மார்கரெட் கோர்ட்

மார்கரெட் கோர்ட் (பிறப்பு 16 யூலை 1942) மார்கரெட் இசுமித் கோர்ட் என்றும் அறியப்படுகிறார்.

இவர் ஓய்வு பெற்ற டென்னிசு வீராங்கனை. உலகின் முதல் நிலை வீரராக 1962இல் இருந்துள்ளார். ஆத்திரேலியரான இவர் தற்போது பேர்த் நகரில் கிறித்துவ மத போதகராக பணியாற்றுகிறார். டென்னிசு விளையாட்டில் மற்ற எவரையும் விட அதிக கிராண்டு சிலாம் கோப்பைகள் பெற்றவர் இவரே.

மார்கரெட் கோர்ட்
மார்கரெட் கோர்ட்
பிறப்புMargaret Smith
16 சூலை 1942 (அகவை 81)
அல்புரி
பணிவரிப்பந்தாட்டக்காரர்
விருதுகள்Member of the Order of the British Empire, Australian Sports Medal, Officer of the Order of Australia, Centenary Medal, Companion of the Order of Australia, Philippe Chatrier Award, Australian Tennis Hall of Fame
மார்கரெட் கோர்ட்
மார்கெரட் கோர்ட் 1968இல்

டென்னிசில் ஓப்பன் காலம் தொடங்கிய பின் ஒரே ஆண்டில் கிராண்ட் சிலாமின் நான்கு கோப்பைகளையும் வென்ற முதலாம் வீரர் இவரே. 1970 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தினார். 1988 ஆம் ஆண்டு இச்சாதனையை இச்டெபி கிராப் நிகழ்த்தினார். ஓப்பன் காலம் தொடங்கிய இவர் 11பெண்கள் ஒற்றையர் கிராண்ட் சிலாம் கோப்பைகளை பெற்றுள்ளார், ஓப்பன் காலத்திற்கு முன்பு 13, (மொத்தமாக 24).

இவர் 19 இரட்டையர் கோப்பைகளையும் 21 கலப்பு இரட்டையர் கோப்பைகளையும் பெற்றுள்ளார். அதனால் மொத்தமாக 64 கிராண்ட் சிலாம் போட்டிகளில் கோப்பையை பெற்றுள்ளார். இவர் அனைத்து வகையான ஆடுகளங்களிலும் தனிநபர் பிரிவில் கோப்பையை வென்றுள்ளார். இவரின் வெற்றி விகிதம் 1087-107 அதாவது 91.68% ஆகுமென இசுபோர்டாலசி என்ற இணைய பக்கம் கூறுகிறது. ஓப்பன் காலத்தில் அவரின் வெற்றி வீதம் 91.37% (593-56). ஓப்பன் காலத்து கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டத்தில் வெற்றி வீதம் 91.7% (11-1). இவரும் கிம் கிளிசுடர்சும் குழந்தை பெற்ற பின்னும் கிராண்ட் சிலாம் கோப்பையை வென்றவர்கள் ஆவர். 2010இல் கிரால்டு சன் என்ற ஆவுத்திரேலிய நாளேடு கோர்ட் இதுவரை இருந்தவர்களில் மிகச்சிறந்த டென்னிசு வீரர் என புகழ்ந்தது. கோர்ட் கிராண்ட் சிலாம் தொகுப்புகள் எனப்படும் தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என்ற மூன்று பிரிவுகளிலும் கோப்பையை வென்ற மூன்று பேரில் ஒருவர் ஆவார் (மூவரும் பெண்கள்). கோர்ட் இரு முறை கிராண்ட் சிலாம் தொகுப்புகள் வென்ற ஒரே வீரர்.

ரோமன் கத்தோலிகராக வளர்ந்த கோர்ட், பெந்தகோசு இயக்கத்திற்கு 1970இல் மாறினார். பின் அதில் அவ்வியக்க பரப்புரையாளராக சமய போதகராக 1991இல் மாறினார். இவர் மார்கெரட் கோர்ட் சமய போதகர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தினார், இவர் ஓரினச்சேர்க்கைக்கும் இருபால்சேர்க்கை உணர்வு கொண்டவர்களுக்கும் மாறுபட்ட பால் உணர்வு கொண்டவர்களுக்கும் எதிரான எண்ணத்தை கொண்டிருந்தார்.

இவர் இனவெறியர், தன்பால் இன எதிர்ப்பாளர் என்பதால் இவரது பெயரில் உள்ள ஆத்திரேலிய ஓப்பன் திடலின் பெயரை மாற்றச்சொல்லி மார்ட்டினா நவரத்திலோவா கோரியுள்ளார்.

தொழில் வாழ்க்கை

மார்கெரட் கோரட் லாரன்சு சிமித்துக்கும் கேத்தரின் சிமித்துக்கும் நியு சவுத் வேல்சு மாகாணத்திலுள்ள அல்பரியில் பிறந்தார். இவருக்கு கேவின் வின்சன்ட் என்ற இரு அண்ணன்களும் யூன் சனகான் என்ற அக்காவும் உள்ளார்கள். இவர் இயற்கையில் இடக்கை ஆட்டக்காரர் ஆனால் டென்னிசு மட்டையை உறுதியாக பிடிப்பதற்காக வலது கையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார். எட்டு வயதிலிருந்து டென்னிசு ஆட ஆரம்பித்த இவர் 1960இல் 18 வயது ஆனபோது ஏழு தனிநபர் கோப்பைகளை அவுத்திரேலிய சாதனைப்போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றார். 1962இல் பிரெஞ்சு ஓப்பனையும் யூஎசு ஓப்பனையும் வென்ற போது வெளிநாட்டில் கோப்பையை வென்ற முதல் அவுத்திரேலிய பெண் ஆனார். இதற்கு பின் விம்பிள்டனை வென்ற முதல் ஆவுத்திரேலிய பெண் ஆனார். . 1966 விம்பிள்டன் வெற்றிக்குப்பின் தற்காலிகமாக ஓய்வு பெற்றார். 1967இல் பேரி கோர்ட் என்பவரை திருமணம் புரிந்தார். பேரியின் தந்தை சர் சார்லசு கோர்ட் சகோதரன் ரிச்சர்டு கோர்ட். 1968இல் மீண்டும் டென்னிசு உலகிற்கு திரும்பிய இவர் 1970இல் நான்கு கிராண்ட் சிலாம் கோப்பைகளையும் வென்றார். 1972ஆம் ஆண்டு விம்பிள்டன் கோப்பையை இவோன்னே கூலகோன் காலேயிடம் இழந்தார் அப்போது இவர் கருவுற்றிருந்தார்.

மேற்கோள்கள்

Tags:

பேர்த்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பர்வத மலைவினோஜ் பி. செல்வம்அம்பிகா (நடிகை)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)விரை வீக்கம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கவுண்டர்பிள்ளைத்தமிழ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருட்டுப்பயலே 2அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஆய்த எழுத்து (திரைப்படம்)ஆகு பெயர்அம்மனின் பெயர்களின் பட்டியல்முடியரசன்தொகாநிலைத் தொடர்திருப்பாவைதமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்அணி இலக்கணம்இந்திரா காந்திவேலூர் மக்களவைத் தொகுதிநவமிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தாமரைவரலாறுஇயேசுகுறிஞ்சி (திணை)கே. என். நேருஹர்திக் பாண்டியாசினைப்பை நோய்க்குறிஅகரவரிசைமறவர் (இனக் குழுமம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)சதுரங்க விதிமுறைகள்இந்திய நாடாளுமன்றம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மாமல்லபுரம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்திய மக்களவைத் தொகுதிகள்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்இயற்கைதிருப்பதிஅழகுவிவேகானந்தர்அத்தி (தாவரம்)திருநாவுக்கரசு நாயனார்தருமபுரி மக்களவைத் தொகுதிஉரிச்சொல்பஞ்சாங்கம்சித்தர்கொரோனா வைரசுஇன்ஸ்ட்டாகிராம்மு. வரதராசன்வெந்து தணிந்தது காடுதேவாங்குதமிழ்விடு தூதுசிவன்கொங்கு வேளாளர்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்மொழிபெயர்ப்புகுறுந்தொகை2019 இந்தியப் பொதுத் தேர்தல்வாணியர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்ஐந்து எஸ்ஆங்கிலம்இந்திய தேசிய சின்னங்கள்திருமூலர்திருவண்ணாமலைசரண்யா துராடி சுந்தர்ராஜ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)🡆 More