தக்காளி

Lycopersicon lycopersicum Lycopersicon esculentum

தக்காளி
தக்காளி
சந்தைப்படுத்தப்பட்ட தக்காளியின் குறுக்குவெட்டுத் தோற்றம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
துணைத்திணை:
பிரிவு:
வகுப்பு:
துணைவகுப்பு:
Asteridae
வரிசை:
சோலானேல்ஸ்
குடும்பம்:
பேரினம்:
சோலானம்
இனம்:
சோ. லைகோபெர்சிகம்
இருசொற் பெயரீடு
சோலானம் லைகோபெர்சிகம்
லின்னேயஸ்
வேறு பெயர்கள்

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், குடைமிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.

இந்தியாவில் தக்காளி

மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.

  • மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
  • நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு உள்ளே இருக்கும் பசுமைநிறத் தக்காளியை உண்பர். இது காய்நிலையில் கசக்கும். எனவே உண்ணமாட்டார்கள். இந்த உள் தக்காளி பட்டாணி அளவு பருமன் கொண்டிருக்கும். காய்நிலையில் அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. மூடாக்குத் தோலை உரித்துவிட்டு காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.

தக்காளி உற்பத்தி

2020ஆம் ஆண்டில், தக்காளியின் உலக உற்பத்தி 187 மில்லியன் டன்களாக இருந்தது, இதில் சீனா 35% உற்பத்தி செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகியவை முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன (அட்டவணை)

தக்காளி உற்பத்தி – 2020
நாடு (மில்லியன் டன்கள்)
தக்காளி  சீனா 64.8
தக்காளி  இந்தியா 20.6
தக்காளி  துருக்கி 13.2
தக்காளி  ஐக்கிய அமெரிக்கா 12.2
தக்காளி  எகிப்து 6.7
தக்காளி  ஈரான் 5.8
தக்காளி  மெக்சிகோ 4.1
உலக 186.8
மூலம்: FAOSTAT ஐக்கிய நாடுகள்


தக்காளி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு பழுத்த பழத்தில் இருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்கவிடப்படும். மறு வித்திக்களை சுற்றியுள்ள சளிப்படை நிங்கும் வகையில் நன்கு வித்துக்கள் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஏரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

படங்கள்

மேற்கோள்கள்

Tags:

தக்காளி இந்தியாவில் தக்காளி உற்பத்திதக்காளி வித்து பிரித்தெடுக்கும் முறைதக்காளி படங்கள்தக்காளி மேற்கோள்கள்தக்காளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் விக்கிப்பீடியாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஆழ்வார்கள்நாட்டு நலப்பணித் திட்டம்லிங்டின்காயத்ரி மந்திரம்தெலுங்கு மொழிதீரன் சின்னமலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)காடுவெட்டி குருவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்நீரிழிவு நோய்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஅக்பர்சேலம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அழகர் கோவில்நற்கருணைதிராவிட மொழிக் குடும்பம்பறம்பு மலைதமிழர் கப்பற்கலைபஞ்சபூதத் தலங்கள்உரிச்சொல்முலாம் பழம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய நிதி ஆணையம்வேளாண்மைசிறுநீர்ப்பாதைத் தொற்றுமுகம்மது நபியானையின் தமிழ்ப்பெயர்கள்காந்தள்நீதிக் கட்சிதிரிகடுகம்மாசிபத்திரிதாயுமானவர்செக்ஸ் டேப்பதினெண் கீழ்க்கணக்குஆதிமந்திதிருமந்திரம்கன்னத்தில் முத்தமிட்டால்வைரமுத்துபாலை (திணை)கலிங்கத்துப்பரணிபனைமதராசபட்டினம் (திரைப்படம்)தைப்பொங்கல்சிலப்பதிகாரம்நாயன்மார்பூலித்தேவன்உலகம் சுற்றும் வாலிபன்திருக்குர்ஆன்வெந்தயம்சோமசுந்தரப் புலவர்இனியவை நாற்பதுசினேகாஅழகிய தமிழ்மகன்பெண்களின் உரிமைகள்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு அமைச்சரவைதிருச்சிராப்பள்ளிகொல்லி மலைசீனாகோயம்புத்தூர்எட்டுத்தொகை தொகுப்புபுதன் (கோள்)தாவரம்முத்துலட்சுமி ரெட்டிஇராசேந்திர சோழன்மருது பாண்டியர்மக்களவை (இந்தியா)புறப்பொருள் வெண்பாமாலைமுன்னின்பம்சமூகம்இசுலாமிய வரலாறுபூனைபுதுச்சேரிகாவிரி ஆறுபெரும்பாணாற்றுப்படை🡆 More