கோவாலா

கோவாலா (Koala, அறிவியல் பெயர்: Phascolarctos cinereus) என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும்.

கோவாலா
Koala
கோவாலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
உள்வகுப்பு:
மார்சுபியாலியா
வரிசை:
டிப்ரோடோடோன்டியா
துணைவரிசை:
வோம்பாடிஃபார்ம்ஸ்
குடும்பம்:
பாஸ்கோலர்க்டிடே
பேரினம்:
பாஸ்கோலர்க்டோஸ்
இனம்:
P. cinereus
இருசொற் பெயரீடு
Phascolarctos cinereus
(Georg August Goldfuss, 1817)

இது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.

பெயர்க் காரணம்

கோவாலா என்பது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் ஒரு சொல் ஆகும். தாருக் மொழியில் "கூலா" (gula) என அழைக்கப்பட்ட்ட்து. "தண்ணீர் (தேவை) இல்லை" என்பது இதன் பொருள். அதாவது, கோவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்டஸ் (eucalyptus) மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன.

முதலில் ஆங்கிலக் குடியேறிகள் இவற்றைக் "கோவாலாக் கரடி" எனவே அழைத்தனர். குரங்குக் கரடி, "மரக் கரடி" என்ற பல்வேறு பெயர்களிலும் இவை அழைக்கப்பட்டன.

அறிவியல் பெயரான "பாஸ்கொலார்க்டஸ்" (Phascolarctos) கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது (phaskolos "அடைப்பம்", arktos "கரடி"). கோவாலாக்களின் வகை இலத்தீன் மொழியில் cinereus, அதாவது "சாம்பல்-நிறம்".

கோவாலா 
சிட்னி கோவாலா பூங்காவில் தூங்கும் ஒரு கோவாலா

காணப்படும் இடங்கள்

இவை ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து, வடக்கு நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா, தெற்கு அவுஸ்திரேலியா மாநிலங்களில் பெருமளவு காணப்படுகின்றன.

அமைப்பு

இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப்பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது.

உணவு

கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்டஸ் இலைகளாகும். இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன. கோவாலா இந்த இலைகளையும் தெரிவு செய்தே சாப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்டஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோவாலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் (சர்க்கரை) உண்டு. இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன.

அழிந்து வரும் இனம்

உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் ஒன்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை, பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோவாலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப்படுவதால் இவற்றின் தொகை குறைந்து வருகிறது. மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயினாலும் இந்த இனம் அழிந்துவருகிறது.

மேற்கோள்கள்

கோவாலா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Koala
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

Tags:

கோவாலா பெயர்க் காரணம்கோவாலா காணப்படும் இடங்கள்கோவாலா அமைப்புகோவாலா உணவுகோவாலா அழிந்து வரும் இனம்கோவாலா மேற்கோள்கள்கோவாலா வெளி இணைப்புகள்கோவாலாஆஸ்திரேலியாபாலூட்டிமிருகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்இளங்கோவடிகள்இந்தியப் பிரதமர்ஸ்ரீதிருச்சிராப்பள்ளிஅட்சய திருதியைஉலகம் சுற்றும் வாலிபன்அறுபடைவீடுகள்யாழ்ஆத்திசூடிசிலப்பதிகாரம்ஆகு பெயர்புலிஇளையராஜாமழைஇராமர்வைர நெஞ்சம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கல்லீரல்கார்ல் மார்க்சுபரிபாடல்திருப்பாவைஉரைநடைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்புணர்ச்சி (இலக்கணம்)ரோகிணி (நட்சத்திரம்)வரலாற்றுவரைவியல்கடையெழு வள்ளல்கள்சங்க இலக்கியம்மாற்கு (நற்செய்தியாளர்)திணைகள்ளர் (இனக் குழுமம்)கொடைக்கானல்சுயமரியாதை இயக்கம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்காமராசர்இந்திய மக்களவைத் தொகுதிகள்பெரும்பாணாற்றுப்படைகஞ்சாபூக்கள் பட்டியல்பணவீக்கம்திருமுருகாற்றுப்படைவெந்து தணிந்தது காடுதொழிற்பெயர்தமிழ்நாடு சட்டப் பேரவைபுவிஜி. யு. போப்வடலூர்யாதவர்நேர்பாலீர்ப்பு பெண்கபிலர் (சங்ககாலம்)உலா (இலக்கியம்)கா. ந. அண்ணாதுரைகைப்பந்தாட்டம்தேம்பாவணிவாணிதாசன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மகரம்வயாகராயானையின் தமிழ்ப்பெயர்கள்திருமலை நாயக்கர்அரிப்புத் தோலழற்சிநீர்நிலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்இலக்கியம்மஞ்சள் காமாலை108 வைணவத் திருத்தலங்கள்அண்ணாமலையார் கோயில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்குழந்தை பிறப்புபால் (இலக்கணம்)ஆளி (செடி)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)🡆 More