பேராலயம்

பேராலயம், மறைமாவட்டப் பேராலயம், மறைமாவட்டத் தலைமைக் கோவில் அல்லது கதீட்ரல் (cathedral, இலத்தீனிடமிருந்து பிரான்சியம் cathédrale.

கிரேக்க மொழியில் cathedra என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் மெற்றிறாசனக் கோவில் என்பது ஆயரின் தலைமைபீடம் அடங்கிய கிறித்தவத் தேவாலயம் ஆகும். இது ஓர் மறைமாவட்டம், கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் ஆயரின் தலைமை ஆலயமாகும். கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது. ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் இத்தாலி, கால், எசுப்பானியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.

பேராலயம்
São Paulo Cathedral, a representative modern cathedral built in Neo-Gothic style.
பேராலயம்
தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராலயம்
பேராலயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.

கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்களும், படிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. ஆயினும் அந்த இடங்களில் இருந்த மறைமாவட்டப் பேராலய கட்டிடங்கள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன; 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதிய பணித்தளங்களை தோற்றுவித்தன. மேலும் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்திருச்சபையின் ஆட்சிவட்டத்துள் பல புதிய மறைத்தூதுப் பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரில் பல்வேறு திருச்சபைகளுக்கான மறைமாவட்டப் பேராலயங்கள் இருக்கலாம்.

ஒரு பங்கு ஆலயம் தற்காலிகமாக மறைமாவட்டப் பேராலயமாக பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்டப் பதில் பேராலயம் (Pro-cathedral) என்று அழைக்கின்றனர். பேராயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிப்பீடம் உயர்மறைமாவட்ட பேராலயம் (Metropolitan cathedral) என அழைக்கப்படுகிறது. ஒரே மறைமாவட்டத்துக்குள்ளேயே ஒரே திருச்சபையின் இரண்டு ஆலயங்கள் ஒரே ஆயரின் ஆட்சிப்பீடமாக அமைந்திருக்கலாம். இவ்வகை ஆலயங்களில் ஒன்று மறைமாவட்டப் பேராலயம் எனவும் மற்றொன்று மறைமாவட்டப் துணை பேராலயம் (Co-cathedral) எனவும் அழைக்கப்படும்.

காட்சிக் கூடம்

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

பேராலயம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கதீட்ரல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆங்கிலிக்கம்ஆயர் (கிறித்துவ பட்டம்)இத்தாலிஇலத்தீன்எசுப்பானியாகத்தோலிக்க திருச்சபைகிரேக்கம் (மொழி)கிறித்தவத் தேவாலயம்பிரான்சிய மொழிமறைமாவட்டம்மெதடிசம்லூதரனியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மன்னர்களின் பட்டியல்முகலாயப் பேரரசுமேகக் கணிமைபிள்ளையார்முல்லைக்கலிபோக்குவரத்துவிஜயநகரப் பேரரசுதமிழ் எழுத்து முறைகொல்லி மலைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பிரசாந்த்முத்துராமலிங்கத் தேவர்தொழிலாளர் தினம்புற்றுநோய்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்தியப் பிரதமர்புலிராஜா ராணி (1956 திரைப்படம்)ஆயுள் தண்டனைமதுரை வீரன்நீர்விண்ணைத்தாண்டி வருவாயாபட்டினப் பாலைசேரன் (திரைப்பட இயக்குநர்)நீரிழிவு நோய்அடல் ஓய்வூதியத் திட்டம்யாதவர்ரச்சித்தா மகாலட்சுமிகுமரகுருபரர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்உடன்கட்டை ஏறல்அருந்ததியர்விஜய் வர்மாதமிழர் நிலத்திணைகள்மலையாளம்தூது (பாட்டியல்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தொல். திருமாவளவன்மங்கலதேவி கண்ணகி கோவில்மோகன்தாசு கரம்சந்த் காந்திகன்னி (சோதிடம்)வெப்பநிலைதொல்லியல்கல்விஇரட்டைக்கிளவிபறவைமலைபடுகடாம்வரலாற்றுவரைவியல்பணவீக்கம்காற்றுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மக்களவை (இந்தியா)பெயர்தமிழ்விடு தூதுகம்பராமாயணம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஐராவதேசுவரர் கோயில்சேக்கிழார்சச்சின் (திரைப்படம்)அகத்திணைசிவன்பாலின விகிதம்தமிழ் இலக்கியப் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைபுறப்பொருள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இயேசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பனிக்குட நீர்சதுரங்க விதிமுறைகள்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)முன்னின்பம்வேதம்சப்ஜா விதைதிராவிட மொழிக் குடும்பம்முள்ளம்பன்றிரோகிணி (நட்சத்திரம்)நன்னன்🡆 More