ஷாஜகான்: 5வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1628–1658)

சிகாபுதீன் முகம்மது குர்ரம் என்பவர் முகலாயப் பேரரசின் 5வது பேரரசர் ஆவார்.

இவர் தனது பட்டப் பெயரான முதலாம் ஷாஜகான் என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். ஷாஜகான் என்ற பாரசீகப் பெயருக்கு உலகின் மன்னன் என்று பொருள். இவரது ஆட்சியின் கீழ் முகலாயர்கள் தங்களது கட்டடக்கலைச் சாதனைகள் மற்றும் கலாச்சாரப் பெருமைகளின் உச்சத்தை அடைந்தனர்.

முதலாம் ஷாஜகான்
  • பாடிஷா
  • அல் சுல்தான் அல் ஆசம்
ஷாஜகான்: 5வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1628–1658)
ஷாஜகான் உருவப்படம், அண். 1630
முகலாயப் பேரரசின் 5ஆம் பேரரசர்
ஆட்சிக்காலம்19 சனவரி 1628 –31 சூலை 1658
முடிசூட்டுதல்14 பெப்ரவரி 1628, ஆக்ரா
முன்னையவர்சகாரியார் மிர்சா (நடைமுறைப்படி)
முதலாம் ஜஹாங்கீர்
பின்னையவர்முதலாம் ஆலம்கீர்
பிறப்புகுர்ரம்
(1592-01-05)5 சனவரி 1592
இலாகூர் கோட்டை, லாகூர், முகலாயப் பேரரசு
இறப்பு22 சனவரி 1666(1666-01-22) (அகவை 74)
ஆக்ரா கோட்டை, ஆக்ரா, முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
பட்டத்து இராணி
மும்தாசு மகால்
(தி. 1612; இற. 1631)
மனைவிகள்
குழந்தைகளின்
பிள்ளைகள்
பெயர்கள்
சிகாபுதீன் முகம்மது குர்ரம் ஷாஜகான்
பட்டப் பெயர்
ஷாஜகான்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பிர்துவாசு அசியானி (பொருள். சொர்க்கத்தில் கூட்டில் இருப்பவர்)
மரபுஷாஜகான்: 5வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1628–1658) பாபுர் குடும்பம்
அரசமரபுஷாஜகான்: 5வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1628–1658) தைமூர் வம்சம்
தந்தைமுதலாம் ஜஹாங்கீர்
தாய்பில்கிசு மக்கானி
மதம்சன்னி இசுலாம் (அனாபி)
தேசிய முத்திரைமுதலாம் ஷாஜகான்'s signature

இவர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். மேவாரின் இராசபுத்திரர்கள் மற்றும் தக்காணத்தின் லோடிக்களுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புகளில் ஷாஜகான் பங்கெடுத்தார். 1627ஆம் ஆண்டு அக்டோபரில் ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகு தனது தம்பி சகாரியார் மிர்சாவைத் தோற்கடித்த பிறகு, ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் பேரரசராகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொண்டார். சகாரியார் மிர்சாவுடன் சேர்த்து அரியணைக்கு உரிமை கோரிய எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஷாஜகான் மரண தண்டனை கொடுத்தார். இவர் செங்கோட்டை, ஷாஜகான் மசூதி மற்றும் தாஜ்மகால் ஆகிய பல்வேறு நினைவுச்சின்னங்களைக் கட்டினார். தாஜ் மகாலில் இவரது விருப்பத்துக்குரிய மனைவியான மும்தாசு மகால் அடக்கம் செய்யப்பட்டார். அயல் நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரையில், ஷாஜகான் தக்காண சுல்தானகங்களுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கைகள், போர்த்துக்கீசியர்களுடனான சண்டைகள் மற்றும் சபாவித்துகளுடனான போர்கள் ஆகியவற்றை நடத்தினார். அதே நேரத்தில் உதுமானியப் பேரரசுடன் நடைமுறையிலான உறவுகளைப் பேணினார். இவர் பல உள்ளூர்க் கிளர்ச்சிகளையும் ஒடுக்கினார். அழிவை ஏற்படுத்தியத் தக்காணப் பஞ்சத்தை எதிர்கொண்டார்.

1657ஆம் ஆண்டு செப்டம்பரில் ஷாஜகானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர் தனது மூத்தமகன் தாரா சிக்கோவைத் தனது வாரிசாக நியமித்தார். இந்த நியமிப்பு இவரது மூன்று மகன்களுக்கிடையே வாரிசுப் பிரச்சனைக்கு இட்டுச் சென்றது. இப்பிரச்சனையிலிருந்து ஷாஜகானின் மூன்றாவது மகன் ஔரங்கசீப் வெற்றியாளராக உருவானர். முகலாயப் பேரரசின் 6வது பேரரசர் ஆனார். 1658ஆம் ஆண்டு சூலையில் ஷாஜகான் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தபோது, ஔரங்கசீப் தனது தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறைப்படுத்தினர். 1666ஆம் ஆண்டு சனவரியில் இறக்கும் வரை ஷாஜகான் சிறையிலேயே இருந்தார். இறப்பிற்குப் பிறகு தாஜ்மகாலில் இவரது மனைவி மும்தாசுக்கு அருகில் இவர் புதைக்கப்பட்டார். அக்பரால் தொடங்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகளிலிருந்து விலகியதற்காக இவரது ஆட்சி அறியப்படுகிறது. ஷாஜகானின் ஆட்சியின்போது இஸ்லாமியப் புத்துயிர் இயக்கங்களான நக்‌ஷபந்திய்யா போன்றவை முகலாயக் கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

ஷாஜகான்
பிறப்பு: 5 சனவரி 1592 இறப்பு: 22 சனவரி 1666
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
ஜஹாங்கீர்
முகலாயப் பேரரசர்
1627–1658
பின்னர்
ஔரங்கசீப்

Tags:

முகலாயப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவரத்தினங்கள்அதிமதுரம்அமலாக்க இயக்குனரகம்இன்னா நாற்பதுஇலட்சம்மீனா (நடிகை)தமிழ்விடு தூதுஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)மீரா சோப்ராசிவாஜி கணேசன்காயத்ரி மந்திரம்சிவபெருமானின் பெயர் பட்டியல்பொறியியல்ஜெயகாந்தன்வன்னியர்2022 உலகக்கோப்பை காற்பந்துதயாநிதி மாறன்கட்டுவிரியன்வெண்பாநருடோமுக்குலத்தோர்இந்திய தேசிய சின்னங்கள்வல்லினம் மிகும் இடங்கள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிசிவகங்கை மக்களவைத் தொகுதிஉப்புச் சத்தியாகிரகம்மரியாள் (இயேசுவின் தாய்)விவிலிய சிலுவைப் பாதைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவாதுமைக் கொட்டைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தங்கம்பச்சைக்கிளி முத்துச்சரம்திரிகடுகம்தேவதூதர்சிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழ் மன்னர்களின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பாசிசம்புதுமைப்பித்தன்அன்னை தெரேசாபூப்புனித நீராட்டு விழாகுருசிங்கப்பூர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விளம்பரம்பெயர்ச்சொல்சுவாதி (பஞ்சாங்கம்)முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்வைப்புத்தொகை (தேர்தல்)முகம்மது நபிதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்நன்னீர்சரத்குமார்நம்ம வீட்டு பிள்ளைகருக்கலைப்புமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிவங்காளதேசம்குணங்குடி மஸ்தான் சாகிபுமோகன்தாசு கரம்சந்த் காந்திமஞ்சும்மல் பாய்ஸ்கொங்கு வேளாளர்மட்பாண்டம்திதி, பஞ்சாங்கம்ஆதம் (இசுலாம்)விவேகானந்தர்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தங்கம் தென்னரசுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அக்கி அம்மைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பாசிப் பயறுமுத்துலட்சுமி ரெட்டிஇலக்கியம்🡆 More