நான்சி ரேகன்

நான்சி டேவிசு ரேகன் (Nancy Davis Reagan, பிறப்பு: ஆன் பிரான்செசு ராபின்சு; சூலை 6, 1921 – மார்ச் 6, 2016) ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவராக இருந்த ரானல்ட் ரேகனின் மனைவி ஆவார்.

இவர் 1981 முதல் 1989 வரை ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டியாக இருந்துள்ளார்.

நான்சி டேவிசு ரேகன்
நான்சி ரேகன்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 20, 1981 – சனவரி 20, 1989
முன்னையவர்ரோசலின் கார்ட்டர்
பின்னவர்பார்பரா புஷ்
கலிபோர்னியாவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 3, 1967 – சனவரி 7, 1975
முன்னையவர்பெருனீசு லேய்ன்
பின்னவர்குளோரியா சாட்ஜியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-07-06)சூலை 6, 1921
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்புமார்ச்சு 6, 2016(2016-03-06) (அகவை 94)
பெல் ஏர் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ.
துணைவர்ரானல்ட் ரேகன் (தி. 1952–2004, அவரது மரணம்)
உறவுகள்கென்னத் செமோர் இராபின்சு, எடித் லக்கெட்
பிள்ளைகள்பேட்டி டேவிசு, ரான் ரேகன்
முன்னாள் கல்லூரிஇசுமித் கல்லூரி
வேலைஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
கையெழுத்துநான்சி ரேகன்

நான்சி நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் பிறந்தார். அவரது பிறப்பிற்குப் பிறகு பெற்றோர்கள் மணமுறிவுற்றனர். அவரது அன்னை நடிப்புத் தொழிலில் ஈடுபட நான்சி தனது அத்தை, மாமாவுடன் மேரிலாந்தில் வளர்ந்தார். நான்சியும் ஆலிவுட் சென்று 1940களிலும் 1950களிலும் நடிகையாக விளங்கினார். டோனோவன் மூளை, நைட் இன்டு மார்னிங், ஹெல்கேட்ஸ் ஆஃப் நேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

1952இல் அப்போது வெள்ளித்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக இருந்த ரானால் ரேகனை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன: ரான் ரேகன், பேட்டி டேவிசு. ரேகன் 1967 முதல் 1975 வரை கலிபோர்னியாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது நான்சி கலிபோர்னியாவின் முதல் சீமாட்டியாக விளங்கினார். வளர்ப்பு தாத்தாப்பாட்டி திட்டத்தில் இணைந்தார்.

தனது கணவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சனவரி 1981இல் நான்சி ரேகன் ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆனார். வெள்ளை மாளிகை பீங்கான் கோப்பைகளை மாற்ற முயற்சித்தற்காக நான்சி விமரிசிக்கப்பட்டார். இதேபோல உயர்குடி நாகரிகப்பாணியும் கவனத்தை ஈர்த்ததுடன் விமரிசனங்களை வரவழைத்தது. தனது கணவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது போதை மருந்துகளுக்கு எதிராக "ஜஸ்ட் சே நோ" இயக்கத்தை நிறுவினார்.

தனது கணவரை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். 1981இல் தன் கணவர் மீதான கொலை முயற்சியை அடுத்து குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட இவர் 1988இல் சோதிடர்களை நியமித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ரானல்ட் ரேகன் மீது இவருக்கு மிகுந்த தாக்கம் இருந்தது. அவரது தனிப்பட்ட முடிவுகளிலும் தொடர்பாடல் முடிவுகளிலும் இவரது குறுக்கீடு இருந்தது.

1989இல் ரேகன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினர். 1994இல் ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவரின் உடல்நலத்தைப் பேணுவதில் நான்சி முழுநேரமும் ஈடுபட்டார். 2004ஆம் ஆண்டில் ரானல்ட் ரேகன் மறைந்தார். ரேகன் நூலகத்தில் மிகவும் செயற்பாட்டுடன் விளங்கிய நான்சி தனது மரணம் வரை குருத்தணு ஆய்வை ஆதரித்தும் பேசியும் வந்தார்.

மரணம்

நான்சி மார்ச் 6, 2016 அன்று லாசு ஏஞ்செல்சில் உள்ள பெல் ஏர் வீட்டில் மரணமடைந்தார்.குருதி விம்மு இதயத் திறனிழப்பால் உயிரிழந்தார். அவருக்கு 94 அகவைகள் முடிவுற்றிருந்தன. மார்ச் 11 அன்று அவரது கணவரின் கல்லறைக்கு அடுத்து ரானல்ட் ரேகன் குடியரசுத் தலைவருக்கான நூலகத்தில் புதைக்கப்பட உள்ளார்.

மக்கட்வெளிப் பண்பாட்டில்

  • 2013இல் வெளியான தி பட்லர் திரைப்படத்தில் இவரது வேடத்தில் ஜேன் போன்டா நடித்துள்ளார். ஆலன் ரிக்மேன் ரானல்ட் ரேகனாக நடித்தார்.
  • மிஷன் ஆப் பர்மாவின் 2006ஆம் ஆண்டு இசைத்தொகுப்பு, தி ஓப்லிடெரட்டியில் ஒரு பாட்டு இவரது பெயரைக் கொண்டுள்ளது: "நான்சி ரேகனின் தலை".
  • சன் சிட்டி கேர்ல்சு 1987இல் வெளியிட்ட ஹார்சு காக் பெப்னெர் என்ற இசைத்தொகுப்பில் ஒரு பாட்டு "நான்சி ரேகன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

நான்சி ரேகன் மரணம்நான்சி ரேகன் மக்கட்வெளிப் பண்பாட்டில்நான்சி ரேகன் மேற்சான்றுகள்நான்சி ரேகன் வெளி இணைப்புகள்நான்சி ரேகன்ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டிரானல்ட் ரேகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றை வேந்தன்கலிங்கத்துப்பரணிஇராகுல் காந்திஇசுலாம்கவலை வேண்டாம்விநாயக் தாமோதர் சாவர்க்கர்பராக் ஒபாமாடிரைகிளிசரைடுஇந்தியத் துணைக்கண்டம்உரைநடைவெற்றிமாறன்மக்களவை (இந்தியா)இதயம்அம்லோடிபின்பாரதிய ஜனதா கட்சிதிராவிடர்எச்.ஐ.விபண்டமாற்றுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சுருட்டைவிரியன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஸ்டீவன் ஹாக்கிங்ஐக்கிய நாடுகள் அவைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மிருதன் (திரைப்படம்)இந்திரா காந்திபல்லவர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வல்லம்பர்மதுரைநரேந்திர மோதிமணிமேகலை (காப்பியம்)69தேவநேயப் பாவாணர்நாளிதழ்ஹஜ்நிணநீர்க்கணுமனித நேயம்இடமகல் கருப்பை அகப்படலம்லக்ன பொருத்தம்ஊட்டச்சத்துசீனாமனித மூளைபோக்குவரத்துமாத்திரை (தமிழ் இலக்கணம்)பஞ்சாபி மொழிடொயோட்டாஇந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்நாச்சியார் திருமொழிசிவாஜி கணேசன்அழகிய தமிழ்மகன்மூலிகைகள் பட்டியல்இரவுக்கு ஆயிரம் கண்கள்வேல ராமமூர்த்திவினைச்சொல்வேளாண்மைசெவ்வாய் (கோள்)இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்கள்ளர் (இனக் குழுமம்)சிவனின் 108 திருநாமங்கள்திருநங்கைமுடக்கு வாதம்மலையாளம்வேலைகொள்வோர்அம்பேத்கர்மோசேகள்ளுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்உடனுறை துணைபிள்ளையார்வேளாளர்மூவேந்தர்அயோத்தி தாசர்நிதியறிக்கைகார்லசு புச்திமோன்இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்இந்தி🡆 More