வீட்டுக் காவல்

வீட்டுக் காவல் அல்லது வீட்டுச் சிறை என்பது ஒருவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவரின் நடமாட்டத்தையும், பிறருடன் நேரடியாகவோ, மறைமுகவாகவோ மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் வசதிகள் மூலம் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ள இயலாத வகையில் தனிமைப்படுத்த, அவரது வீட்டிலேயே முடக்கி வைப்பதாகும்.

ஒரு அரசின் கொள்கைகளை எதிர்த்து, மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும், அரசியல்செல்வாக்கு மிக்க அரசியல் அதிருப்தியாளர்களை, நீதிமன்ற ஆணை மூலம் காவல் துறையினர், சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே வெளி உலகத் தொடர்புகள் இன்றி தனிமைப் படுத்தி வைத்துவிடுவர். வீட்டுச் சிறையில் வைக்கப்படுபவர் யாரிடனும் தொடர்பு கொள்ள முடியாதவாறு, வீட்டைச் சுற்றி காவலர்கள் நிறுத்தப்படுவர். மேலும் தொலைபேசி, அலைபேசி, இணைய வசதிகளின் இன்றி வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சிலர்

அரசிற்கு எதிரான அதிருப்தி உணர்வுகளை தூண்டி, பொதுமக்களை அரசிற்கு எதிராக வன்முறையில் அல்லது போராட்டங்களில் இறங்காதவாறு, மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் பல நாடுகளில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர்:

இந்தியா

காஷ்மீர் பிரிவினையைத் தூண்டியதற்காக இந்திய அரசால் சேக் அப்துல்லா, காஷ்மீருக்கு வெளியே, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்.

மியான்மர்

ஆங் சான் சூச்சியை மியான்மர் நாட்டின் இராணுவ அரசு மூன்று முறை வீட்டுக் காவலில் தடுத்து வைத்தது. இவர் வீட்டுக் காவலில் 15 ஆண்டுகள் கழித்துள்ளார்.

இந்தோசீனா

இந்தோசீனா நாட்டின் முதல் அதிபர் சுகர்ணோ, இராணுவ ஆட்சித் தலைவர் சுகர்தோவால், 1967இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் 1977இல் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த இராணுவத் தலைவர் முகமது ஜியாவுக் ஹல், பிரதமர் பதவியிலிருந்த சுல்பிக்கார் அலி பூட்டோவை நீக்கி, வீட்டுக் காவலில் வைத்தனர். பின்னர் 1979இல் நீதிமன்றம் புட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது. நவாஸ் செரிப், இம்ரான் கான் போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் பெர்வேஸ் முஷாரஃப்பால், பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

கலீலியோ கலிலி, சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற உண்மையை, கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை வெளிபடுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையின் ஆணையின் பேரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

வீட்டுக் காவல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சிலர்வீட்டுக் காவல் மேற்கோள்கள்வீட்டுக் காவல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நம்பி அகப்பொருள்முத்தரையர்தங்கம்பத்ம பூசண்தேவ கௌடாமகரம்தமன்னா பாட்டியாசாக்கிரட்டீசுஇல்லுமினாட்டிஜெயம் ரவிபகத் சிங்தமிழ் இலக்கணம்சென்னை உயர் நீதிமன்றம்தசாவதாரம் (இந்து சமயம்)கங்கைகொண்ட சோழபுரம்முத்துராஜாவேதநாயகம் சாஸ்திரியார்மாதம்பட்டி ரங்கராஜ்காவிரிப்பூம்பட்டினம்போக்குவரத்துசத்திமுத்தப் புலவர்கொன்றைதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்அணி இலக்கணம்நெசவுத் தொழில்நுட்பம்குணங்குடி மஸ்தான் சாகிபுபால கங்காதர திலகர்வே. செந்தில்பாலாஜிஏக்கர்கண்ணாடி விரியன்சப்ஜா விதைசேக்கிழார்இந்தியன் (1996 திரைப்படம்)மருது பாண்டியர்போக்கிரி (திரைப்படம்)அகரவரிசைகுகேஷ்புறப்பொருள்அன்னம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்எஸ். ஜானகிஅகத்தியர்தமிழ்நாடு காவல்துறைமாநிலங்களவைசிவனின் தமிழ்ப் பெயர்கள்பேகன்சுற்றுச்சூழல்சே குவேராபத்துப்பாட்டுதலைவி (திரைப்படம்)திருமூலர்அண்ணாமலையார் கோயில்இலட்சம்முகம்மது நபிதைப்பொங்கல்கணினிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்பள்ளிக்கூடம்திராவிடர்குப்தப் பேரரசுஎழுத்து (இலக்கணம்)அண்ணாமலை குப்புசாமிசீரகம்திருவள்ளுவர்நாயன்மார்தினைநாழிகைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்உயர் இரத்த அழுத்தம்தமிழர் அளவை முறைகள்தமிழ் இலக்கண நூல்கள்திருநீலகண்ட நாயனார்சொக்கத்தங்கம் (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சித்தர்திருமலை நாயக்கர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மலைபடுகடாம்🡆 More