ஒத்தாசைப் பக்கம்

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள தலைப்பைச் சேர் என்பதை அழுத்துங்கள்.

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:HD
WP:HELP
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

« பழைய உரையாடல்கள்
தொகுப்பு
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |14|15|16


கட்டுரை உள்ளிணைப்புக் கருவி

இந்தக் கருவி Source Editing-இல் செயல்படுகிறது. இதை Visual Editing-லும் பயன்படுத்த இயலுமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 04:37, 23 திசம்பர் 2023 (UTC)

எனது ஊர் கல்வெட்டு வரலாறு எழுத வழிகாட்டவும்

எனது ஊர் கல்வெட்டு வரலாறு எழுத வழிகாட்டவும் மருதநாடன் (பேச்சு) 14:05, 1 சனவரி 2024 (UTC)

சமிக்ஞை

சமிக்ஞை எனும் சொல்லானது சைகை, குறி எனப் பொருள்படும் (விக்சனரி). சமிக்ஞை என்பது தனித்தமிழ்ச் சொல்லா? அல்லது வடமொழிச் சொல்லா? மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:01, 9 சனவரி 2024 (UTC)

தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்

பகுப்பு பேச்சு:தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள் துப்புரவு செய்வது குறித்து கேட்டுள்ளேன் உழவன் (உரை) 16:02, 13 சனவரி 2024 (UTC)

உங்கள் பரிந்துரையைத் தருக

பகுப்பு பேச்சு:உண்மைத் திரைப்படங்கள் உழவன் (உரை) 02:34, 18 சனவரி 2024 (UTC)

ஒத்தாசைப் பக்கம் Y:பேச்சுப்பக்கத்தில், பெயர் மாற்றலுக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. உழவன் (உரை) 01:58, 20 சனவரி 2024 (UTC)

வார்ப்புரு:கடல்வாழ் உயிரினங்கள்

வார்ப்புரு:கடல்வாழ் உயிரினங்கள் எந்த வார்ப்புருவில் உள்ளவை பொதுவான உயிரிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் இதில் எழுத இயலும். இது போன்று எந்த ஒரு வகைப்பாட்டியல் தன்மையும் இல்லாமல் இப்படியான வார்ப்புருக்களை இருக்கலாமா? இதனை உருவாக்கியவர் கைப்பாவை கணக்கு என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளார். முறையான விக்கிவடிவம் இருப்பதால் மட்டுமே இதனை பேணுதல் நன்றா? உழவன் (உரை) 07:14, 23 சனவரி 2024 (UTC)

தலங்கள் <> தளங்கள்

தலங்கள், தளங்கள் - இவற்றில் எது சரியானது? AntanO (பேச்சு) 08:21, 4 பெப்பிரவரி 2024 (UTC)

    பகுப்பு:இராஜஸ்தானில் உள்ள சுற்றுலாத் தளங்கள் என்பதிலுள்ள தளங்கள் என்பது தலங்கள் என்று இருக்கவேண்டும். ஆனால், தலம் என்பது தனித்தமிழ் அன்று. ஸ்தலம் எனும் வடமொழிச் சொல், தமிழில் தலம் என அழைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது! பொருத்தமான சொல்லை பயன்படுத்த வேண்டும் எனும் எண்ணம் என்னுள் நீண்ட காலமாக உள்ளது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 4 பெப்பிரவரி 2024 (UTC)
    இந்து சமயத்தில் holy place என்பதை புண்யஸ்தலம் என்பர். இதனை புண்ணியத்தலம் என தமிழ்ப்படுத்தினர். காசி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களை புண்ணியத்தலங்கள் அல்லது புண்ணியத் தலங்கள் என எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் ஒரு மரம் சிறப்பாக கருதப்படும். அந்த மரமும் அங்கிருக்கும். எடுத்துக்காட்டாக வன்னி மரம், புன்னை மரம் ஆகியன. இதனை ஸ்தல விருட்சம் என்றழைத்தனர். இப்போது தல விருட்சம் என தமிழ்ப்படுத்தியுள்ளனர்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:54, 4 பெப்பிரவரி 2024 (UTC)
      தளம் என்பது இடத்தைக் குறிக்கும் அல்லவா? எ.கா: வீட்டின் மேல் தளம். மேலும் ஆ.வி பகுப்பிடலில் Tourist attractions in India, Tourist attractions in Rajasthan என்றுள்ளது. எனவே, இந்தியாவில் சுற்றுலாப்பயணி ஈர்ப்புக்கள் என்றவாறு பெயரிடல் பல இடங்களையும் உள்ளடக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் அல்லவா? ஏனென்றால், இங்கு நகர். வழிபாட்டிடம், கோட்டை உட்பட்ட பலவும் உள்ளடங்குகின்றன. தல விருட்சம் தல மரமானால் இன்னும் சிறப்பு. --AntanO (பேச்சு) 10:48, 4 பெப்பிரவரி 2024 (UTC)

பகுப்பில் தலைப்பு மாற்றம் செய்ய பரிந்துரைக்கவும்

பகுப்பு பேச்சு:போலி அறிவியல் என்ற பக்கத்தில் உங்களது முன்மொழிவுகளைத் தாருங்கள். உழவன் (உரை) 13:13, 12 பெப்பிரவரி 2024 (UTC)

கட்டுரை மீளமைக்க உதவி

ஆர்த்தி அகர்வால் இந்தக்கட்டுரையானது மொழிபெயர்ப்பில் ஆர்த்தி அகர்வால்(நடிகை) இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தை மாற்றி பதிப்பிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டுரையை மீளமைக்க முடியாததால் புதியதாகவே உருவாக்கியுள்ளேன். பழைய கட்டுரையை மீளமைக்க முடியுமா? வேறென்ன வழிகள் உண்டென்று கூற முடியுமா??

  1. ஆர்த்தி அகர்வால் கட்டுரையை மீளமைத்துள்ளேன். இக்கட்டுரையில் மேற்கொண்டு செய்யவேண்டியது எதுவுமில்லை.
  2. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்தது, Arti Agrawal எனும் கட்டுரையை. கவனியுங்கள் அக்ரவால்; அகர்வால் அன்று.
  3. நீங்கள் மொழிபெயர்த்த உள்ளடக்கத்தை பயனர்:பிரயாணி/மணல்தொட்டி எனும் பக்கத்தில் இட்டுள்ளேன். *ஆர்த்தி அக்ரவால்* எனும் புதிய பக்கத்தை ஆரம்பித்து, இந்த மணல்தொட்டியில் உள்ள உள்ளடக்கத்தை புதிய பக்கத்தில் இட்டு, பதிப்பிடுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 14 பெப்பிரவரி 2024 (UTC)

கட்டுரைத் தலைப்பில் ஐயம்

வணக்கம், கட்டுரைத் தலைப்புகளில் ஒரு பொதுவான வடிவம் இருப்பது நல்லது. விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு எனும் பக்கத்தில் சில விதிகள் உள்ளன. ஆனால் பின்வரும் சில கட்டுரைகளில் எந்த மாதிரியான வழக்கத்தினைப் பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனவே இது குறித்தான தெளிவு உள்ள விக்கிப்பீடியர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இதன் மூலம் கட்டுரைகளைத் துப்புரவு செய்வதில் என் போன்றவர்களுக்கு தெளிவு கிடைக்கும். நன்றி உதாரணக் கட்டுரைகள்:

-- ஸ்ரீதர். ஞா (✉) 08:42, 15 பெப்பிரவரி 2024 (UTC)

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி -பக்கத்தை நீக்கியது தொடர்பாக

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியை பற்றிய கட்டுரையை எழுதியிருந்தேன். அதற்கான சான்றுகள் கொடுக்கப்பட்டிருந்தது. கூடுமானவரை விதிகளை பின்பற்றி எழுதி இருந்தேன். அதன் நீக்கம் குறித்து தெளிவு வேண்டும். எதன் காரணமாக கட்டுரை நீக்கப்பட்டது?@Sangeethkumar07 Sangeethkumar07 (பேச்சு) 06:06, 19 பெப்பிரவரி 2024 (UTC)

en:Template:Pending film தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் படங்களுக்கு இந்த வார்ப்புழுவை பட்டியலில் ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றனர். இதனை இறக்குமதி எவரேனும் ஒருவர் செய்து தருக. முன்கூட்டியே நன்றி! ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 17:05, 19 பெப்பிரவரி 2024 (UTC)

Cite-Web வார்ப்புருவில் தமிழாக்கம்

வார்ப்புரு:Cite web வார்ப்புருவில் இதுவரை பார்க்கப்பட்ட நாள் என்றிருந்தது தற்போது 'Retrieved' என மாறியுள்ளது. இது நிர்வாகிகளால் மட்டுமே தொகுக்கக்கூடியதாகக் காக்கப்பட்டுள்ளது. இதனை மீளமைத்து மீண்டும் தமிழில் வர ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். பயன்பாட்டு எ.கா: கொக்குத்தொடுவாய் --சிவகோசரன் (பேச்சு) 14:07, 22 பெப்பிரவரி 2024 (UTC)

இதை en:Template:Infobox religious text வார்ப்புரு:Infobox religious text தமிழில் புதுப்பித்து தர வேண்டுகிறேன். எவரேனும் செய்து உதவுங்கள். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 00:08, 28 பெப்பிரவரி 2024 (UTC)

வார்ப்புரு:தொகுக்கப்படுகிறது

வார்ப்புரு பேச்சு:In use என்பதில் உங்களது எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். இது முக்கியம். ஏனெனில், பயனர் ஒருவர், பிறரின் பதிவுகள் இல்லாமல், தான் எண்ணியபடி ஒரு கட்டுரையை உருவாக்க இது உதவும். இவ்வார்ப்புரு நீக்கிய பின்பு பிறர் மேம்படுத்துவதே சரியானது. இது இருக்கும் போதே இதனை நீக்குவது, சரியில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு தனிநபர் உரிமை தருவது இவ்வார்ப்புரு. எனவே, கால எல்லையையும் முடிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், ஒவ்வொரு கட்டுரைக்கும் பேச்சு:கிளினசு லோடோய்டேசு இதுபோல எழுத வேண்டிய நிலை எழுகிறது. --உழவன் (உரை) 02:49, 13 மார்ச்சு 2024 (UTC)

    உங்கள் விருப்பப்படி தொகுக்க உங்கள் மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். இரு மணித்தியாலங்களில் தொகுக்க முடியாவிட்டால் எதற்கு ஆரம்பிக்கிறீர்கள்? ஏன் இந்த அவசரம்? தயவுசெய்து உங்கள் மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள்.--AntanO (பேச்சு) 13:43, 13 மார்ச்சு 2024 (UTC)

மொத்த எண்ணிக்கை விவரம்

வார்ப்புரு:Unreferenced இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கை அளவு தேவைப்படுகிறது. எங்கு பார்க்கவேண்டும்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 18 மார்ச்சு 2024 (UTC)

நான் தேடியபோது, அதிகபட்ச display count 500 தான் பார்க்க இயன்றது. இதனை 5000 என மாற்றுவது எவ்வாறு? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 18 மார்ச்சு 2024 (UTC)

@Kanags: மிக்க நன்றி! தெரிந்துகொண்டேன். உரலிக்குச் சென்று limitஐ மாற்றிக்கொள்ள வேண்டும். 5000 என்பதுதான் அதிகபட்சம் போன்று தெரிகிறது. 10000, 6000 ஆகியன முயற்சி செய்து பார்த்தேன். எடுத்துக்கொள்ளவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:06, 18 மார்ச்சு 2024 (UTC)

பெருநகர பேராலயம் அல்லது உயர்மறைமாவட்ட பேராலயம்? - Metropolitan Cathedral

பேச்சு:புனித மேரி பெருநகர பேராலயம், சங்கனாச்சேரி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 01:45, 26 மார்ச்சு 2024 (UTC)

வடநடு சீனா

வடநடு சீனா என்ற கட்டுரையில் புவிக்குறியீடுகளை சீர் செய்து தருக. கண்டு கற்றுக் கொள்கிறேன். உழவன் (உரை) 06:18, 30 மார்ச்சு 2024 (UTC)

விக்கித்தரவு

தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை தவறாமல் விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள். விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் என்பதில் 9, 15 ஆகிய விளக்கப்படங்கள் உங்களுக்கு உதவும். காண்க: வடநடு சீனா, ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:26, 30 மார்ச்சு 2024 (UTC)

வரைபட வழு

பேச்சு:கபாரவ்சுக்கு தகவற்பெட்டியின் வரைபட வழு களைவது எப்படி? உழவன் (உரை) 06:28, 30 மார்ச்சு 2024 (UTC)

கட்டுரையை மேம்படுத்த விழைகிறேன்

விக்கிப்பிடியா விதிகளின் படி 'புதுயுகன்' கட்டுரையை மேம்படுத்த விழைகிறேன். உதவும் மூல பக்கங்கள் யாவை என்று உதவுங்கள். நன்றி Sai160221 (பேச்சு) 10:28, 4 ஏப்பிரல் 2024 (UTC)

ஜெயப்பிரதா அல்லது ஜெயபிரதா எது சரி?

செம்மைப்படுத்துதல் திட்டத்தின் மூலம் ஜெயபிரதா என்பதை மொழிபெயர்த்து வருகிறேன். இதனின் ஜெயபிரதா தற்போதைய கட்டுரை தலைப்பு என்று உள்ளது. எனக்கு ஜெயப்பிரதா/ஜெயபிரதா எது சரி? என்பதில் குழப்பமாக உள்ளது. எவரேனும் உதவுக ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:17, 6 ஏப்பிரல் 2024 (UTC)

தெலுங்கு மற்றும் பெரும்பான்மை மொழியிலுள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளில் அவரது பெயர், ஒரு சொல்லாகவுள்ளதால் தமிழிலும் ஜெயப்பிரதா என்று ஒரே சொல்லாகவே வரும் என்பது எனது கருத்து. ஜெயப் பிரதா எனப் பிரிந்து வராது.--Booradleyp1 (பேச்சு) 09:44, 6 ஏப்பிரல் 2024 (UTC)

    ஆம், ஒரு சொல்லாகவே வர வேண்டும். ஆங்கில மொழியில் பெரும்பாலான இந்தியப் பெயர்களை இரு சொற்களாகவே எழுதுவார்கள். ஜெயப்பிரதா தான் சரியானது.--Kanags \உரையாடுக 12:04, 6 ஏப்பிரல் 2024 (UTC)
    @Sriveenkat: எனது பரிந்துரையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். @Booradleyp1 and Kanags: ஆகியோரின் கருத்துக்களைப் பார்த்த பிறகு, மீண்டும் ஆராய்ந்து பார்த்ததில், அவர்கள் சொல்வதுவே சரி எனப் புரிந்தது. இருவருக்கும் நன்றி! ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை மட்டும் பார்த்து எனது முடிவைச் சொல்லியிருந்தேன். 'ஒருவர் அவர் சார்ந்த மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்' என்பதனையும் கவனிக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன். இதைத் தவிர்த்து, மன்மத லீலை எனும் தமிழ்த் திரைப்படத்தில் அவரின் பெயர் ஜெயபிரதா என title cardஇல் இருப்பதால், ஜெயபிரதா எனும் தலைப்பிலிருந்து ஜெயப்பிரதா எனும் கட்டுரைக்கு வழிமாற்று தர பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:23, 6 ஏப்பிரல் 2024 (UTC)

ஈழப்போர் எதிர்ப்புப் போராட்டங்கள் கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

ஈழப் போர் / இலங்கை உள்நாட்டுப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பான எதிர்ப்புப் போராட்டங்கள் பகுப்பில் உள்ளவற்றை கலைக்களஞ்சியத்திற்கேற்ப முறையாக தொகுக்க வேண்டும். தற்போதுள்ள நிலை கலைக்களஞ்சியமற்று (சொந்தக் கருத்து, உசாத்துணைற்று) உள்ளது. கட்டுரைகளை ஒன்றாக்கியதும், அக்கட்டுரைகளை நீக்கிவிடலாம். ~AntanO4task (பேச்சு) 04:13, 8 ஏப்பிரல் 2024 (UTC)

புலம்பெயர் தமிழர் கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

புலம்பெயர் தமிழர் தொடர்பான கட்டுரைகளை புலம்பெயர் தமிழர் கட்டுரையுடன் ஒன்றிணைக்க வேண்டும். உலக நாடுகளில் தமிழர் என்ற பகுப்பில் உள்ள பல கட்டுரைகள் கலைக்களஞ்சியமற்று (சொந்தக் கருத்து, உசாத்துணைற்று) உள்ளன. கட்டுரைகளை ஒன்றாக்கியதும், அக்கட்டுரைகளை நீக்கிவிடலாம். எ.கா: கயானாத் தமிழர் - சொந்த ஆய்வாகவும், உசாத்துணையற்றும் உள்ளது. ~AntanO4task (பேச்சு) 04:21, 8 ஏப்பிரல் 2024 (UTC)

தமிழாக்கம்

இரண்டு கூற்றுகள் தொடர்பாக பயனர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்கிறேன்.

அ. கட்டுரையில் பெயர் வைக்கும் போது,

  1. அதில் வடமொழி எழுத்துக்கள் இருக்கலாமா? தவிர்ப்பது நலமா? (எடுத்துக்காட்டாக யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்)
  2. ஆங்கில பெயரை தமிழில் வைப்பது சிறந்தது? மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஃபிளாஷ் டிரைவ் என்பது தகவல் சேமிப்பான் என்று இருக்க வேண்டுமா?
  3. தலைப்புகளில் புள்ளிகள் தேவையா? எடுத்துக்காட்டாக IKEA என்ற அதிகாரபூர்வ பெயர் ஐ.கே.இ.ஏ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  4. இலத்தீன் பெயர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டுமா (எடுத்துக்காட்டாக Panthera tigris )
  5. சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் பெயர்களில் ஒருமுகத்தன்மை இல்லை. எடுத்துக்காட்டாக:
  • சுக்கோய் சு-24 (சுகோய் எழுத்துப்பிழை)
  • சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ (புள்ளிகள் உள்ளது)
  • சுகோய் எஸ்யு-30

இவை கூகுளை தமிழாக்கத்தை விளைவாக அல்லது எழுதிய பயனர்கள் தெரியாமல் இவாறு வைத்திருக்கலாம்.

இவை அனைத்தும் திருத்தப்படலாமா? இதற்கு ஏதேனும் சிறப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டுமா?

ஆ. இரண்டாவது, வார்புருக்களில் (infobox)

  1. பல சொற்கள் தமிழில் மொழி பெயர்க்காமல் ஆங்கிலத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக வார்ப்புரு:Aircraft specs
  2. ஆங்கிலத்தில் உள்ளதில் சில அளவுருக்கள் (parameters) இல்லை. எடுத்துக்காட்டாக வார்ப்புரு:Company
  3. பொதுவான ஒரு கருத்து. convert வார்புருவில் சில அலகுகள் தமிழில் உள்ளன (எடுத்துக்காட்டாக அங்குலம், அடி) ஆனால் மற்ற பெரும்பாலான அலகுகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது பல கட்டுரைகளில் பயன்படுத்தப்படுவதினால், அலகுகளை ஒருமித்த தன்மைக்காக மற்றும் புரிதலுக்காக முழுவதும் தமிழில் இடலாமா?

நன்றி! Magentic Manifestations (பேச்சு) 15:09, 9 ஏப்பிரல் 2024 (UTC)

விக்கிப்பீடியா:பெயரிடல்_மரபு#செயலிகள்/ மென்பொருட்கள் விக்கியில் பின்பற்றப்படுகிறதா?

விக்கிப்பீடியா:பெயரிடல்_மரபு#செயலிகள்/ மென்பொருட்கள் விக்கியில் பின்பற்றப்படுகிறதா? உதாரணமாக: கூகுள் நிகழ்படங்கள், அழுகிய தக்காளிகள் போன்ற ஒரு சில கட்டுரைகளில் இது பின்பற்றப்படுவதில்லை. ஏன்? சில நிர்வாகிகளும் இதை ஏற்றுக் கொள்கின்றனர் என்று எண்ணுகிறேன் காண்க பேச்சு:அழுகிய தக்காளிகள். கையேடில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்றால் அழுகிய தக்காளிகள் கட்டுரை ரோட்டன் டொமாட்டோஸ் அல்லது ரோட்டன் டொமாட்டோசு என்றும், கூகுள் நிகழ்படங்கள் கட்டுரை கூகுள் வீடியோஸ் அல்லது கூகுள் வீடியோசு என்றும் இருக்க வேண்டும். இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல்! எவரேனும் பதிலளித்தால் நன்றாக இருக்கும். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 02:47, 15 ஏப்பிரல் 2024 (UTC)

    பெயரிடல் மரபுப்படி மாற்றலாம். அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் உரையாடி மாற்றுக் கருத்துஇல்லை எனில் மாற்றுவோம். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அதன்படி பெயரிடல் மரபில் இற்றைசெய்யலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:14, 15 ஏப்பிரல் 2024 (UTC)

கட்டுரைகளில் புத்தக ISBN எண்ணை தரவாக சேர்ப்பது எப்படி

கட்டுரைகளில் புத்தகங்களை மேற்கோளாக கொடுக்கும் போது, ஐஎஸ்பிஎன் எண்ணை எப்படி தரவாக (Source) பயன்படுத்துவது... Malaramuthan (பேச்சு) 06:58, 16 ஏப்பிரல் 2024 (UTC)

    வணக்கம், வெறுமனே ISBN எண்ணை மட்டும் சேர்க்காமல் பின்வருமாறு சேருங்கள்.
    நீங்கள் காட்சித் தொகுப்பு (visual edit) பயன்படுத்தினால் ctrl+shift+k அழுத்தவும், கைமுறை --> நூல்--> பின்னர் உங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து மேற்கோளாக சேர்க்கலாம்.
    Source edit எனில் பின்வருமாறு கொடுக்க வேண்டும். (தகவல்களை பொருத்தமாக மாற்றிக் கொள்ளவும்)
    {{cite book|author=Deepak Mahadeo Rao Wankhede|title=Geographical Thought of Doctor B.R. Ambedkar|url=https://books.google.com/books?id=1QT2oec2u3oC&pg=PA6|year=2009|publisher=Gautam Book Center|isbn=978-81-87733-88-1|pages=6–}} ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:35, 16 ஏப்பிரல் 2024 (UTC)

ஒப்பான தமிழ்ச்சொல்

@Kanags:, @கி.மூர்த்தி:, @Paramatamil:, Sociable number (en:Sociable number), Untouchable number (en:Untouchable number) இவ்விரண்டிற்கும் பொருத்தமான தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:50, 16 ஏப்பிரல் 2024 (UTC)

சுஷ்மிதா சென் - Pageantry - தமிழாக்க உதவி

வணக்கம், நான் தற்போது சுஷ்மிதா சென் என்ற கட்டுரையைச் செம்மைப்படுத்தி வருகிறேன், இதை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் போது ஒரு பகுதியின் தலைப்பை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை, அது Pageantry என்ற சொல். தற்போது தற்காலிகமாக ஒப்பனை என்று எனது மணல்தொட்டியில் மொழிபெயர்த்துள்ளேன், அதற்கு makeup என்று பொருள். சொற்குவை அகராதியில் வண்ணமிகு காட்சி, வண்ணமிகு ஊழல் காட்சி, ஒப்பனை அணி வகுப்பு, காட்சி அணிவகுப்பு, பகட்டுக் காட்சி, ஒப்பனைக் காட்சி, ஒப்பனை அணிவகுப்பு போன்ற சொற்கள் உள்ளன தலைப்புக்கு பொருத்தமான சொல்லை தெரிவு செய்து உதவுக. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:44, 20 ஏப்பிரல் 2024 (UTC)

படிமம் பதிவேற்ற உதவி தேவை

இப்படம் குறித்த படிமத்தை ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு பதிவேற்ற உதவி தேவை. இப்படிமம் தற்போது தமிழ் விக்கியில் பயன்படுத்த இயலாமல் உள்ளது. சுப. இராஜசேகர் (பேச்சு) 16:11, 23 ஏப்பிரல் 2024 (UTC)

Tags:

ஒத்தாசைப் பக்கம் கட்டுரை உள்ளிணைப்புக் கருவிஒத்தாசைப் பக்கம் எனது ஊர் கல்வெட்டு வரலாறு எழுத வழிகாட்டவும்ஒத்தாசைப் பக்கம் சமிக்ஞைஒத்தாசைப் பக்கம் தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்ஒத்தாசைப் பக்கம் உங்கள் பரிந்துரையைத் தருகஒத்தாசைப் பக்கம் வார்ப்புரு:கடல்வாழ் உயிரினங்கள்ஒத்தாசைப் பக்கம் பகுப்பில் தலைப்பு மாற்றம் செய்ய பரிந்துரைக்கவும்ஒத்தாசைப் பக்கம் கட்டுரை மீளமைக்க உதவிஒத்தாசைப் பக்கம் கட்டுரைத் தலைப்பில் ஐயம்ஒத்தாசைப் பக்கம் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி -பக்கத்தை நீக்கியது தொடர்பாகஒத்தாசைப் பக்கம் en:Template:Pending filmஒத்தாசைப் பக்கம் Cite-Web வார்ப்புருவில் தமிழாக்கம்ஒத்தாசைப் பக்கம் en:Template:Infobox religious textஒத்தாசைப் பக்கம் வார்ப்புரு:தொகுக்கப்படுகிறதுஒத்தாசைப் பக்கம் மொத்த எண்ணிக்கை விவரம்ஒத்தாசைப் பக்கம் பெருநகர பேராலயம் அல்லது உயர்மறைமாவட்ட பேராலயம்? - Metropolitan Cathedralஒத்தாசைப் பக்கம் வடநடு சீனாஒத்தாசைப் பக்கம் வரைபட வழுஒத்தாசைப் பக்கம் கட்டுரையை மேம்படுத்த விழைகிறேன்ஒத்தாசைப் பக்கம் ஜெயப்பிரதா அல்லது ஜெயபிரதா எது சரி?ஒத்தாசைப் பக்கம் ஈழப்போர் எதிர்ப்புப் போராட்டங்கள் கட்டுரைகளை ஒன்றிணைத்தல்ஒத்தாசைப் பக்கம் புலம்பெயர் தமிழர் கட்டுரைகளை ஒன்றிணைத்தல்ஒத்தாசைப் பக்கம் தமிழாக்கம்ஒத்தாசைப் பக்கம் விக்கிப்பீடியா:பெயரிடல்_மரபு#செயலிகள் மென்பொருட்கள் விக்கியில் பின்பற்றப்படுகிறதா?ஒத்தாசைப் பக்கம் கட்டுரைகளில் புத்தக ISBN எண்ணை தரவாக சேர்ப்பது எப்படிஒத்தாசைப் பக்கம் ஒப்பான தமிழ்ச்சொல்ஒத்தாசைப் பக்கம் சுஷ்மிதா சென் - Pageantry - தமிழாக்க உதவிஒத்தாசைப் பக்கம் படிமம் பதிவேற்ற உதவி தேவைஒத்தாசைப் பக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பீனிக்ஸ் (பறவை)பழமுதிர்சோலை முருகன் கோயில்பனைகலம்பகம் (இலக்கியம்)வினைச்சொல்மீனம்சிறுதானியம்கண்டம்இன்குலாப்அவதாரம்முகுந்த் வரதராஜன்குறிஞ்சி (திணை)மனித மூளைவியாழன் (கோள்)இரசினிகாந்துதிருட்டுப்பயலே 2விபுலாநந்தர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அணி இலக்கணம்அழகிய தமிழ்மகன்அறிவியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்உணவுசாகித்திய அகாதமி விருதுதிருமுருகாற்றுப்படைபோக்கிரி (திரைப்படம்)வெந்தயம்மூலம் (நோய்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசிறுகதைஅகத்தியர்புறநானூறுஇராசேந்திர சோழன்பிரீதி (யோகம்)மாமல்லபுரம்செயற்கை நுண்ணறிவுகவலை வேண்டாம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இராமர்கல்விஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மாநிலங்களவைஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)திரிசாதூது (பாட்டியல்)நிணநீர்க்கணுர. பிரக்ஞானந்தாநந்திக் கலம்பகம்ஆந்திரப் பிரதேசம்பெண்களின் உரிமைகள்மக்களவை (இந்தியா)இந்திய வரலாறுமு. கருணாநிதிகுடும்ப அட்டைகுறுந்தொகைரத்னம் (திரைப்படம்)முத்தரையர்தொலைக்காட்சிபாரதிதாசன்விஷால்ஆசிரியர்கொடைக்கானல்ரச்சித்தா மகாலட்சுமிமாத்திரை (தமிழ் இலக்கணம்)குடும்பம்திருச்சிராப்பள்ளிவிருத்தாச்சலம்திருவிழாசயாம் மரண இரயில்பாதைரஜினி முருகன்முதுமலை தேசியப் பூங்காமரவள்ளிசிவபுராணம்இசைஐந்திணைகளும் உரிப்பொருளும்அறுபது ஆண்டுகள்நாடகம்🡆 More