தத்தாரிஸ்தான்

தத்தாரிஸ்தான் குடியரசு (Republic of Tatarstan, உருசியம்: Респу́блика Татарста́н, ஒ.பெ ரிஸ்புப்ளிக்கா தத்தார்ஸ்தான்) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் கசான் நகரம் ஆகும்.

குடியரசின் மக்கள் தொகை: 3.786.488. ( 2010 கணக்கெடுப்பு )

தத்தாரிஸ்தான் குடியரசு
Republic of Tatarstan
குடியரசு
Республика Татарстан
Other transcription(s)
 • TatarТатарстан Җөмһүрияте
தத்தாரிஸ்தான் குடியரசு Republic of Tatarstan-இன் கொடி
கொடி
தத்தாரிஸ்தான் குடியரசு Republic of Tatarstan-இன் சின்னம்
சின்னம்
பண்: தத்தார்ஸ்தான் குடியரசு நாட்டுப் பண்
தத்தாரிஸ்தான்
நாடுதத்தாரிஸ்தான் உருசியா
நடுவண் மாவட்டம்வால்கா
பொருளாதாரப் பகுதிவால்கா
தலைநகரம்கசான்
அரசு
 • நிர்வாகம்State Council
 • Presidentருஸ்தாம் மின்னிகான்னோவ்
பரப்பளவு
 • மொத்தம்68,000 km2 (26,000 sq mi)
பரப்பளவு தரவரிசை44வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்37,86,488
 • Estimate (2018)38,94,284 (+2.8%)
 • தரவரிசை8வது
 • அடர்த்தி56/km2 (140/sq mi)
 • நகர்ப்புறம்75.4%
 • நாட்டுப்புறம்24.6%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-TA
அனுமதி இலக்கத்தகடு16, 116
அலுவல் மொழிகள்உருசியம்தடர
இணையதளம்http://tatarstan.ru/eng

சொல்

"தத்தார்ஸ்தான்" என்ற பெயர் இங்கு வாழக்கூடிய இனக்குழுவினரான தடார்கள் என்ற பாரசீக மொழி பெயரில் இருந்து பெறப்பட்டது. இன்னொரு பெயர் உருசிய மொழியில் வழக்கில் உள்ளது. இது “Тата́рия” (Tatariya) என்ற பெயர் ஆகும். சோவியத் ஆட்சியின் போது “Tatar ASSR” என்று வழங்கப்பட்டது.

நிலவியல்

தத்தாரிஸ்தான் 
தர்தாரிஸ்தான குடியரசின் வரைபடம்

இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் மையத்தில் அமைந்துள்ளது. மாஸ்கோவில் இருந்து கிழக்கில் சுமார் 800 கிலோமீட்டர் (500 மைல்) தொலைவில் உள்ளது, வோல்கா ஆறு மற்றும் காம ஆறு ( வோல்காவின் கிளையாறு) ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது, மற்றும் உரால் மலைகளுக்கு கிழக்கில் பரவியுள்ளது.

  • எல்லைகள்: ( உருசிய கூட்டமைப்புக்குள்):
  • வடக்கில் கீரோவ் ஒப்லாஸ்து, வடக்கு மற்றும் வடகிழக்கில் உத்முர்த்தியா குடியரசு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பாஷ்கொர்டொஸ்தான், தென்கிழக்கில் ஒரன்பூர்க் ஒப்லாஸ்து, தெற்கில் சமர ஒப்லாஸ்து , தெற்கு மற்றும் தென்மேற்கில் ஊழியனோவ்ஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் சுவாசியா, மேற்கு மற்றும் வடமேற்கில் மாரீ எல் போன்றவை உள்ளன.
  • உயரமான இடம்: 343 மீ (1,125 அடி)
  • வடக்கு தெற்காக அதிகபட்சமாக: 290 கிலோமீட்டர் (180 மைல்) நீளம் உள்ளது.
  • கிழக்கு மேற்காக அதிகபட்டமாக: 460 கிமீ (290 மைல்) நீளம் உள்ளது.

இயற்கை வளங்கள்

  • குடியரசின் முக்கிய இயற்கை வளங்கள் எண்ணெய் , இயற்கை எரிவாயு , ஜிப்சம் மற்றும் பல. குடியரசில் உள்ள எண்ணெய் வளம் பில்லியன் டன்னுக்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை

  • சராசரி சனவரி வெப்பநிலை: -16 டிகிரி செல்சியஸ் (3 ° பாரங்கீட்),
  • சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்)
  • சராசரி ஆண்டு வெப்பநிலை: +4 டிகிரி செல்சியஸ் (39 °F),
  • சராசரி ஆண்டு மழையளவு : 500 மிமீ (20 அங்குளம்) வரை

மக்கள் வகைப்பாடு

குடியரசின் மக்கள் தொகை: 3,786,488 ( 2010 கணக்கெடுப்பு ); (3,779,265 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,637,809 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ).

குடியரசில் சுமார் 2 மில்லியன் தடர் இன மக்களும், 1.5 மில்லியன் ரஷ்யர்களும் உள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான சுவாஷ் , மாரி , உத்முர்த் ஆகிய இனத்தவர்கள் தடர மொழியே பேசுகின்றனர். உக்ரைனியர், மோர்டிவின், பாஷ்கிர் போன்ற சிறுபான்மையினரும் உள்ளனர். பெரும்பாண்மையான தடார்கள் சுன்னி முஸ்லிம்கள் என்றாலும், தடார்களில் ஒரு சிறு பிரிவினர் கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றும் கிருத்துவர்களாகவும் உள்ளனர்.

மதம்

922 ல் துவங்கப்பட்ட மாகாணமான இது, நவீன உருசியாவின் எல்லைக்குள் உருவான முதல் முஸ்லீம் மாநிலமாக இருந்தது. இப்பகுதி தடார்களுக்கு வோல்கா பல்கேரியாவில் இருந்து இஸ்லாம் மதப் பரப்புநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்குடியரசில் 1990 ஆம் ஆண்டுவரை 100 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2004 இல் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது. ஜனவரி 1, 2008 வரையான காலகட்டத்தில் 1,398 மத அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,055 அமைப்புகள் முஸ்லீம் அமைப்புகள் ஆகும். இன்று, சுன்னி இஸ்லாமியர் மக்கள் தொகையில் 55% ஆகும்.

குடியரசில் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்துவம் இரண்டாவது பெரிய மதமாக, 150 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது,

பொருளாதாரம்

இக்குடியரசு ரஷ்யாவின் மிகவும் வளர்ச்சியுற்ற பகுதிகளில் ஒன்றாகும். குடியரசில் தொழில்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது, ஒரு நபருக்கான குடியரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004 ல் 12.325 அமெரிக்க டாலராக இருந்தது. 2008இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 930 பில்லியன் ரூபிள் ஆகும்.

குடியரசின் செல்வத்துக்கு முக்கிய ஆதாரமாக எண்ணெய் வளம் உள்ளது. வருடத்திற்கு 32 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி மேற்பட்டுகிறது. இதை 1 பில்லியன் டனானாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. குடியரசில் தொழில்துறை உற்பத்தியின் பங்கு 45% ஆகும். உள்நாட்டு உற்பத்தியில் . மிகவும் வளர்ந்த உற்பத்தி தொழில்கள் பெட்ரோலிய துறை, மற்றும் கட்டுமான இயந்திரங்கள் போன்றவை ஆகும்.

மேற்கோள்கள்


Tags:

தத்தாரிஸ்தான் சொல்தத்தாரிஸ்தான் நிலவியல்தத்தாரிஸ்தான் மக்கள் வகைப்பாடுதத்தாரிஸ்தான் மதம்தத்தாரிஸ்தான் பொருளாதாரம்தத்தாரிஸ்தான் மேற்கோள்கள்தத்தாரிஸ்தான்உருசியம்உருசியாகசான்ரஷ்யாவின் உட்குடியரசுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மலைபடுகடாம்சீமான் (அரசியல்வாதி)மயங்கொலிச் சொற்கள்தமன்னா பாட்டியாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்உத்தரகோசமங்கைமருதமலைகிருட்டிணன்தமிழ்நாடுசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்திருமால்பழமுதிர்சோலை முருகன் கோயில்அம்மனின் பெயர்களின் பட்டியல்தேவாரம்சுற்றுலாஅட்சய திருதியைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அரிப்புத் தோலழற்சிமஞ்சும்மல் பாய்ஸ்பெரியாழ்வார்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்திய மக்களவைத் தொகுதிகள்பொது ஊழிநவரத்தினங்கள்விலங்குமதுரைக் காஞ்சிகைப்பந்தாட்டம்பொன்னுக்கு வீங்கிஅம்பேத்கர்அன்னை தெரேசாஆனைக்கொய்யாஇந்தியத் தேர்தல் ஆணையம்தொல். திருமாவளவன்வேதம்கல்லீரல்கவலை வேண்டாம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருவரங்கக் கலம்பகம்ஏப்ரல் 26சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முத்துராமலிங்கத் தேவர்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்சித்ரா பௌர்ணமிதெலுங்கு மொழிதிருமுருகாற்றுப்படைகபிலர்சிலம்பம்வெந்து தணிந்தது காடுஅரவான்நீர்கங்கைகொண்ட சோழபுரம்கேழ்வரகுகிறிஸ்தவம்ஆப்பிள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கலாநிதி மாறன்முடிபீனிக்ஸ் (பறவை)வரலாறுமுதுமலை தேசியப் பூங்காசாகித்திய அகாதமி விருதுபாரத ரத்னாதிருப்பதிசின்னம்மைமனித மூளைகண்ணதாசன்பூக்கள் பட்டியல்சயாம் மரண இரயில்பாதைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆதிமந்திஅருணகிரிநாதர்தொலைக்காட்சியாவரும் நலம்முல்லைப்பாட்டுமாமல்லபுரம்🡆 More