சுரேஷ் ரைனா: இந்தியத் துடுப்பாட்ட வீரர்

சுரேஷ் குமார் ரெய்னா (Suresh Kumar Raina (காசுமீரி: سریش کمار رائنا )ⓘ (பிறப்பு: நவம்பர் 27, 1986) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

சூலை 2005 முதல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடி வருகிறார். 2006ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரது முதல் தேர்வு ஆட்டம் 26 சூலை 2010இல் இலங்கைக்கு எதிராகவே துவங்கியது. உள்நாட்டுப் போட்டிகளில் ரஞ்சிக் கோப்பைக்கு உத்தரப் பிரதேசத் துடுப்பாட்ட அணிக்கும் துலீப் கோப்பைக்கு மத்திய பிராந்தியத்திற்கும் ஆடுகிறார். ஆற்றல்மிகு இடதுகை மட்டையாளரான இவரது களத்தடுப்பிற்கு புகழ்பெற்றவர். அவ்வப்போது புறச் சுழற் பந்து வீசுவதும் உண்டு.இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் குஜராத் லயன்சு அணித தலைவராக இருந்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவித் தலைவராகவும் உள்ளார். இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவராகவும் இருந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு (துடுப்பாட்டம்) ஓட்டங்கள் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரைனா: ஆரம்பகால வாழ்க்கை, துடுப்பாட்ட வாழ்க்கை, இந்தியன் பிரீமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுரேஷ் குமார் ரெய்னா
பட்டப்பெயர்சானு, சின்ன தல
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|265]])26 ஜூலை 2010 எ. இலங்கை
கடைசித் தேர்வுஜனவரி 10 2015 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|159]])29 ஜூலை 2005 எ. இலங்கை
கடைசி ஒநாபஅக்டோபர் 25 2015 எ. [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]]
ஒநாப சட்டை எண்48
இ20ப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} இ20ப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|8]])1 திசம்பர் 2006 எ. தென்னாபிரிக்கா
கடைசி இ20பமார்ச் 18 2018 எ. [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]]
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002/03–நடப்புஉத்தர பிரதேச துடுப்பாட்ட அணி
2008–நடப்பில்சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் ஒ.ப.து கள் முதல்தரம் ப.அ
ஆட்டங்கள் 18 223 59 153
ஓட்டங்கள் 768 5568 4,057 4,143
மட்டையாட்ட சராசரி 16.48 35.45 43.15 36.99
100கள்/50கள் 1/7 5/36 7/27 4/28
அதியுயர் ஓட்டம் 120 116* 203 129
வீசிய பந்துகள் 1041 2084 1,260 1,158
வீழ்த்தல்கள் 13 36 18 25
பந்துவீச்சு சராசரி 16.38 19.13 34.27 38.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/1 3/36 3/31 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23 100 63/– 62/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 22 சனவரி 2011

இவரின் முதல் ஒருநாள் போட்டி இவரின் பத்தொன்பதாவது வயதில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டமும் இலங்கை அணிக்கு எதிரானது தான். இவரின் முதல் போட்டியிலேயே நூறு (துடுப்பாட்டம்) அடித்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வெற்றி பெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றிருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் ராஜ்நகர், காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியாவில் உள்ளார். இவருக்கு தினேஷ் ரைனா,நரேஷ் ரைனா, முகேஷ் ரைனா ஆகிய மூன்று மூத்த சகோதரர்களும், ரேனு எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். ராகுல் திராவிட்டின் சுயசரிதை நூலான டைம்லஸ் ஸ்டீல் என்பதில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வாழ்க்கை

துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்காக காசிபாத்தில் இருந்து இலக்னோ 2000 ஆம் ஆண்டில் சென்றார். அங்குள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியில் சேர்ந்தார். பின் உத்தரப் பிரதேசம் அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணத்திற்கு பதினைந்தரை வயதில் தேர்வானார். 2003 ஆம் ஆண்டில் ரஞ்சிக் கோப்பையில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேசம் அணிக்காக விளையாடினார்.

இந்தியன் பிரீமியர் லீக்

சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக $650,000 அமெரிக்க டாலர் மதிப்பில் முதல் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்காக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். முதல் பருவத்தில் சிறப்பான பம்ங்களிப்பை அளித்தார். அந்த ஆண்டில் மாத்தியூ எய்டன், மைக்கேல் ஹசி, மற்றும் ஜேக்கப் ஓரம் ஆகிய வீரர்களுடன் விளையாடினார். தோனி இல்லாத மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்சின் அணித் தலைவராக இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்ற போட்டியில் ஐம்பது ஓட்டங்கள் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

முதல்மூன்று பருவத்தில் 421, 434, 520 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதிக இலக்குகளைப் பிடித்தார். இந்த இரண்டு சதனைகளும் தற்போது வரை முறியடிக்கப்படவில்லை. அடம் கில்கிறிஸ்ற்கு அடுத்தபடியாக அதிக ஆறுகள் அடித்தார். 2011 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மகேந்திரசிங் தோனி, முரளி விஜய், அல்பி மோகல் ஆகிய வீரர்களுடன் விளையாடினார்.

2011 ஐபிலிலும், சுரேஷ் ரெய்னா 438 ரன்கள் குவித்து, அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதே போல், தொடர்ந்து ஏழு தொடர்களில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் ஆவார்.2011 ஆம் ஆண்டு , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இவரது சிறப்பான ஆட்டம் சென்னை அணியை இறுதிப் போட்டிக்குச் செல்ல பெரிதும் உதவியாக அமைந்தது. இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு நாள் போட்டிகள்

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயற்திறன்

நூறுகள்

தேர்வு துடுப்பாட்ட நூறுகள்

  • ஓட்டங்கள் நெடுவரிசையில், * எனக் குறிப்பிடப்பட்டால் ஆட்டமிழக்காது எனப் பொருள் கொள்க.
  • ஆட்டங்கள் நெடுவரிசையில் ஆட்ட எண் என்பது விளையாட்டளாரின் வாழ்நாளில் எத்தனையாவது ஆட்டம் எனப் பொருள் கொள்க.
தேர்வு துடுப்பாட்ட நூறுகள் - சுரேஷ் ரைனா
எண் ஓட்டங்கள் ஆட்ட எண் எதிர் நகரம்/நாடு நிகழிடம் ஆண்டு
[1] 120 1 சுரேஷ் ரைனா: ஆரம்பகால வாழ்க்கை, துடுப்பாட்ட வாழ்க்கை, இந்தியன் பிரீமியர் லீக்  இலங்கை கொழும்பு, இலங்கை சிங்களவர் விளையாட்டரங்கம் 2010

பன்னாட்டு இருபது 20

சுரேஷ் ரைனாவின் பனாட்டு இருபது 20 நூறுகள்
# ஓட்டங்கள் போட்டிகள் எதிரணி நகரம்/நாடு மைதானம் ஆண்டு முடிவு
1 101 13 சுரேஷ் ரைனா: ஆரம்பகால வாழ்க்கை, துடுப்பாட்ட வாழ்க்கை, இந்தியன் பிரீமியர் லீக்  தென்னாப்பிரிக்கா செயிண்ட் லூசியா டெரன் சமி துடுப்பாட்ட மைதானம் 2010 வெற்றி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

சுரேஷ் ரைனா: ஆரம்பகால வாழ்க்கை, துடுப்பாட்ட வாழ்க்கை, இந்தியன் பிரீமியர் லீக் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suresh Raina
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

சுரேஷ் ரைனா ஆரம்பகால வாழ்க்கைசுரேஷ் ரைனா துடுப்பாட்ட வாழ்க்கைசுரேஷ் ரைனா இந்தியன் பிரீமியர் லீக்சுரேஷ் ரைனா ஒரு நாள் போட்டிகள்சுரேஷ் ரைனா நூறுகள்சுரேஷ் ரைனா பன்னாட்டு இருபது 20சுரேஷ் ரைனா மேற்கோள்கள்சுரேஷ் ரைனா வெளியிணைப்புகள்சுரேஷ் ரைனா1986இந்தியத் துடுப்பாட்ட அணிஇந்தியன் பிரீமியர் லீக்இந்தியாஇலங்கைஉத்தரப் பிரதேசம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்காசுமீரிகுஜராத் லயன்சுசென்னை சூப்பர் கிங்ஸ்ஜம்மு காஷ்மீர்துடுப்பாட்டம்தேர்வுத் துடுப்பாட்டம்நவம்பர் 27நூறு (துடுப்பாட்டம்)படிமம்:Surash Raina.oggபன்னாட்டு இருபது20புறத்திருப்பம்ரஞ்சிக் கோப்பை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்அன்னம்கார்த்திக் (தமிழ் நடிகர்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்முடக்கு வாதம்தஞ்சாவூர்வட்டார வளர்ச்சி அலுவலகம்விஜய் (நடிகர்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஏலாதிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கம்பராமாயணத்தின் அமைப்புஉ. வே. சாமிநாதையர்வழக்கு (இலக்கணம்)விஷால்பெரியாழ்வார்கட்டுவிரியன்குறிஞ்சி (திணை)பத்துப்பாட்டுஆழ்வார்கள்கபிலர் (சங்ககாலம்)தேவசகாயம் பிள்ளைஆற்றுப்படைபிரியா பவானி சங்கர்ஏற்காடுதமிழர் பண்பாடுதினமலர்வரகுஇயற்கை வளம்நம்ம வீட்டு பிள்ளைஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)புதுப்புது அர்த்தங்கள்தமிழ் மாதங்கள்பாரதிதாசன்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்ஒற்றைத் தலைவலிபூக்கள் பட்டியல்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மாதவிடாய்ஈ. வெ. இராமசாமிவேதம்குகன்மருது பாண்டியர்தண்டியலங்காரம்மதராசபட்டினம் (திரைப்படம்)உள்ளம் கொள்ளை போகுதேபுலிமுருகன்மருமகன் (திரைப்படம்)வேற்றுமையுருபுஆடுஜீவிதம் (திரைப்படம்)தேவாரம்முதலாம் இராஜராஜ சோழன்நவதானியம்மனித வள மேலாண்மைமிஷ்கின்நந்தா என் நிலாவெப்பம் குளிர் மழைவேளாண்மைஅன்னை தெரேசாசீரகம்சிறுபஞ்சமூலம்பஞ்சாப் கிங்ஸ்திருக்குர்ஆன்பிரபு (நடிகர்)கூகுள்தொடை (யாப்பிலக்கணம்)வேலை கிடைச்சுடுச்சுவாகமண்ஆப்பிள்இணையம்இந்து சமயம்அண்ணாமலை குப்புசாமிகலம்பகம் (இலக்கியம்)சுதேசி இயக்கம்பழனி முருகன் கோவில்மரகத நாணயம் (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்உதயணகுமார காவியம்🡆 More