ஜி-7

ஜி-7 எனில் முன்னேறிய நாடுகள் எனக்கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பாகும்.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.

G7
எழு நாடுகளின் கூட்டமைப்பு
சுருக்கம்G7
முன்னோர்ஜி8 (ருசியா நீக்கப்பட்டது)
உருவாக்கம்25 March 1973
(51 ஆண்டுகள் முன்னர்)
 (25 March 1973)நூலகக் குழு
ஜி-6 நாடுகளின் முதல் உச்சிமாநாடு: 15 November 1975
(48 ஆண்டுகள் முன்னர்)
 (15 November 1975)
நிறுவனர்"நூலகக் குழு":
  • ஐக்கிய அமெரிக்கா (ஜார்ஜ் சூல்ட்ஸ்)
  • மேற்கு செருமனி (ஹெல்மூத் சுமித்)
  • பிரான்சு வாலேரி கிஸ்கார்டு டி எஸ்டேட்டிங்)
  • ஐக்கிய இராச்சியம் (அந்தோணி பார்பெர்
  • ஐக்கிய அமெரிக்கா (ரிச்சர்ட் நிக்சன்)
  • மேற்கு செருமனி (வில்லி பிராண்ட்)
  • பிரான்சு (ஜார்ஜ் பொம்பிடௌ)
  • ஐக்கிய இராச்சியம் (எட்வர்டு ஹீத்

முதல் க்-6 உச்சிமாநாடு:
  • ஐக்கிய அமெரிக்கா ஜெரால்டு போர்டு
  • ஐக்கிய இராச்சியம் ஹரால்டு வில்சன்
  • இத்தாலி ஆல்தோ மோரோ
  • சப்பான் டாக்கியோ மிக்கி
நிறுவப்பட்ட இடம்
  • வாசிங்டன், டி. சி. (நூலகக் குழு)
  • ராம்பௌலெட், பிரான்சு (ஜி-7 நாடுகளின் முதல் உச்சிமாநாடு]])
வகைInformal club
நோக்கம்அரசியல், பொருளாதாரம்
துறைகள்பன்னாட்டு அரசியல்
உறுப்பினர்கள் (2021)
7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
நிதியுதவிஉறுப்பினர் நாடுகள்
வலைத்தளம்g7germany.de
முன்னாள் பெயர்
  • நூலகக் குழு
  • G6
  • ஜி8

சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கிறது.

1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன. அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.

ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.

ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், பூமி வெப்பமடைதல் மற்றும் உலகபாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும். மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்.

சிறப்பு அழைப்பாளர்கள்

ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள். பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

சவால்களும், விமர்சனங்களும்

தற்போதைய காலத்திற்கு தொடர்பில்லாமல் இருக்கிறது என்று ஜி7 குழு விமர்சிக்கப்பட்டாலும், இதனால் சில நன்மைகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. எய்ட்ஸ், காச நோய், மலேரியாவுக்கு எதிராக போராட சர்வதேச நிதி திரட்ட இந்த ஜி7 குழு உதவி இருக்கிறது. இதனால் 2002ஆம் ஆண்டில் இருந்து 27 மில்லியன் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்த்தை அமல்படுத்த இந்த மாநாடு உந்துகோலாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஜி7 நாடுகளுக்குள் அதிகளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இறக்குமதிக்கான வரி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கடந்தாண்டு கனடாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் முரண்பட்டார். சமகால சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரங்களை இந்த மாநாடு பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த ஜி7-ல் இடம் பெறவில்லை. மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி-20-ல் இடம் பெற்றிருந்தாலும் ஜி7-ன் உறுப்பினர்களாக இல்லை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜி-7 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Group of Seven
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
ஜி-7 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Tags:

ஜி-7 சிறப்பு அழைப்பாளர்கள்ஜி-7 சவால்களும், விமர்சனங்களும்ஜி-7 இதனையும் காண்கஜி-7 மேற்கோள்கள்ஜி-7 வெளி இணைப்புகள்ஜி-7அமெரிக்காஇத்தாலிகனடாஜப்பான்ஜெர்மனிபிரான்ஸ்பிரிட்டன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ருதுராஜ் கெயிக்வாட்பட்டினத்தார் (புலவர்)பழமொழி நானூறுஅழகிய தமிழ்மகன்சூரைவிவேகானந்தர்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்சீரகம்பாண்டியர்சார்பெழுத்துஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பொன்னுக்கு வீங்கிநன்னூல்தங்கம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)முடியரசன்மருதம் (திணை)நிதி ஆயோக்கேழ்வரகுமருதமலைசுயமரியாதை இயக்கம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நிணநீர்க் குழியம்விஜய் வர்மாஇட்லர்தமிழச்சி தங்கப்பாண்டியன்வெ. இறையன்புதிராவிட முன்னேற்றக் கழகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஏலகிரி மலைபுனித ஜார்ஜ் கோட்டைகலாநிதி மாறன்பலாஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)குலசேகர ஆழ்வார்தேம்பாவணிதமிழிசை சௌந்தரராஜன்தமிழ் எழுத்து முறைமகேந்திரசிங் தோனிதிருவாசகம்அப்துல் ரகுமான்பாரத ரத்னாகோயம்புத்தூர்ஜெயகாந்தன்கள்ளுவல்லினம் மிகும் இடங்கள்தேவாங்குசேரன் (திரைப்பட இயக்குநர்)பௌத்தம்அம்மனின் பெயர்களின் பட்டியல்இசுலாமிய வரலாறுவீரமாமுனிவர்மண் பானைபரிவர்த்தனை (திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்பெயர்ச்சொல்நாலடியார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருமூலர்ஆத்திசூடிவன்னியர்வெ. இராமலிங்கம் பிள்ளைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சேரர்இயேசுவெண்பாபஞ்சாங்கம்சிறுகதை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மார்பகப் புற்றுநோய்கணையம்திருவிழாபெரியாழ்வார்ஔவையார்தொழிலாளர் தினம்நெசவுத் தொழில்நுட்பம்சாத்துகுடிஒற்றைத் தலைவலி🡆 More