திரௌபதி முர்மு: இந்தியக் குடியரசுத் தலைவர்

திரௌபதி முர்மு (Droupadi Murmu) (பிறப்பு 20 சூன் 1958) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியும் ஆவார்.

இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இம்மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக இருந்தவர் ஆவார். சார்க்கண்டு மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவார். 2022இல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்.

திரௌபதி முர்மு
Droupadi Murmu
15வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 சூலை 2022
பிரதமர்நரேந்திர மோதி
Vice Presidentவெங்கையா நாயுடு
ஜகதீப் தன்கர்
Succeedingராம் நாத் கோவிந்த்
9-ஆவது சார்க்கண்டு ஆளுநர்
பதவியில்
18 மே 2015 – 12 சூலை 2021
முதலமைச்சர்கள்ரகுபர் தாசு
ஹேமந்த் சோரன்
முன்னையவர்சையத் அகமது
பின்னவர்ரமேஷ் பைஸ்
ஒடிசா மாநில அமைச்சர்
பதவியில்
6 ஆகத்து 2002 – 16 மே 2004
ஆளுநர்எம். எம். ராஜேந்திரன்
முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
அமைச்சுமீன்பிடி, விலங்கு வள மேம்பாடு
பதவியில்
6 மார்ச் 2000 – 6 ஆகத்து 2002
ஆளுநர்எம். எம். ராஜேந்திரன்
முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
அமைச்சுவணிகம் மற்றும் போக்குவரத்து
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
5 மார்ச் 2000 – 21 மே 2009
முன்னையவர்இலக்சுமன் மாச்சி
பின்னவர்சியாம் சரண் அன்சுதா
தொகுதிராய்ரங்கப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூன் 1958 (1958-06-20) (அகவை 65)
மயூர்பாஞ்சு, ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்(s)
சியாம் சந்திரா முர்மு
(தி. 1976; இற. 2014)
பிள்ளைகள்3 (2 இறப்புகள்)
வாழிடம்தில்லி
முன்னாள் கல்லூரிஇரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்ஆசிரியை

ஆரம்பகால வாழ்க்கை

திரௌபதி முர்மு 20 சூன் 1958-இல் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

திரௌபதி முர்மு ஜூன் 20, 1958 அன்று ஒடிசாவின் ராய்ராங்பூரின் பைடாபோசி பகுதியில் சந்தாலி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு குடும்பம் வைத்த பெயர் புட்டி டுடு. இவருக்கு பள்ளி ஆசிரியரால் திரௌபதி என்று பெயர் மாற்றப்பட்டது. அவரது பெயர் பலமுறை மாற்றப்பட்டது, மேலும் அவர் கடந்த காலத்தில் துர்பாடி, டோர்பிடி என்றும் பெயரிடப்பட்டார்.

அவரது தந்தையும் தாத்தாவும் கிராம சபையின் பாரம்பரிய தலைவர்கள். முர்மு ரமா தேவி மகளிர் கல்லூரியில் கலைப் பட்டதாரி ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திரௌபதி முர்மு, 1980இல் சியாம் சரண் முர்முவை திருமணம் செய்து கொண்டார். சியாம் சரண் ஒரு வங்கியாளர்.இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். திரௌபதி முர்முவின் வாழ்க்கையில் தனிப்பட்ட துயரங்கள் கணவர் மற்றும் இரண்டு மகன்களின் இழப்பு தாய் மற்றும் ஒரு சகோதரர் 2009 முதல் 2015 வரையிலான 7 ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அவர் பிரம்மா குமாரிகள் ஆன்மீக இயக்கத்தை பின்பற்றுபவர். ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது.

பணி

மாநில அரசியல்

ஒடிசாவில் பாரதீய ஜனதா மற்றும் பிஜு ஜனதா தள கூட்டணி அரசாங்கத்தின் போது, இவர் மார்ச் 6, 2000 முதல் ஆகத்து 6, 2002 வரை வர்த்தக மற்றும் போக்குவரத்துக்கான சுயாதீன பொறுப்பையும், மீன்வள மற்றும் விலங்கு வள மேம்பாட்டையும் ஆகத்து 6, 2002 முதல் மே 16, 2004 வரை மாநில அமைச்சராக இருந்தார். இவர் முன்னாள் ஒடிசா அமைச்சராகவும், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ரைரங்க்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆளுநர்

சார்கண்டின் முதல் பெண் ஆளுநர் இவராவார். ஒடிசாவிலிருந்து இந்திய மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடித் தலைவர் இவர் ஆவார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

திரௌபதி முர்மு: ஆரம்பகால வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, பணி 
இந்தியத் தலைமை நீதிபதி என். வி. இரமணா திரௌபதி முர்முவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது

சூன் 2022-ல், பாஜக முர்முவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக, 2022 குடியரசுத் தேர்தலுக்கான வேட்பாளராகப் பரிந்துரைத்தது. தற்போதைய நிலவரப்படி, இவர் இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 25 சூலை 2022 அன்று பதவியேற்பார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடி அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவராவார். யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளால் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​முர்மு தனக்கு ஆதரவளிக்க கூட்டணிக் கட்சியினைச் சந்திக்கப் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றார். சார்க்கண்டு முக்தி மோர்ச்சா, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இவருக்கு வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே ஆதரவு தெரிவித்தன. முர்மு 28 மாநிலங்களில் 21 (புதுச்சேரி ஒன்றிய பிரதேசம் உட்பட) 676,803 வாக்குகளுடன் (மொத்தத்தில் 64.03%) 2022 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிரணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து 15வது இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்
சயீத் அகமது
ஜார்க்கண்ட் ஆளுநர்
மே 2015 – 12 சூலை 2021 வரை
பின்னர்
ரமேஷ் பைஸ்
முன்னர்
ராம் நாத் கோவிந்த்
இந்தியக் குடியரசுத் தலைவர்
சூலை 25, 2022 முதல்
பின்னர்
'

Tags:

திரௌபதி முர்மு ஆரம்பகால வாழ்க்கைதிரௌபதி முர்மு தனிப்பட்ட வாழ்க்கைதிரௌபதி முர்மு பணிதிரௌபதி முர்மு மேற்கோள்கள்திரௌபதி முர்மு வெளி இணைப்புகள்திரௌபதி முர்முஇந்தியக் குடியரசுத் தலைவர்ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்காடுவெட்டி குருஇரவீந்திரநாத் தாகூர்சீரகம்மூலம் (நோய்)காரைக்கால் அம்மையார்திருமணம்ஆத்திசூடிஉமறுப் புலவர்திராவிசு கெட்பாரத ரத்னாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்புறநானூறுகார்த்திக் சிவகுமார்தேவயானி (நடிகை)மென்பொருள்திருப்பாவைகும்பம் (இராசி)நான் ஈ (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்வன்னியர்வளைகாப்புபாரதிய ஜனதா கட்சிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மனித உரிமைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சைவ சமயம்சூரியக் குடும்பம்சிவாஜி கணேசன்சிலப்பதிகாரம்நாடோடிப் பாட்டுக்காரன்சீரடி சாயி பாபாதமிழச்சி தங்கப்பாண்டியன்மதுரை வீரன்குண்டூர் காரம்பதிற்றுப்பத்துஇலங்கையின் மாவட்டங்கள்கருட புராணம்நாயக்கர்சித்திரைத் திருவிழாசங்க காலம்தங்க மகன் (1983 திரைப்படம்)அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்நீதிக் கட்சிசைவத் திருமணச் சடங்குபழமொழி நானூறுகலித்தொகைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நயினார் நாகேந்திரன்கவிதைஅய்யா வைகுண்டர்சீவக சிந்தாமணிசாகித்திய அகாதமி விருதுவிடுதலை பகுதி 1வல்லினம் மிகும் இடங்கள்வாணிதாசன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370டேனியக் கோட்டைஔவையார்சின்னம்மைதாஜ் மகால்நீக்ரோதொடை (யாப்பிலக்கணம்)முத்துலட்சுமி ரெட்டிபிலிருபின்பொன்னுக்கு வீங்கிபுறப்பொருள் வெண்பாமாலைமரங்களின் பட்டியல்பாரத ஸ்டேட் வங்கிசமணம்ஆண்டு வட்டம் அட்டவணைசி. விஜயதரணி🡆 More