பு. வெ. சிந்து

புசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: పూసర్ల వెంకట సింధు, பிறப்பு: 5 சூலை 1995) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்.

2016 ஆகஸ்த்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார். இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

பு. வெ. சிந்து
பு. வெ. சிந்து
2016 ஆம் ஆண்டில் சிந்து
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்புசார்லா வெங்கட சிந்து
நாடுபு. வெ. சிந்து இந்தியா
பிறப்பு5 சூலை 1995 (1995-07-05) (அகவை 28)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலுங்கானாவில்), இந்தியா
உயரம்1.79 m (5 அடி 10 அங்)
எடை65 kg (143 lb)
விளையாடிய ஆண்டுகள்2011–தற்போது
கரம்வலக்கை
பயிற்சியாளர்பார்க் டே சாங்
பெண்கள் ஒற்றையர்
விளையாட்டு சாதனை410 வெற்றிகள், 169 தோல்விகள்
பெரும தரவரிசையிடம்2 (1 ஏப்ரல் 2017)
தற்போதைய தரவரிசை9 (31 சனவரி 2023)
பதக்கத் தகவல்கள்
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
நாடு பு. வெ. சிந்து இந்தியா
ஒலிம்பிக்சு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 ரியோ ஒலிம்பிக்சு மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்சு மகளிர் ஒற்றையர்
பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 பேசெல் மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 கிளாஸ்கோ மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 நாஞ்சிங் மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 குவாங்சௌ மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 கோபன்ஹேகன் மகளிர் ஒற்றையர்
தாமஸ் & உபேர் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 புது டெல்லி மகளிர் குழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 குன்ஷான் மகளிர் குழு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 ஜகார்த்தா-பாலெம்பாங் மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இன்சியான் மகளிர் குழு
ஆசிய வாகையாளர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 கிம்சியோன் மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 மணிலா மகளிர் ஒற்றையர்
ஆசியா கலப்பு அணி சாம்பியன்ஷிப்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2023 துபாய் கலப்பு அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்ட் கோஸ்ட் கலப்பு அணி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 கோல்ட் கோஸ்ட் மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 பர்மிங்காம் கலப்பு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 கிளாஸ்கோ மகளிர் ஒற்றையர்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவகாத்தி–சில்லாங் மகளிர் குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 குவகாத்தி–சில்லாங் மகளிர் ஒற்றையர்
பொதுநலவாய இளைஞர் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 டக்ளஸ் பெண்கள் ஒற்றையர்
ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 கிம்சியோன் பெண்கள் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 இலக்னோ பெண்கள் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 இலக்னோ கலப்பு அணி
இ. உ. கூ. சுயவிவரம்

போர்ப்சு இதழின்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முறையே 8.5மில்லியன் மற்றும் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார். இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் , குடிமை விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றுள்ளார். சனவரி 2020இல் மூன்றாவது குடிமை விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றார்.

பிறப்பு

பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.

ரியோ ஒலிம்பிக்ஸ்

இவர் 2016 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.

2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி 1 ஆகஸ்டு 2021 அன்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.

ஆட்டக்கால சாதனைகள்

  • உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.
  • 2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
  • 1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
  • உலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.
  • பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
  • 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
நிகழ்வு 2010 2011 2012 2013
மகாவ் ஓப்பன் 3பு. வெ. சிந்து  தங்கம்
பு. வெ. சிந்து  கொரியா ஓப்பன் சுற்று 2
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் இளநிலை வாகையாளர் போட்டிகள் சுற்று 3
பு. வெ. சிந்து  சீனா ஓப்பன் தகுதிநிலை அரையிறுதி
பு. வெ. சிந்து  இந்தோனேசியா ஓப்பன் சுற்று 2
பு. வெ. சிந்து  இந்திய ஓப்பன் அரையிறுதி சுற்று 1 காலிறுதி
பு. வெ. சிந்து  சப்பான் ஓப்பன் சுற்று 2
பு. வெ. சிந்து  டச்சு ஓப்பன் 3பு. வெ. சிந்து  வெள்ளி
பு. வெ. சிந்து  இந்திய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட் சுற்று 2 சுற்று 2 3பு. வெ. சிந்து  வெள்ளி
பு. வெ. சிந்து  மலேசிய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட் Malaysia Open Grand Prix Gold 3பு. வெ. சிந்து  தங்கம்
சுதிர்மான் கோப்பை 3பு. வெ. சிந்து  தங்கம்
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் வாகையாளர் போட்டிகள்இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள் 3பு. வெ. சிந்து  வெண்கலம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

பு. வெ. சிந்து பிறப்புபு. வெ. சிந்து ரியோ ஒலிம்பிக்ஸ்பு. வெ. சிந்து 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிபு. வெ. சிந்து 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிபு. வெ. சிந்து ஆட்டக்கால சாதனைகள்பு. வெ. சிந்து மேற்சான்றுகள்பு. வெ. சிந்து வெளி இணைப்புகள்பு. வெ. சிந்துஇந்தியாஇறகுப்பந்தாட்டம்இலாப நோக்கற்ற அமைப்புஐதராபாத்து (இந்தியா)ஒலிம்பிக் விளையாட்டுக்கள்தெலுங்கு மொழிபிரேசில்ஹாங்காங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாரணம் ஆயிரம் (திரைப்படம்)வெங்கடேஷ் ஐயர்விளையாட்டுஸ்ரீலீலாஇன்று நேற்று நாளைகல்விஅன்புமணி ராமதாஸ்மழைசெங்குந்தர்எயிட்சுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஆபுத்திரன்தண்டியலங்காரம்மத கஜ ராஜாசிலம்பரசன்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகீர்த்தி சுரேஷ்நீரிழிவு நோய்இன்ஸ்ட்டாகிராம்தனிப்பாடல் திரட்டுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்உயிர்மெய் எழுத்துகள்புதுமைப்பித்தன்தேவாங்குதிராவிடர்திராவிசு கெட்இராமாயணம்காதல் தேசம்கழுகுவராகிசிவவாக்கியர்தேர்தல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சித்திரைத் திருவிழாஅகத்தியர்பிரேமலுஉப்புச் சத்தியாகிரகம்நவக்கிரகம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கண்ணாடி விரியன்தொல்காப்பியர்காரைக்கால் அம்மையார்ஒற்றைத் தலைவலிமாதவிடாய்ஆய்த எழுத்துகுண்டூர் காரம்அபினிநீர்தேம்பாவணிசேலம்தேஜஸ்வி சூர்யாதமிழக வரலாறுகார்லசு புச்திமோன்செண்டிமீட்டர்மாணிக்கவாசகர்இரசினிகாந்துமுல்லை (திணை)அரசியல் கட்சிஇராபர்ட்டு கால்டுவெல்புறப்பொருள் வெண்பாமாலைபெருஞ்சீரகம்கல்விக்கோட்பாடுமார்கழி நோன்புதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திராவிட முன்னேற்றக் கழகம்மலைபடுகடாம்கணையம்வீரமாமுனிவர்பிரப்சிம்ரன் சிங்அம்மனின் பெயர்களின் பட்டியல்பிரகாஷ் ராஜ்பாளையத்து அம்மன்சனீஸ்வரன்பெரியபுராணம்கம்பராமாயணம்தமிழ் தேசம் (திரைப்படம்)நஞ்சுக்கொடி தகர்வு🡆 More