பெரிங் கடல்: கடல்

பெரிங் கடல் (Bering Sea, உருசியம்: Бе́рингово мо́ре, ஒ.பெ Béringovo móre) அமைதிப் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும் சைபீரியாவிற்கும் இடையே உள்ள ஓர் கரையோரக் கடல் ஆகும்.

இது ஆழ்ந்த நீர்நிலையாகவும் பின்னர் கண்டத் திட்டுக்களின் மேலாக குறுகலான சாய்வில் எழும் குறைந்த ஆழமுள்ள நீர்நிலையாகவும் உள்ளது. உருசியாவின் முதலாம் பேதுருவின் கீழ் பணிபுரிந்து 1728ஆம் ஆண்டில் அலாஸ்காவைக் கண்டறிந்த டேனிய நாடுகாண் பயணி விட்டஸ் பெரிங் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

பெரிங் கடல்
பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம்
யூடிஎம் வீழலின் அகலாங்கு,நெட்டாங்குடன் பெரிங் கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்

பெரிங் கடலை அலாஸ்கா வளைகுடாவிலிருந்து அலாஸ்கா மூவலந்தீவு பிரிக்கின்றது. இதன் பரப்பளவு 2,000,000 சதுர கிலோமீட்டர்கள் (770,000 sq mi) ஆகும். இதன் கிழக்கிலும் வடகிழக்கிலும் அலாஸ்காவும், மேற்கில் கம்சாத்கா மூவலந்தீவும் உருசிய தொலைக்கிழக்கும் தெற்கில் அலாஸ்கா மூவலந்தீவும் அலூசியன் தீவுகளும் அமைந்துள்ளன; தொலைவடக்கில் பெரிங் நீரிணை, பெரிங் கடலை ஆர்க்டிக் பெருங்கடலின் சுக்ச்சி கடலுடன் இணைக்கிறது. பெரிங் கடலின் அங்கமான பிரிஸ்தல் வளைகுடா, அலாஸ்கா மூவலந்தீவை அலாஸ்காவிலிருந்துப் பிரிக்கின்றது.

பெரிங் கடலின் சுற்றுச்சூழல் ஐக்கிய அமெரிக்கா, உருசிய நாட்டெல்லைகளை உள்ளடக்கி உள்ளது; தவிரவும் கடலின் நடுப்பகுதி டோநட் குழி எனப்படும் பன்னாட்டு நீர்நிலையாகவும் உள்ளது. ). கடல் பனி,வானிலை, நீரோட்டங்களுக்கிடையேயான இடைவினைகள் இக்கடலின் சூழலை நிலைநிறுத்துகின்றன.

வரலாறு

பெரும்பாலான அறிவியலாளர்கள் மிகக் கடைசியான பனியூழிக் காலத்தில் கடல் மட்டம் மிகத் தாழ்ந்திருந்ததாகவும் இதனால் கிழக்கத்திய ஆசியாவிலிருந்து மனிதர்கள் வட அமெரிக்காவிற்கு நடையாகவே தற்போதுள்ள பெரிங் நீரிணை வழியாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கருதுகின்றனர். பிற விலங்குகளும் இருபுறமும் இடம்பெயர்ந்துள்ளன. இது பொதுவாக "பெரிங் நிலப்பாலம்" எனக் குறிப்பிடப்படுகின்றது. இதுவே அமெரிக்காக்களுக்குள்ளான முதல் மாந்த நுழைவாக அனைவரும் இல்லாதபோதும் பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்தாகும்.

குலாத் தட்டு அலாஸ்காவின் கீழே கீழமிழ்ந்த தொன்மையான புவிப்பொறைத் தட்டாகும். இத்தட்டின் சிறிய பகுதி பெரிங் கடலில் உள்ளது.

புவியியல்

பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம் 
பெரிங் கடலில் உள்ள கடலடிப் பள்ளங்களில் (submarine canyons) பெரிதானவை மட்டும் காட்டப்பட்டுள்ளன.

பரப்பு

பன்னாட்டு நீர்ப்பரப்பிற்குரிய அமைப்பு பெரிங் கடலின் எல்லைகளை இவ்வாறு வரையறுத்துள்ளது:

      தெற்கு: அலாஸ்கா மூவலந்தீவில் கபூச் புள்ளியிலிருந்து (54°48′N 163°21′W / 54.800°N 163.350°W / 54.800; -163.350) அலூசியன் தீவுகள் வழியாக்கமாண்டர் தீவுகளின் தென்முனைக்கும் தொடர்ந்து கம்சாத்காக்கும் வரையப்படும் நேர்கோடாகும்;இதில் அலாஸ்காவிற்கும் கம்சாத்காவிற்கும் இடையேயுள்ள அனைத்து குறுகிய நீர்நிலைகளும் உள்ளடங்கும்.

தீவுகள்

பெரிங் கடலில் உள்ளத் தீவுகள்:

  • பிரைபிலோஃப் தீவுகள் இதில் அலாஸ்காவின் புனித பவுல் தீவும் அடங்கும்
  • கமாண்டர் தீவுகளும் பெரிங் தீவும்
  • புனித இலாரன்சு தீவு
  • டயோமெடு தீவுகள்
  • கிங் தீவு, அலாஸ்கா
  • புனித மாத்யூ தீவு
  • கராகின்சுகி தீவு
  • நுனிவாக் தீவு
  • இசுலெட்ஜ் தீவு
  • அகமெஸ்டர் தீவு

வட்டாரங்கள்

பெரிங் கடலில் உள்ள வட்டாரங்களில்:

பெரிங் கடலில் 16 கடலடிப் பள்ளத்தாக்குகள் உள்ளன; இதில் உலகின் மிகப் பெரிய கடலடிப் பள்ளத்தாக்கான செம்சுகு கேன்யன் அடங்கும்.

பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம் 
உருசிய "ரூரிக்குகள்" பெரிங் கடலிலுள்ள புனித பவுல் தீவில் நங்கூரமிடுதல்; வடக்கிலுள்ள சுக்ச்சி கடலுக்கு கடற்பயணம் மேற்கோள்ள உணவையும் கருவிகளையும் ஏற்றுதல். லூயி கோரிசின் ஓவியம் - 1817.
பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம் 
வால்ரசுக்கள், பெரிங் கடல் பனிப்பாறைகளில், அலாஸ்கா, சூன் 1978. (மூலம்: NOAA)
பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம் 
நத்தை மீன், கிழக்கு பெரிங் கடற்பகுதியில் பிடிக்கப்பட்டது.
பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம் 
சிவப்பு கிங் நண்டு
பெரிங் கடல்: வரலாறு, புவியியல், சூழ்மண்டலம் 
பெரிங் கடலோரத்தில் ஹூப்பர் விரிகுடாவின் தெற்கேயுள்ள டுட்டகோக் பறவை சரணாலயத்தின் வான்காட்சி

சூழ்மண்டலம்

பெரிங் கடற்பகுதியில் உயிரினங்களின் முதன்மைப் பெருக்கத்திற்கு கண்டத்தட்டுப் பிரிவு முதன்மையான காரணியாகும். இந்த மண்டலத்தில், ஆழமில்லா கண்டத்திட்டு விரைவாக கீழிறங்குகும் பகுதி பசுமைவளையம் எனப்படுகின்றது. அலோசிய அடியில் குளிர்ந்த நீரிலிருந்து மேலெழும் பயிருணவு தொடர்ந்த அலைதாவரங்கள் உருவாக காரணமாக அமைகின்றது.

இரண்டாவது காரணமாக பருவகால கடற் பனிக்கட்டிகள் இளவேனிற்கால அலைதாவரங்களின் பெருக்கத்தைத் தூண்டுகிறது. பருவகால கடற் பனிக்கட்டி உருகுதல் உப்பு குறைந்த நீரை நடுப்பகுதிக்கும் பிற பகுதிகளுக்கும் பரப்புகின்றது. இதனால் ஏற்படும் படிப்படியான நிலைகளும் நீர்ப்பரப்பியல் விளைவுகளும் இனப்பெருக்கத்தை தூண்டுகின்றன. தவிரவும்பனிக்கட்டி பாசிகள் படர தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன.

பெரிங் கடல் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளதாக சான்றுகள் கிடைக்கின்றன. 1997 வேனிற்காலத்தில் சூடான நீரினால் குறைந்த ஆற்றல் கடற்பாசிகள் பெருகியதாக அறியப்படுகின்றது. நீண்ட கால கரிம ஓரிடதனிமங்களின் பதிகையை கொண்டு வரலாற்றுக் காலங்களிலிருந்தே பெரிங் கடலில் முதன்மை இனப்பெருக்கம் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; அம்புத்தலை திமிலங்களை இதற்கு சான்றாகக் கொள்ளலாம். கடந்த 50 ஆண்டுகளில் ஆண்டுக்கு முதன்மை இனப்பெருக்கம் 30–40% வரை குறைந்து வருகிறது. இதன்படி பெரிங் கடலின் தாங்கும் இருப்பளவு கடந்த காலத்தை விடக் குறைந்துள்ளதாக அறியப்படுகின்றது.

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பெரிங் கடல் வரலாறுபெரிங் கடல் புவியியல்பெரிங் கடல் சூழ்மண்டலம்பெரிங் கடல் காட்சியகம்பெரிங் கடல் மேற்கோள்கள்பெரிங் கடல் வெளி இணைப்புகள்பெரிங் கடல்அமைதிப் பெருங்கடல்அலாஸ்காஉருசியம்உருசியாவின் முதலாம் பேதுருகண்டத் திட்டுசைபீரியாடென்மார்க்விட்டஸ் பெரிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிவண்ணன்குணங்குடி மஸ்தான் சாகிபுஉயிர்மெய் எழுத்துகள்அதியமான் நெடுமான் அஞ்சிடங் சியாவுபிங்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்சுற்றுச்சூழல்சிலம்பரசன்பாண்டி கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)வாட்சப்மாதவிடாய்தமிழர் நிலத்திணைகள்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்உத்தராகண்டம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்அணி இலக்கணம்அண்டர் தி டோம்புங்கைஇசுலாமிய நாட்காட்டியோகம் (பஞ்சாங்கம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஹாட் ஸ்டார்ஏறுதழுவல்ரேஷ்மா பசுபுலேட்டிபட்டினத்தார் (புலவர்)முல்லை (திணை)காரைக்கால் அம்மையார்களவழி நாற்பதுசிட்டுக்குருவிகல்லணைநாடகம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஎகிப்துஉ. வே. சாமிநாதையர்இலக்கியம்சிவாஜி கணேசன்இரா. பிரியா (அரசியலர்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அகத்தியர்அண்ணாமலையார் கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)மீனா (நடிகை)தமிழிசை சௌந்தரராஜன்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுபகத் சிங்மதராசபட்டினம் (திரைப்படம்)புலிஇன்று நேற்று நாளைதற்கொலைமோகன்தாசு கரம்சந்த் காந்திதொழுகை (இசுலாம்)ஆண்டாள்திருப்பூர் குமரன்கணையம்பாதரசம்நந்திக் கலம்பகம்புவிஇன்னா நாற்பதுபுரோஜெஸ்டிரோன்வியாழன் (கோள்)தஞ்சாவூர்திராவிடர்நுரையீரல் அழற்சிவெ. இறையன்புஇந்திய ரூபாய்டெலிகிராம், மென்பொருள்பைரவர்யூதர்களின் வரலாறுநாளிதழ்முதலுதவிஇந்திய அரசியல் கட்சிகள்என்டர் த டிராகன்கள்ளர் (இனக் குழுமம்)இந்தியப் பிரதமர்நரேந்திர மோதிசெம்மொழி🡆 More