தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும்.

இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை.

தேவாரம் பாடல் பெற்ற
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில்
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தென்குடித்திட்டை, திட்டை
பெயர்:தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தென்குடித்திட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வசிஷ்டேஸ்வரர்
தாயார்:உலகநாயகியம்மை
தல விருட்சம்:முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
தீர்த்தம்:சக்கர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறுப் பெயர்களும் உள்ளன. தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்கலால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும்.

அமைவிடம்

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

கோயில் வரலாறு

தொன்நம்பிக்கை (ஐதிகம்)

திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்ப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

கோவில் அமைப்பு

இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுகபட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார் கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.

சிறப்புக்கள்

  • ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீதுபடுகிறது.
  • இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளத நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாக கூறப்படுகின்றது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என தொன்நம்பிக்கை (ஐதிகம்).
  • திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.

கோயிலின் நிர்வாகம்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் இக்கோயிலின் நிர்வாகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் தினந்தோறும் காலை 7:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே..

வெளி இணைப்புக்கள்

Tags:

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் அமைவிடம்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் கோயில் வரலாறுதென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் கோவில் அமைப்புதென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் சிறப்புக்கள்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் கோயிலின் நிர்வாகம்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருத்தலப் பாடல்கள்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் வெளி இணைப்புக்கள்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்வெ. இராமலிங்கம் பிள்ளைசப்ஜா விதைமுருகன்பொருளாதாரம்உணவுஏ. வி. எம். ராஜன்விஸ்வகர்மா (சாதி)ஆப்பிள்போதைப்பொருள்கீழடி அகழாய்வு மையம்நயன்தாராவிடுதலை பகுதி 1இரவுக்கு ஆயிரம் கண்கள்மயக்கம் என்னபணம்மோகன்தாசு கரம்சந்த் காந்திகாளமேகம்பாரதிய ஜனதா கட்சிஉயிர்ச்சத்து டிமனித மூளைநவக்கிரகம்ஏ. ஆர். ரகுமான்திருவாசகம்சேவல் சண்டைவிட்டலர்ஹூதுஇயேசுரோசாப்பூ ரவிக்கைக்காரிசிங்கப்பூர்செஞ்சிக் கோட்டைஅதிமதுரம்சூர்யா (நடிகர்)இந்திஇனியவை நாற்பதுஊராட்சி ஒன்றியம்இந்து சமயம்முகலாயப் பேரரசுமருதம் (திணை)விநாயகர் (பக்தித் தொடர்)கமல்ஹாசன்இந்தியாவின் பண்பாடுஈ. வெ. இராமசாமிவிருத்தாச்சலம்இராமர்பங்குனி உத்தரம்புரோஜெஸ்டிரோன்கல்விஇன்னொசென்ட்பஞ்சாயத்து ராஜ் சட்டம்வேளாளர்இலக்கியம்மனித உரிமைசைவத் திருமுறைகள்மருந்துப்போலிசோழர்பாண்டியர்வாரிசுஊட்டச்சத்துஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தெருக்கூத்துகிறிஸ்தவம்திருப்பாவைபாலை (திணை)சிலேடைஉரைநடைநூஹ்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்விஜய் வர்மாபனிக்குட நீர்தமிழ் படம் 2 (திரைப்படம்)கு. ப. ராஜகோபாலன்பள்ளர்சப்தகன்னியர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மாதுளைதமிழ்த்தாய் வாழ்த்து🡆 More