டும் இவரும் மட்டுமே ஒரே ஆண்டில் நடைபெறும் கிராண்ட் சிலாம் போட்டிகளில் மூன்றை ஐந்து முறை வென்றவர்கள். (1988,1989, 1993, 1995, 1996). பல்வேறு தளங்களிலும் சிறப்பாக விளையாடுவதும் முன்கை முறையில் விசையுடன் பந்தை அடித்து ஆடுவதும் ஆட்டத்திற்கு உகந்த முறையில் சிறப்பாக கால்களை நகர்த்துவதும் இவரது சிறப்பு. கிராப்பின் தடகள ஆற்றலும் கடுமையாக விளையாட்டை ஆடுவதும் தற்போதைய ஆட்ட பாணியின் அடிப்படையாக இப்போது உள்ளது. இவர் ஆறு முறை பிரெஞ்சு ஓப்பன் தனிநபர் பட்டத்தை வென்றுள்ளார். கிரிசு எவர்ட் ஏழு முறை வென்றுள்ளார். ஏழு முறை தனிநபர் விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளார். நான்கு முறை ஆசுத்திரேலிய ஓப்பன் தனிநபர் பட்டத்தையும் ஐந்து முறை யூ.எசு ஓப்பன் தனிநபர் பட்டத்தையும் பெற்றுள்ளார். 1987 பிரெஞ்சு ஓப்பனிலிருந்து 1990 பிரெஞ்சு ஓப்பன் வரை தொடர்ச்சியாக பதிமூன்று கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டங்களில் பங்கெடுத்து அதில் ஒன்பதில் வெற்றி பெற்றுள்ளார். கிராப் சிறந்த டென்னிசு வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். நவரத்திலோவா தான் வைத்திருக்கும் சிறந்த டென்னிசு வீரர்கள் பட்டியலில் இவரையும் இணைத்துள்ளார். 1999இல் பில்லி சீன் கிங் இவர் சிறந்த பெண் டென்னிசு வீரர் என்று கூறினார். 1999 டிசம்பரில் கிராப் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண் டென்னிசு வீரர் என்று அசோசியேட் பிரசு வல்லுநர் குழுவை கொண்டு தேர்வு செய்தது.

செருமனியைச் சேர்ந்தவர்களான போரிசு பெக்கரும் கிராப்புமே செருமனியில் டென்னிசை புகழைடையச் செய்தவர்களில் குறிப்பிடந்தகந்தவர்கள். கிராப் உலக தர வரிசையில் மூன்றாம் இடமிருக்கும் போது 1999இல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவர் அன்ட்ரே அகாசியை 2001 அக்டோபரில் திருமணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு இச்சேடன் சில் & இச்சாசு எல்லே என்ற குழந்தைகள் உள்ளனர்.

கிராண்ட் சிலாம் போட்டிகளின் காலக்கோடு

மேற்கு செர்மனி செர்மனி
போட்டிகள் 1983 1984 1985 1986 1987 1988 1989 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 SR வெ-தோ
கிராண்ட் சிலாம் போட்டிகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 1-சுற்று 3-சுற்று A NH A வெ வெ வெ காஇ A வெ A A 4-சுற்று A காஇ 4 / 10 47–6
பிரெஞ்சு ஓப்பன் 2-சுற்று 3-சுற்று 4-சுற்று காஇ வெ வெ அஇ வெ அஇ வெ வெ காஇ A வெ 6 / 16 84–10
விம்பிள்டன் கோப்பை LQ 4-சுற்று 4-சுற்று A வெ வெ அஇ வெ வெ வெ 1-சுற்று வெ வெ A 3-சுற்று 7 / 14 74–7
யூ.எசு. ஓப்பன் LQ 1-சுற்று அஇ அஇ வெ வெ அஇ காஇ வெ வெ வெ A 4-சுற்று A 5 / 14 73–9
வெற்றி-தோல்வி 1-2 7–4 11–3 9–2 19–2 27–0 27–1 24–3 21–3 17–2 27–1 18–3 21–0 21–0 7–2 5–2 17–2 22 / 54 278–32

Note:

1988இல் யூஎசு ஓப்பன் அரை இறுதியில் எதிராளி ஸ்ரெஃபி வெற்றி பெற வேண்டுமென வேண்டுமென்றே தோற்றதால் அவ்வெற்றி கணக்கில் சேர்க்கப்படவில்லை

சொந்த வாழ்க்கை

சொந்த தனிப்பட்ட காரணத்தால் 1997இல் கத்தோலிக திருச்சபையிலிருந்து விலகினார்.

தொழில் வாழ்க்கையில் தன் சொந்த ஊரான இச்சூலிலும் புளோரிடாவிலுள்ள போகா ராட்டன்னிலும், நியுயார்க்கிலும் நேரத்தை செலவிட்டார். நியு யார்க்கில் மான்காட்டனில் சொகுசு பங்களா வைத்திருந்தார்.

1992-99 காலகட்டத்தில் கார் பந்தய வீரர் மைக்கேல் பார்டெல்சுடன் களவில் (dated) இருந்தார். 1999 பிரெஞ்சு ஓப்பன்னை தொடர்ந்து ஆண்ரே அகாசியுடன் களவில் (டேட்டிங் ) இருந்தார். அவர்கள் 22 அக்டோபர் 2001 இருவரின் தாயார் முன்னிலையில் திருமணம் புரிந்துகொண்டனர். திருமணத்திற்கு வேறு எவரையும் அழைக்கவில்லை. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஸ்டெப்பி-அகாசி குடும்பத்தார் லாஸ் வேகஸ் பெருநகரத்தை சேர்ந்த லாஸ் வேகஸ் பள்ளத்தாக்கின் சம்மர்லின் என்ற இடத்தில் வசிக்கின்றனர். ஸ்டெப்பியின் தாயும் தன் நான்கு குழந்தைகளுடன் சகோதரர் மைக்கேல் கிராப்பும் அங்கேயே வசிக்கின்றனர்.

1991இல் செருமனிலுள்ள லியிப்சிக் என்ற இடத்தில் ஸ்டெப்பி கிராப் இளைஞர் டென்னிசு மையம் தொடங்கப்பட்டது. 1998இல் சில்ரன் பார் டுமாரோ என்ற லாப நோக்கற்ற அமைப்பை தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார். இது போரினாலும் பல காரணங்களாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது.

2001இல் இவர் தன்னை ஸ்டெப்பி என்று அழைப்பதை விட ஸ்டெபானி என்று அழைக்கப்படுவதையை விரும்புவதாக கூறினார்.

மேற்கோள்கள்

Tags:

கிராண்ட் சிலாம்ஜேர்மனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கூகுள்சிவன்இராவண காவியம்இயேசுவின் உயிர்த்தெழுதல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கம்பராமாயணம்சுயமரியாதை இயக்கம்ஐம்பூதங்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கொல்லி மலைமலையாளம்சுடலை மாடன்செண்பகராமன் பிள்ளைபாட்டாளி மக்கள் கட்சிதமிழர் நிலத்திணைகள்புற்றுநோய்பெ. சுந்தரம் பிள்ளைஎங்கேயும் காதல்விழுப்புரம் மக்களவைத் தொகுதிசெம்மொழிஎட்டுத்தொகைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்திய தேசியக் கொடிகண்ணே கனியமுதேநா. முத்துக்குமார்சூரிபோக்குவரத்துமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்எஸ். ஜெகத்ரட்சகன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பத்து தலசென்னை சூப்பர் கிங்ஸ்உயிரியற் பல்வகைமைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ஆபிரகாம் லிங்கன்இயேசுநாமக்கல் மக்களவைத் தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதிவிளம்பரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆழ்வார்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபிரீதி (யோகம்)கணையம்திருநங்கைஆதம் (இசுலாம்)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதிருவாசகம்எம். ஆர். கே. பன்னீர்செல்வம்உணவுபிரேமலதா விஜயகாந்த்வெண்பாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்வெள்ளி (கோள்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்முகேசு அம்பானிதிருமலை நாயக்கர்சைவ சமயம்ஏலாதிஇந்திநாடகம்செயங்கொண்டார்அபூபக்கர்சிறுநீரகம்நற்றிணைநயன்தாராசுமேரியாகருமுட்டை வெளிப்பாடுசங்க காலப் புலவர்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அக்பர்தீபிகா பள்ளிக்கல்பாரிசுற்றுச்சூழல்மரணதண்டனை🡆 More