விம்பிள்டன் கோப்பை

விம்பிள்டன் பெருவெற்றி வரிப்பந்தாட்டப் போட்டிகள் டென்னிசு வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும்.

வரிப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். 1877-ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் இப்போட்டித் தொடர், ஆண்டுதோறும் சூன் மாதக்கடைசியில் தொடங்கி சூலையில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிராண்ட் சிலாம்/பெருவெற்றிப் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடினதரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் சிலாம் போட்டித் தொடராக உள்ளது. ஆண்டி முர்ரே (ஐக்கிய இராச்சியம்) மற்றும் செரீனா வில்லியம்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர் 2016-க்கான விம்பிள்டன் வாகையர்களாவர்.

விம்பிள்டன் வரிப்பந்தாட்டப் போட்டிகள்
விம்பிள்டன் கோப்பை
பெருவெற்றி தொடர் (கிராண்ட் சிலாம்)
இடம்விம்பிள்டன்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
கூடும் இடம்அனைத்து இங்கிலாந்து புல்தரை வரிப்பந்தாட்டக் கழகம்
தரைபுற்றரை / வெளி
ஆண்கள் தேர்வு128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு128S / 96Q / 64D
பரிசுப் பணம்£11,282,710
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்
விம்பிள்டன் கோப்பை
புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் முதல் திடல் (கோர்ட்-1)

விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். மேலும், ஆட்டக்களங்களை சுற்றியுள்ள இடங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. 2009-ஆம் ஆண்டில் முக்கியமான மத்திய ஆட்டக்களத்தில் பின்னிழுக்கக்கூடிய கூரை கட்டப்பட்டது, இது மழை பெய்வதால் ஆட்டங்கள் தடைபடுவதைக் குறைக்கிறது.

நிகழ்வுகள்

ஐந்து முதன்மை நிகழ்வுகள், ஐந்து இளையோர் நிகழ்வுகள் மற்றும் ஐந்து அழைப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக விம்பிள்டன் உள்ளது.

முதன்மை நிகழ்வுகள்

ஐந்து முதன்மை நிகழ்வுகளும், பங்குபெறும் வீரர்/வீராங்கணைகளின் (இரட்டையர் போட்டிகள் எனில் அணிகளின்) எண்ணிக்கை பின்வருமாறு:

உ்உம்பமுஇஉமதநுஇமுஉம்பம்பம்பம

  • ஆடவர் ஒற்றையர் (128)
  • மகளிர் ஒற்றையர் (128)
  • ஆடவர் இரட்டையர் (64)
  • மகளிர் இரட்டையர் (64)
  • கலப்பு இரட்டையர் (48)

இளையோர் நிகழ்வுகள்

ஐந்து இளையோர் போட்டிகளும், அவற்றில் பங்கேற்கும் நபர்களின் / அணிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

  • ஆண்கள் ஒற்றையர் (64)
  • பெண்கள் ஒற்றையர் (64)
  • ஆண்கள் இரட்டையர் (32)
  • பெண்கள் இரட்டையர் (32)
  • ஊனமுற்றோர் இரட்டையர் (12)

இந்நிலையில் கலப்பு இரட்டையர் போட்டி நடத்தப்பெறுவதில்லை.

அழைப்பு நிகழ்வுகள்

ஐந்து அழைப்பு நிகழ்வுகளும், அவற்றில் பங்குபெறும் இணைகளும் பின்வருமாறு:

  • அழைப்பு ஆடவர் இரட்டையர் (8 இணை "ரவுண்ட் ராபின்")
  • அழைப்பு முதுநிலை ஆடவர் இரட்டையர் (8 இணை "ரவுண்ட் ராபின்")
  • அழைப்பு மகளிர் இரட்டையர் (8 இணை "ரவுண்ட் ராபின்")
  • ஆடவர் சக்கரநாற்காலி இரட்டையர் (4 இணை)
  • மகளிர் சக்கரநாற்காலி இரட்டையர் (4 இணை)

போட்டி வடிவம்

ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் "5 கணங்களில் சிறந்தது" முறையிலும், ஏனைய அனைத்தும் "3 கணங்களில் சிறந்தது" முறையிலும் நடத்தப்பெறுகிறது.

கோப்பைகள்

விம்பிள்டன் கோப்பை 
விம்பிள்டன் ஒற்றையர் ஆட்ட வெற்றிச் சின்னங்கள்: ஆண்களுக்கான கோப்பை(கீழே), பெண்களுக்கான கேடயம் (மேலே) படத்தில் பார்க்கலாம்

ஆடவருக்கான விம்பிள்டன் கோப்பை 18.5 அங்குல உயரமும் (தோராயமாக 47 செமீ) 7.5 அங்குல விட்டமும் (தோராயமாக 19 செமீ) கொண்டது. இக்கோப்பை அனைத்து இங்கிலாந்து கழகத்தின் சொத்தாகும்; அது அவர்களது அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டு வாகையருக்கும் நான்கில் மூங்கு பங்கு அளவான கோப்பை வழங்கப்படும் (உயரம் 13.5 அங்குலம்).

மகளிருக்கு 18.75 அங்குல (தோராயமாக 48 செமீ) விட்ட அளவுடைய ஸ்டெர்லிங் வெள்ளித் தட்டு பரிசாக வழங்கப்படுகிறது. இது "வீனஸ் ரோஸ்வாட்டர் தட்டு" என்ற பெயரில் வழங்கப்பெறுகிறது. வாகையர் நான்கில் மூன்று பங்கு அளவுடைய தட்டினைப் பெறுவர்.

ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வாகையர்களுக்கு வெள்ளிக் கோப்பைகள் பரிசாக வழங்கப்படுகின்றன. மற்ற பெருவெற்றித் தொடர்களைப் போலன்றி, விம்பிள்டனில் இரட்டையர் பிரிவில் இருவருக்கும் தனித்தனியே கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் இறுதிப் போட்டியில் தோற்றோருக்கு வெள்ளித் தட்டுகள் வழங்கப்படும். கோப்பைகள் அனைத்து இங்கிலாந்து புல்தரை வரிப்பந்தாட்டக் கழகத் தலைவரால் வழங்கப்படும்.

பரிசுத் தொகை

2016-ஆம் ஆண்டு விம்பிள்டன் பெருவெற்றித் தொடரில் ஆடவர் மற்றும் மகளிருக்கான பரிசுத்தொகை முதன்முறையாக ₤2,000,000-ஐ எட்டியது. ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் இணை ₤350,000-ஐப் பெறுவர்; இது 2015-ஐக் காட்டிலும் ₤10,000 அதிகமாகும். கலப்பு இரட்டையர் பரிசுத் தொகை ₤100,000 ஆகும். மொத்த பரிசுத் தொகையான ₤28,100,000 ஆனது 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் 5% அதிகமாகும்.

2016 ஆடவர் மற்றும் மகளிர் பரிசுத்தொகை
பகுப்பு பெரும் பரிசுத்தொகை 2015-லிருந்து உயர்வு
வாகையாளர் £2,000,000 6.4%
இரண்டாமிடம் £1,000,000 6.4%
அரையிறுதியில் தோற்றவர் £500,000 6.3%
காலிறுதியில் தோற்றவர் £250,000 3.6%
நான்காம் சுற்றில் தோற்றவர் £132,000 3.9%
மூன்றாம் சுற்றில் தோற்றவர் £80,000 3.9%
இரண்டாம் சுற்றில் தோற்றவர் £50,000 6%
முதல் சுற்றில் தோற்றவர் £30,000 3.5%

தரவரிசைப் புள்ளிகள்

விம்பிள்டனில் ஏடிபி (ATP) மற்றும் டபிள்யூடிஏ (WTA) ஆகியவற்றுக்கான தரவரிசைப் புள்ளிகள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. தற்போது கீழ்க்காணும் வகையில் தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

ஏடிபி டபிள்யூடிஏ
முதல் சுற்று 10 10
இரண்டாம் சுற்று 45 70
மூன்றாம் சுற்று 90 130
நான்காம் சுற்று 180 240
காலிறுதியை எட்டியோர் 360 430
அரையிறுதியை எட்டியோர் 720 780
இரண்டாமிடம் 1200 1300
வாகையர் 2000 2000

படத்தொகுப்பு

உசாத்துணைகள்

Tags:

விம்பிள்டன் கோப்பை நிகழ்வுகள்விம்பிள்டன் கோப்பை கோப்பைகள்விம்பிள்டன் கோப்பை பரிசுத் தொகைவிம்பிள்டன் கோப்பை தரவரிசைப் புள்ளிகள்விம்பிள்டன் கோப்பை படத்தொகுப்புவிம்பிள்டன் கோப்பை உசாத்துணைகள்விம்பிள்டன் கோப்பைஆண்டி முர்ரேஆஸ்திரேலிய ஓப்பன்செரீனா வில்லியம்ஸ்ஜூன்ஜூலைடென்னிஸ்பிரெஞ்சு ஓப்பன்யூ.எசு. ஓப்பன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாளந்தா பல்கலைக்கழகம்இன்னா நாற்பதுகிராம சபைக் கூட்டம்குடும்ப அட்டைவணிகம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மூவேந்தர்முதலாம் இராஜராஜ சோழன்அவிட்டம் (பஞ்சாங்கம்)லிங்டின்இந்திய நிதி ஆணையம்வானிலைபோக்கிரி (திரைப்படம்)கூத்தாண்டவர் திருவிழாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்நீதிக் கட்சி108 வைணவத் திருத்தலங்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சிவாஜி கணேசன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஜெயம் ரவிநீர்நிலைமீனம்விலங்குபுற்றுநோய்காடுவெட்டி குருதொல். திருமாவளவன்மு. வரதராசன்பல்லவர்பாலின விகிதம்மனித மூளைவே. செந்தில்பாலாஜிமாமல்லபுரம்ஆசிரியர்விளையாட்டுசிற்பி பாலசுப்ரமணியம்பரிபாடல்தேவிகாஆற்றுப்படைநஞ்சுக்கொடி தகர்வுசுபாஷ் சந்திர போஸ்பூனைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருட்டுப்பயலே 2நிலாமு. மேத்தாபொன்னுக்கு வீங்கிஇந்து சமயம்பாரதிய ஜனதா கட்சிசங்கம் (முச்சங்கம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சுரதாகழுகுசங்ககாலத் தமிழக நாணயவியல்கிராம்புஔவையார்நற்றிணைநிதி ஆயோக்தொழிற்பெயர்அகத்தியர்பரதநாட்டியம்வண்ணார்தேவேந்திரகுல வேளாளர்பிரேமம் (திரைப்படம்)சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கண் (உடல் உறுப்பு)ஆழ்வார்கள்திருமலை நாயக்கர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)விவேகானந்தர்எலுமிச்சைதொல்காப்பியம்மகேந்திரசிங் தோனிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வெண்குருதியணுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வேதம்கருச்சிதைவு🡆 More