மாடப்புறா

மாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும்.

மாடப்புறா
மாடப்புறா
ஜெர்மனியில் ஒரு ஆண்புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Columba
இனம்:
C. livia
இருசொற் பெயரீடு
Columba livia
Gmelin, 1789
மாடப்புறா
     approximate native range     introduced non-native populations

இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.

காட்டு மாடப் புறாக்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும், ஒவ்வொரு இறக்கையிலும் இரண்டு கருப்புப் பட்டைகள் தெளிவாகத் தெரியும். அதேசமயம் வீட்டு மற்றும் வீட்டிலிருந்து காட்டுக்கு வந்த புறாக்கள் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபடுகின்றன. ஆண் பறவைகளுக்கும் பெண் பறவைகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த இனம் பொதுவாக ஒரு வாழ்க்கைத் துணையைக் கொண்டது. இவை இரு முட்டைகளை இட்டு, ஆணும் பெண்ணும் மாறிமாறி அடைகாக்கும்.

இதன் வாழ்விடங்களில் பல்வேறு திறந்த மற்றும் அரை-திறந்த சூழல்கள் அடங்கும். இந்தப் புறாக்கள் பாறை இடுக்குகள், கோபுரங்கள், மாடங்கள் போன்றவற்றில் உள்ள பொந்துகளில் கூடமைத்து முட்டையிட்டடு இனப்பெருக்கம் செய்கிறது. முதலில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆசியாவில் காடுகளாகக் காணப்பட்ட புறாக்கள் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பரவியுள்ளன. இந்த இனங்கள் ஏராளமாக உள்ளன, ஐரோப்பாவில் மட்டும் 17 முதல் 28 மில்லியன் மாடப் புறாக்கள் மற்றும் உலகளவில் 120 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாடப்புறா
வீட்டுப் புறாக்கள்

மாடப் புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்தே வீட்டுப் புறாக்கள் தோன்றின. இவை தவிர அழகுக்காக வளர்க்கப்படும் பல வகை ஆடம்பரப் புறாக்களும் உள்ளன.

கிளையினங்கள்

இதில் ஒன்பது கிளையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:

  • C. l. livia Gmelin, JF, 1789 – மேற்கு, மத்திய ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா முதல் மத்திய ஆசியா வரை
  • C. l. gymnocycla Gray, GR, 1856 – மொரிட்டானியா மற்றும் செனகல் தெற்கு மாலி மற்றும் கானா
  • C. l. targia Geyr von Schweppenburg, 1916 – வடக்கு மாலி மற்றும் தெற்கு அல்ஜீரியா முதல் மத்திய சூடான் வரை
  • C. l. dakhlae Meinertzhagen, R, 1928 – மேற்கு எகிப்து
  • C. l. schimperi Bonaparte, 1854 – கிழக்கு எகிப்து, தெற்கு சூடான் மற்றும் எரித்திரியா
  • C. l. palaestinae Zedlitz, 1912 – சினாய் தீபகற்பம் (எகிப்து) முதல் சிரியா மற்றும் மேற்கு, தெற்கு அறபுத் தீபகற்பம் வரை
  • C. l. gaddi Zarudny & Loudon, 1906 – கிழக்கு துருக்கி முதல் உசுபெக்கிசுத்தான் மற்றும் மேற்கு, வடக்கு ஆப்கானித்தான்
  • C. l. neglecta Hume, 1873 – மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் முதல் இமயமலை வரை
  • C. l. intermedia Strickland, 1844 – தென் இந்தியாவிலும் இலங்கையிலும்

வாழ்க்கை சுழற்சி நிலைகள்

மேற்கோள்

Tags:

புறா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அவதாரம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்வாட்சப்செக்ஸ் டேப்சிறுதானியம்கட்டபொம்மன்மு. கருணாநிதிகுழந்தை பிறப்புசூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்விநாயகர் அகவல்பிள்ளைத்தமிழ்கௌதம புத்தர்பறவைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பால்வினை நோய்கள்ஐம்பூதங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்மலையாளம்இளங்கோவடிகள்பூனைநிதி ஆயோக்பெண்ரோகிணி (நட்சத்திரம்)திருச்சிராப்பள்ளிவணிகம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இரட்சணிய யாத்திரிகம்வெ. இராமலிங்கம் பிள்ளைசீனிவாச இராமானுசன்சுரதாஉரிச்சொல்யூடியூப்கணினிமேகக் கணிமைகரணம்திருமலை நாயக்கர்அக்பர்திருக்குறள்கன்னி (சோதிடம்)நம்ம வீட்டு பிள்ளைநவதானியம்விவேகானந்தர்தலைவி (திரைப்படம்)அகநானூறுஅரிப்புத் தோலழற்சிவேதநாயகம் பிள்ளைஆசிரியப்பாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஅருந்ததியர்தைப்பொங்கல்நரேந்திர மோதிகஞ்சாவௌவால்சித்ரா பௌர்ணமிமரவள்ளிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ்திவ்யா துரைசாமிஅய்யா வைகுண்டர்தாஜ் மகால்வைர நெஞ்சம்லிங்டின்முகம்மது நபிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்ஆயுள் தண்டனைகேழ்வரகுஅகரவரிசைசிவனின் தமிழ்ப் பெயர்கள்இந்தியாவில் பாலினப் பாகுபாடுசச்சின் (திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெரும்பாணாற்றுப்படைபயில்வான் ரங்கநாதன்பரிவர்த்தனை (திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்🡆 More