துடுப்பாட்டம் நூறு

துடுப்பாட்டத்தில், நூறு அல்லது சதம் (Century) என்பது மட்டையாளர் ஒருவரால் ஒரு நுழைவில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அடைதலைக் குறிக்கும்.

இரண்டு மட்டையாளர்கள் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை அடைந்தால், அது நூற்று இணைப்பாட்டம் என அழைக்கப்படும். பொதுவாக, துடுப்பாட்ட வீரர்களின் புள்ளிவிபரங்களில் நூறுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களும் புள்ளிவிவரங்களில் நூறுகளாகவே கணக்கெடுக்கப்படுகின்றன.

துடுப்பாட்டம் நூறு
தேர்வுத் துடுப்பாட்டத்திலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் கூடிய எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் இந்தியத் துடுப்பாட்ட வீரரான சச்சின் தெண்டுல்கர் ஆவார்.

மட்டையாளர் ஒருவர், ஒரு நுழைவில் 50 ஓட்டங்களை அடைதல், ஐம்பது அல்லது அரைச்சதம் (Half-century) எனப்படும். இதன் பின்னர், அவர் 100 ஓட்டங்களை அடைவாராயின், புள்ளிவிவரங்களில் அது ஐம்பதாகக் கணக்கெடுக்கப்படமாட்டாது.

நூறுகள் தொடர்வான பதிவுகள்

முதல் தரத் துடுப்பாட்டம்

முதல் தரத் துடுப்பாட்டத்தில் முதன்முதலில் 100 நூறுகளை அடித்தவர் டபிள்யூ. ஜி. கிரேஸ் ஆவார். இவர் 1895இல் இவ்விலக்கை அடைந்தார். முதல் தரத் துடுப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் ஜாக் ஹாப்ஸ் ஆவார். இவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் 199 நூறுகளை அடித்துள்ளார்.

தேர்வுத் துடுப்பாட்டம்

தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதலாவது நூறானது, துடுப்பாட்ட வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே, ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரரான சார்லஸ் பானர்மேனால் இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 51 நூறுகளை அடித்துள்ளார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 49 நூறுகளை அடித்துள்ளார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

துடுப்பாட்டம் நூறு  நூறு – விளக்கம்
துடுப்பாட்டம் நூறு  சதம் – விளக்கம்

Tags:

துடுப்பாட்டம் நூறு நூறுகள் தொடர்வான பதிவுகள்துடுப்பாட்டம் நூறு இவற்றையும் பார்க்கதுடுப்பாட்டம் நூறு மேற்கோள்கள்துடுப்பாட்டம் நூறு வெளியிணைப்புகள்துடுப்பாட்டம் நூறு100 (எண்)துடுப்பாட்டம்மட்டையாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாயுமானவர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கொடைக்கானல்ஐ (திரைப்படம்)ஆ. ராசாஅகத்தியர்சூரரைப் போற்று (திரைப்படம்)இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்திருப்பதிஜெ. ஜெயலலிதாசிதம்பரம் நடராசர் கோயில்ஆதம் (இசுலாம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மாமல்லபுரம்கணையம்தேனி மக்களவைத் தொகுதிஅருங்காட்சியகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைசாரைப்பாம்புஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிரோசுமேரிமார்பகப் புற்றுநோய்ஆத்திசூடிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கந்த புராணம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்முகம்மது நபியின் இறுதிப் பேருரைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கொல்லி மலைமயங்கொலிச் சொற்கள்பங்குச்சந்தைவிலங்குமூசாராதாரவிஇரட்டைக்கிளவிஆறுமுக நாவலர்இயேசு காவியம்வி. சேதுராமன்ஆற்றுப்படைஅகநானூறுசிவாஜி (பேரரசர்)பாரிவியாழன் (கோள்)குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்தியப் பிரதமர்குண்டூர் காரம்கிறித்தோபர் கொலம்பசுதுரைமுருகன்ஆண் தமிழ்ப் பெயர்கள்ஏ. ஆர். ரகுமான்மனித உரிமைவேற்றுமையுருபுபாவலரேறு பெருஞ்சித்திரனார்வட்டாட்சியர்ரமலான்சைவ சமயம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐக்கிய நாடுகள் அவைமாநிலங்களவைசு. வெங்கடேசன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சுரதாதமிழச்சி தங்கப்பாண்டியன்இந்திய மக்களவைத் தொகுதிகள்சனீஸ்வரன்தங்கம்முதுமொழிக்காஞ்சி (நூல்)முதலாம் உலகப் போர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பத்து தலஇந்தோனேசியாகட்டுவிரியன்மார்ச்சு 29தருமபுரி மக்களவைத் தொகுதிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிபரிவுமூலம் (நோய்)🡆 More