ஜேன் கோம்

ஜேன் கோம் ( Jan Koum 24 பிப்பிரவரி 1976) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிரலரும் இணைய புதுப் புனைவரும் ஆவார்.

வாட்சப் என்னும் செய்தி பரிமாற்ற செயலியைப் பிரையன் ஆக்டனுடன் இணைந்து உருவாக்கியவர். வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து 2014 இல் கையகப்படுத்தினர்.

ஜேன் கோம்
தாய்மொழியில் பெயர்Ян Кум
பிறப்புபெப்ரவரி 24, 1976 (1976-02-24) (அகவை 48)
கீவ், உக்ரைன் எஸ்எஸ்ஆர், சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஅமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்சான் ஓசே பல்கலைக்கழகம் (dropped out)
பணிவாட்சாப் தலைமை நிர்வாக அதிகாரி & பேசுபுக் நிர்வாக இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2009 - தற்போது வரை
அமைப்பு(கள்)வாட்சாப் இங்
அறியப்படுவதுவாட்சப் துணை உருவாக்குனர்
சொந்த ஊர்பாசுடிவ், உக்ரைன்
சொத்து மதிப்புஜேன் கோம் US$9.7 பில்லியன் (மே 2016)

வாழ்க்கைக் குறிப்புகள்

ஜேன் கோம் உக்ரைனில் ஒரு யூத ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தாம் 16 அகவையில் இருக்கும்போது கோம் தம் தாயுடன் உக்ரைனிலிருந்து அமெரிக்காவில் குடியேறினார். வறுமையின் காரணமாக வணிகக் கடைகளில் தரையைத் துப்புரவு செய்யும் வேலையைச் செய்தார். வறுமையில் உழலும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சலுகை உணவுப் பொருள்களைப் பெற்று வாழ்ந்தார். யாகூ குழுமத்தில் ஒன்பது ஆண்டுகள் பணி செய்தார். தமது 18 ஆம் அகவையில் கணினி நிரலாக்கம் செயவதில் ஆர்வம் காட்டினார்  சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.

எர்னஸ்ட் அண்ட் யங் என்ற குழுமத்தில் பணியாற்றிய போது, பிரியன் ஆக்டன் என்பவரைச் சந்தித்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். யாகூ குழுமத்திலிருந்து இருவரும் விலகி தென் அமெரிக்காவில் ஓராண்டு பயணம் செய்தார்கள். முகநூல் குழுமத்தில் பணியில் இணைய இருவரும் விண்ணப்பம் செய்தனர். ஆனால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை  அதன் பின்னர் 2009 சனவரியில் கோம் ஐபோன் ஒன்று வாங்கினார். அந்நிகழ்ச்சி வாட்சப் தொடங்குவதற்கான எண்ணத்தையும் திட்டத்தையும் வகுக்க ஏதுவாக அமைந்தது. 2009 பிப்பிரவரியில்  கலிபோர்னியாவில்  ஜென் கோம் தம் நண்பர் பிரியன் ஆக்டனுடன் இணைந்து வாட்சப் குழுமத்தைத் தொடங்கினார்.

வாட்சப் மற்றும் முகநூல்

வாட்சப் குறுகிய காலத்தில் உலக  மக்களிடையே விரைவாகப் பயன்பாட்டுக்கு வந்ததைக் கவனித்த முக நூல் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், ஜேன் கோமை 2012 ஆம் ஆண்டில் சந்தித்தார். பல சந்திப்புகளுக்குப் பிறகு 19 பில்லியன் டாலர் விலைக்கு வாட்சப் பங்குகளை வாங்குவதாக முக நூல் அறிவித்தது.

மேற்கோள்

Tags:

வாட்சப்வாட்ஸ்ஆப்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிலாபட்டா (நில உரிமை)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)இதயம்விஷ்ணுகன்னியாகுமரி மாவட்டம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இலட்சம்தொடை (யாப்பிலக்கணம்)இராவணன்நயன்தாராதமிழ்நாடு காவல்துறைமு. வரதராசன்தங்கராசு நடராசன்சீனிவாச இராமானுசன்தமிழ்சேக்கிழார்கவலை வேண்டாம்சயாம் மரண இரயில்பாதைகவிதைஇரண்டாம் உலகப் போர்காசோலைபுலிதீபிகா பள்ளிக்கல்செவ்வாய் (கோள்)காதல் தேசம்மயங்கொலிச் சொற்கள்இந்திய ரிசர்வ் வங்கிமஞ்சள் காமாலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இந்திய அரசியல் கட்சிகள்இலிங்கம்காமராசர்கார்லசு புச்திமோன்தசாவதாரம் (இந்து சமயம்)மாசாணியம்மன் கோயில்முலாம் பழம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்உத்தரகோசமங்கைவரலாற்றுவரைவியல்வெண்குருதியணுஜோக்கர்அறிவுசார் சொத்துரிமை நாள்சின்னம்மைதேம்பாவணிமொழிபெயர்ப்புஒன்றியப் பகுதி (இந்தியா)இந்திய நிதி ஆணையம்முல்லைப் பெரியாறு அணைபாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவண்ணாமலைமீனா (நடிகை)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கம்பராமாயணத்தின் அமைப்புதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்இரட்டைக்கிளவிதிருவிழாதண்டியலங்காரம்இட்லர்அகத்தியர்கோவிட்-19 பெருந்தொற்றுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மயக்கம் என்னர. பிரக்ஞானந்தாஇந்தியக் குடியரசுத் தலைவர்மேகக் கணிமைபகத் பாசில்சீரகம்மாதவிடாய்ஐக்கிய நாடுகள் அவைஆற்றுப்படைசின்ன வீடுசுரைக்காய்கருக்காலம்நன்னூல்கடையெழு வள்ளல்கள்சைவ சமயம்தரணிஉமறுப் புலவர்🡆 More