மறைமாவட்டம்

மறைமாவட்டம்(diocese) என்பது கிறித்தவத் திருச்சபைகளில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு ஆயரின் ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.

டயோசிஸ் (diocese) என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் மறைமாவட்டம் என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயரால் ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு பங்குதளங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டத்தின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், பேராயர் என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து மறைமாநிலம் என அழைக்கப்படுகின்றன.

ஒரு மறைமாவட்டத்தை நிறுவும் உரிமை திருத்தந்தைக்கே உரியது.

கத்தோலிக்க திருச்சபை சட்டம் 369, ஒரு மறைமாவட்டத்தை பின்வருமாறு விளக்குகின்றது. {{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்;

மக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், ஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவியியல் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆயினும் பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் வழிபாட்டு முறையால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள மறைமாவட்டங்கள் பல ஒரே எல்லைக்குள் திருத்தந்தையால் நிறுவப்படலாம்.

மறைமாவட்டம் என அழைக்கப்படாவிட்டாலும் பின்வருபவையும் மறைமாவட்டத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றது:

  • எல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சி வட்டம் அல்லது எல்லை சார்ந்த ஆதீனம் - இவை எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ள இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் கண்காணிப்பு ஒரு மேல்நரிடம் அல்லது ஆதீனத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டும்; அதை, அதன் உரிய மேய்ப்பராக, ஒரு மறைமாவட்ட ஆயரைப்போல் அவர் ஆள்கிறார்.
  • திருத்தூதராக மறைஆட்சி வட்டம் அல்லது திருத்தூதராக ஆளுகை வட்டம் - இவை இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதராகப் பதில் ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.
  • நிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம் - சிறப்பான மற்றும் தனிப்பட்ட கனமான காரணங்களுக்காக, திருத்தந்தையால் ஒரு மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும். அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் ஆளுகின்ற ஒரு திருத்தூதரக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.

மேற்கோள்கள்

Tags:

ஆயர் (கிறித்துவ பட்டம்)கிறித்தவத் திருச்சபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மோகன்தாசு கரம்சந்த் காந்திபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பிள்ளைத்தமிழ்திருவிளையாடல் புராணம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அகத்தியர்பதினெண் கீழ்க்கணக்குநவதானியம்நிணநீர்க்கணுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சிவாஜி (பேரரசர்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மீனா (நடிகை)வீரமாமுனிவர்காம சூத்திரம்ஐக்கிய நாடுகள் அவைஇந்திஇடமகல் கருப்பை அகப்படலம்மாணிக்கவாசகர்இலங்கையின் தலைமை நீதிபதிஅவுரி (தாவரம்)திருநங்கைவெ. இறையன்புதரணிதாவரம்பூக்கள் பட்டியல்தமிழ் இலக்கியம்குறிஞ்சிப் பாட்டுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ராதிகா சரத்குமார்ஜோதிகாதிருப்பூர் குமரன்கா. ந. அண்ணாதுரைகம்பராமாயணம்இயோசிநாடிசேரர்முல்லைப்பாட்டுசிவவாக்கியர்நந்திக் கலம்பகம்கல்லீரல்குறுந்தொகைஐந்திணைகளும் உரிப்பொருளும்கருத்தரிப்புஆகு பெயர்கருத்துகாற்றுமனித உரிமையூடியூப்வேதநாயகம் பிள்ளைதேஜஸ்வி சூர்யாபாரத ரத்னாதமிழ் எண்கள்கிளைமொழிகள்திராவிட மொழிக் குடும்பம்விநாயகர் அகவல்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இந்தியன் (1996 திரைப்படம்)கருக்காலம்பாண்டி கோயில்யாவரும் நலம்உத்தரகோசமங்கைபிரியா பவானி சங்கர்அறுபடைவீடுகள்முலாம் பழம்மணிமுத்தாறு (ஆறு)விண்டோசு எக்சு. பி.தமிழ் இலக்கணம்பறையர்தமிழர் அளவை முறைகள்தங்கம்சுகன்யா (நடிகை)நிதிச் சேவைகள்சாகித்திய அகாதமி விருதுஐங்குறுநூறுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)கில்லி (திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்🡆 More