செப்-உன்-நிசா: முகலாய இளவரசி, கவிஞர்

செப்-உன்-நிசா (Zeb-un-Nissa; 15 பிப்ரவரி 1638 - 26 மே 1702) முகலாய இளவரசியும், பேரரசர் ஔரங்கசீப்பிற்கும் அவரது மூத்த இராணியுமான தில்ராஸ் பானு பேகத்துக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார்.

இவர் ஒரு கவிஞரும் கூட. இவர் "மக்ஃபி" ("மறைக்கப்பட்ட ஒன்று") என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதினார்.

செப்-உன்-நிசா
முகலாயப் பேரரசின் ஷா
செப்-உன்-நிசா: ஆரம்ப ஆண்டுகளில், மரபு, இவரைப் பற்றிய எழுத்துகள்
தனது உதவியாளர்களுடன் இளவரசி செப்-உன்-நிசா
பிறப்பு15 பிப்ரவரி 1638
தௌலதாபாத், முகலாயப் பேரரசு, தற்போதைய இந்தியா
இறப்பு26 மே 1702(1702-05-26) (அகவை 64)
தில்லி, முகலாயப் பேரரசு, தற்போதைய இந்தியா
புதைத்த இடம்
மரபுதைமூர் வம்சம்
தந்தைஔரங்கசீப்
தாய்தில்ராஸ் பானு பேகம்
மதம்சுன்னி இசுலாம்

தில்லியின் சலிம்கர் கோட்டையில் தனது வாழ்க்கையின் கடைசி 20 ஆண்டுகளில் தனது தந்தையால் சிறையில் அடைக்கப்பட்ட இளவரசி செப்-அன்-நிசா ஒரு கவிஞராக நினைவுகூரப்படுகிறார். மேலும் இவரது எழுத்துக்கள் மரணத்திற்குப் பின் திவான்-இ-மக்ஃபி என்ற பெயரில் சேகரிக்கப்பட்டன. (மக்ஃபியின் முழுமையான (கவிதை) படைப்புகள் " ).

ஆரம்ப ஆண்டுகளில்

பிறப்பு

செப்-உன்-நிசா ( "மணிமகுடம் / பெண்குலத்தின் அழகு"), இளவரசரும் முகி-உத்-தின்னின் (எதிர்கால பேரரசர் ஔரங்கசீப்) மூத்தக் குழந்தையாக 15 பிப்ரவரி 1638இல் தக்காணத்தின் தௌலதாபாத்தில் இவருடைய பெற்றோரின் திருமணம் முடிந்து சரியாக ஒன்பது மாதங்களுக்கு பிறகு பிறந்தார். இவரது தாயார், தில்ராஸ் பானு பேகம், ஔரங்கசீப்பின் முதல் மனைவியும், முக்கிய துணைவியாரும் ஆவார். மேலும் ஈரானின் ஆளும் வம்சமான (பெர்சியா) முக்கிய சபாவித்து வம்சத்தின் இளவரசியாக இருந்தார். செப்-உன்-நிசா ஔரங்கசீப்பின் விருப்பமான மகள், என்ற காரணமாக, தனது தந்தையை புண்படுத்தியவர்களை மன்னிக்கும்படி அவரை கட்டாயப்படுத்த்தினார்.

கல்வியும் சாதனைகளும்

செப்-உன்-நிசா: ஆரம்ப ஆண்டுகளில், மரபு, இவரைப் பற்றிய எழுத்துகள் 
அபனிந்திரநாத் தாகூர் வரைந்த் செப்-உன்-நிசாவின் ஓவியம்.

ஔரங்கசீப் அவையின் பெண்களில் ஒருவரான அபீஸா மரியம் என்பவர் இவரது கல்விக்குப் பொறுப்பானார். இவர், மூன்று வருடங்களில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்து தனது ஏழாவது வயதில் ஹபீஸ் ஆனர். இது இவரது தந்தையின் புத்திசாலித்தனத்திலிருந்தும் இலக்கிய ரசனை ஆகியவற்றிலிருந்தும் பெற்றதாக அறியப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை இவரது தந்தை ஒரு பெரிய விருந்துடனும், பொது விடுமுறையுடனும் கொண்டாடினார். இளவரசிக்கு அவரது தந்தையால் 30,000 தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. தனது அன்புக்குரிய மகளுக்கு நன்கு கற்பித்ததற்காக இவரது ஆசிரியருக்கும் 30,000 தங்கக் காசுகளைக் கொடுத்தார்.

இவர், அப்போதைய அறிவியலை முகமது சயீத் அஷ்ரப் மசந்தரானியிடம் கற்றார். அவர் ஒரு சிறந்த பாரசீக கவிஞரரும் கூட. இவர் மெய்யியல் , கணிதம், வானியல், இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். மேலும், பாரசீகம், அரபு , உருது ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். வனப்பெழுத்திலும் இவருக்கு நல்ல புலமை இருந்தது. இவருடைய நூலகம் மற்ற அனைத்து தனியார் சேகரிப்புகளையும் விஞ்சியிருந்தது. மேலும் இலக்கியப் படைப்புகளைத் தயாரிக்க அல்லது தனக்காக கையெழுத்துப் பிரதிகளை நகலெடுக்க தாராளமான சம்பளத்தில் பல அறிஞர்களைப் பயன்படுத்தினார். இவரது நூலகம் சட்டம், இலக்கியம், வரலாறு, இறையியல் போன்ற ஒவ்வொரு விஷயத்திலும் இலக்கியப் படைப்புகளைப் பெற்றிருந்தது.

இவர், ஒரு கனிவான நபராகவும் எப்போதும் தேவைப்படும் மக்களுக்கு உதவுபவராகவும் இருந்தார். இவர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவினார். இவர் மக்களுக்கு உதவி செய்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்திரிகர்களை மெக்காவுக்கும், மதீனாவிற்கும் அனுப்பினார். இவர் இசையிலும் ஆர்வம் காட்டினார். இவருடைய காலத்துப் பெண்களில் இவர் சிறந்த பாடகி என்று கூறப்பட்டது.

மரபு

இவரது கவிதை புத்தகம் 1929 இல் தில்லியிலும் 2001 இல் தெகுரானிலும் அச்சிடப்பட்டது. அதன் கையெழுத்துப் பிரதிகள் பிரான்சின் தேசிய நூலகம், பிரித்தானிய அருங்காட்சியகம், ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழக நூலகம், இந்தியாவில் மோட்டா நூலகம் ஆகியவற்றில் உள்ளன. இலாகூரில் இவர் அமைத்த சௌபுர்கி அல்லது நான்கு கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட தோட்டம், சுவர்கள் மற்றும் வாயில்கள் மீதமுள்ள பகுதிகளால் இன்றும் நிலைத்துள்ளது.

இவரைப் பற்றிய எழுத்துகள்

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

செப்-உன்-நிசா: ஆரம்ப ஆண்டுகளில், மரபு, இவரைப் பற்றிய எழுத்துகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zeb-un-Nisa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

செப்-உன்-நிசா ஆரம்ப ஆண்டுகளில்செப்-உன்-நிசா மரபுசெப்-உன்-நிசா இவரைப் பற்றிய எழுத்துகள்செப்-உன்-நிசா மேற்கோள்கள்செப்-உன்-நிசா உசாத்துணைசெப்-உன்-நிசா வெளி இணைப்புகள்செப்-உன்-நிசாஔரங்கசீப்புனைப்பெயர்முகலாயப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிலக்கடலைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சனீஸ்வரன்பட்டினப் பாலைகலிங்கத்துப்பரணிஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்முகம்மது நபியின் இறுதிப் பேருரைநிர்மலா சீதாராமன்திருமுருகாற்றுப்படைசுரதாகோயில்கோயம்புத்தூர் மாவட்டம்அகநானூறுஅண்ணாதுரை (திரைப்படம்)திருநங்கைசிலிக்கான் கார்பைடுஇரச்சின் இரவீந்திராஔவையார்ஊராட்சி ஒன்றியம்நீக்ரோபுதிய ஏழு உலக அதிசயங்கள்ரமலான் நோன்புபால் கனகராஜ்முதுமலை தேசியப் பூங்காஇராவண காவியம்தமிழ்த்தாய் வாழ்த்துகண்ணப்ப நாயனார்பங்குச்சந்தைஆனைக்கொய்யாபழமொழி நானூறுசீமான் (அரசியல்வாதி)பந்தலூர்நற்கருணைஇந்தியாசு. வெங்கடேசன்சினைப்பை நோய்க்குறிதமிழர் நிலத்திணைகள்கல்விடி. எம். செல்வகணபதிஇயேசுவின் சாவுபெரும்பாணாற்றுப்படைஇசுலாமிய நாட்காட்டிமெய்யெழுத்துபூலித்தேவன்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956வேதம்தேவாரம்நீர் விலக்கு விளைவுகல்லீரல்பதினெண்மேற்கணக்குமருத்துவம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இயற்கை வளம்நவரத்தினங்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)ஆடுஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கம்பராமாயணம்கட்டுரைவட்டாட்சியர்கருப்பசாமிகார்லசு புச்திமோன்இந்திய ரூபாய்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஎடப்பாடி க. பழனிசாமிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மதீனாதிருட்டுப்பயலே 2தஞ்சைப் பெருவுடையார் கோயில்வன்னியர்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மதுராந்தகம் தொடருந்து நிலையம்உரைநடைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்வேலு நாச்சியார்தன்னுடல் தாக்குநோய்🡆 More