கண்டத் திட்டு

கண்டங்களின் கரையோரங்களை அண்டி அமைந்துள்ள திட்டான பகுதி கண்டத் திட்டு எனப்படுகின்றது.

இது ஆழம் குறைந்த கடற்பரப்பினால் மூடியிருக்கும். கண்டத்திட்டு முடியும் இடத்தில் பெரும்பாலும் சடுதியான சரிவு காணப்படும். இது திட்டுமுடிவு (shelf break) ஆகும். திட்டு முடிவுக்குக் கீழ்க் கண்டச் சரிவு (continental slope) என அழைக்கப்படும் பகுதியும் அதற்கும் கீழே கண்ட எழுச்சியும் (continental rise) காணப்படும். இக் கண்ட எழுச்சி இறுதியில் கடல் மிக ஆழமான கடலடித்தளத்துடன் (abyssal plain) சேரும்.

கண்டத் திட்டு
  படிவு
  பாறை
  Mantle
கண்டத் திட்டு

கண்டத் திட்டுப் பொதுவாக உட்கண்டத் திட்டு, இடைக்கண்டத் திட்டு, வெளிக்கண்டத் திட்டு என மூன்று வகையாகப் பிரிக்கப்படுவது உண்டு. இவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய நில உருவாக்கவியல் மற்றும் கடல்சார் உயிரியல் தன்மைகளைக் கொண்டுள்ளன. கண்டத்திட்டின் இயல்பு திட்டுமுடிவில் சடுதியாக மாறுகின்றது. இங்கே கண்டச் சரிவு தொடங்குகின்றது. சில இடங்களைத் தவிரப் பெரும்பாலான இடங்களில் கண்ட முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவு சீரான ஆழத்தில் காணப்படுகின்றன. இது அண்ணளவாக 140 மீட்டர் ஆக உள்ளது. கடல் மட்டம் தற்போது உள்ளதிலும் குறைவாக இருந்த பனிக்கட்டிக் காலத்துக்கு உரிய அடையாளமாக இது இருக்கக்கூடும்.

கண்டச் சரிவு, கண்டத் திட்டிலும் கூடிய சரிவுடன் அமைந்துள்ளது. சராசரியாக 3 பாகையாக இருக்கும் இச் சரிவு, குறைந்த அளவாக 1 பாகையும், கூடிய அளவாக 10 பாகையும் இருக்கக்கூடும். இச் சரிவுகளில் ஆழ்கடல் குடைவுகள் (submarine canyons) காணப்படுவது உண்டு. இவை தோன்றிய விதம் நீண்டகாலம் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

கண்டச் சரிவுக்கு அப்பால், கண்ட எழுச்சி தொடங்குகிறது. இதன் சரிவின் அளவு, கண்டத்திட்டுச் சரிவின் அளவுக்கும், கண்டச்சரிவுச் சரிவின் அளவுக்கும் இடையில் 0.5 முதல் 1 பாகை வரையில் இருக்கும். கண்டச் சரிவில் இருந்து 500 கிமீ வரை பரந்து இருக்கும் இதில், கண்டத்திட்டு, கண்டச் சரிவு ஆகியவற்றிலிருந்து கலக்கல் நீரோட்டம் (turbidity currents) காரணமாக எடுத்துவரப்பட்டுப் படிந்துள்ள தடிப்பான படிவுகள் காணப்படுகின்றன.

கண்டத்திட்டுகளின் பொருண்மிய முக்கியத்துவம்

கண்டமேடைகள் ஆழம் குறைந்த கடல் படுக்கைகளாகக் காணப்படுவதால் மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் கனிப்பொருள் படிவுகளை அகழ்தல் என்பவற்றிலும் முக்கியத்துவம் உடையதாகக் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்

Tags:

கடலடித் தளம்கண்டம்காந்தச் சரிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண் தமிழ்ப் பெயர்கள்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அமைச்சரவைசிறுதானியம்சு. வெங்கடேசன்கிராம ஊராட்சிதமிழ் மாதங்கள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)கொன்றைமரவள்ளிமாமல்லபுரம்ஆற்றுப்படைநாடகம்சத்ய பிரதா சாகுதமிழக வரலாறுகோலாலம்பூர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)கல்லீரல்உவமைத்தொகைஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தேவாரம்கண்ணகிஆடுஜீவிதம் (திரைப்படம்)மஜ்னுசிந்துவெளி நாகரிகம்புறப்பொருள் வெண்பாமாலைதேர்தல் பத்திரம் (இந்தியா)சிவன்யானைவிண்டோசு எக்சு. பி.வேற்றுமையுருபுமுக்கூடற் பள்ளுபோக்கிரி (திரைப்படம்)அக்பர்வெண்பாகோத்திரம்சூர்யா (நடிகர்)கட்டுரைவேற்றுமைத்தொகைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகருக்காலம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்முத்துராமலிங்கத் தேவர்தமன்னா பாட்டியாஆனைக்கொய்யாகலைச்சொல்நீர் மாசுபாடுசூரைசிங்கம் (திரைப்படம்)கேசரி யோகம் (சோதிடம்)சீரகம்துரைமுருகன்டி. எம். கிருஷ்ணாபர்வத மலைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிபனிக்குட நீர்விளையாட்டுஅகழ்வாய்வுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருநங்கைகருத்தரிப்புவரலட்சுமி சரத்குமார்செரால்டு கோட்சீதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்தியத் தேர்தல் ஆணையம்சுந்தர காண்டம்வி. கே. சின்னசாமிஆரணி மக்களவைத் தொகுதிபஞ்சபூதத் தலங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்🡆 More