குரு நானக்

குரு நானக் குரு நானக்) (15 ஏப்ரல் 1469 - 22 செப்டம்பர் 1539) சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்.இவர் கபீரின் உற்ற சீடர் ஆவார்.

குரு நானக் தேவ்
குரு நானக்
10 சீக்கிய குருக்களைக் காட்டும் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அரிதான தஞ்சாவூர் ஓவியம்.
குரு நானக் தேவ் நடுவில் காணப்படுகிறார்.
பிறப்பு15 ஏப்ரல் 1469
நங்கானா சாகிப்
(இன்றைய பஞ்சாப்)
இறப்பு22 செப்டம்பர் 1539
கர்த்தாப்பூர்
(இன்றையை பாக்கித்தான்)
இனம்பஞ்சாபியர்
பெற்றோர்தந்தை: களு மேத்தா
தாய்: மாதா திரிப்தா

ஆரம்ப வாழ்க்கை

சீக்கியர்கள், குரு நானக்கை தொடர்ந்து வந்த குருக்கள் அனைவரும், குரு நானக்கின் தெய்வீகத்தன்மை மற்றும் மத அதிகாரம் பெற்றிருப்பதாக நம்புகின்றனர், மற்றும் "நானக்" என்று பெயரிடப்படுகின்றனர். குரு நானக் ஏப்ரல் 15,1469 அன்று , தற்போது ராய் பொய் டி டல்வாண்டி என வழங்கப்பெறும் கிராமத்தில் ஒரு இந்து மதக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்தநாள் "குரு நானக் தேவ் பிரகாஷ் திவாஸ்" எனக் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது அவ்விடம் லாகூர், பாக்கிஸ்தான் அருகில், நன்கான சாஹிப் என அழைக்கப்படுகிறது. இன்று , இவரது பிறந்த இடம் குருத்வாரா ஜனம் அஸ்தானால் குறிப்பிடப்படுகிறது. சிலர், 20 அக்டோபர், இவர் ஞானம் பெற்ற நாள் என்றும் கருதுகின்றனர். இவரது தந்தை, மேத்தா கல்யாண் தாஸ் பேடி, பிரபலமாக களு மேத்தா என அழைக்கப்படுகிறார். அந்த பகுதியில், ராய் புலர் பாட்டி என்ற முஸ்லீம் நில உரிமையாளரிடம் பயிர் வருவாய் கணக்காளராக ஒரு வேலை செய்தார். நானக்கின் தாயார் திரிப்பா தேவி ஆவார். இவரது சகோதரியான பீபி நானகி தன் சொந்த விருப்பத்தில் ஒரு ஆன்மீகவாதியாக ஆனார்.

நானகி, தௌலத் கான் லோடி என்பவரிடம் மேலாளராக வேலைச் செய்த ஜெய் ராம் என்பவரை மணந்து, அவர் ஊரான சுல்தான்பூர்க்குச் சென்றார். குரு நானக், தனது மூத்த சகோதரி மீது கொண்ட பற்றாலும், பாரம்பரிய இந்திய வழக்கத்தாலும், தனது சகோதரியுடன் வாழ சுல்தான்பூர் சென்றார். இவருக்கு 16 வயதிருக்கும் போது, தௌலத்கான் என்பவரிடம் வேலை கிடைத்தது. புரதன் ஜனம் சக்கி குறிப்பிடுவதைப் போல, அது தான் இவர் வாழ்வின் மிகவும் பயனுள்ள நட்களாய் அமைந்தது..

இவரது வாழ்க்கைப் பற்றியான விளக்கவுரைகள், ஒரு இளம் வயதிலேயே இவர் பெற்ற மலர்ச்சி, விழிப்புணர்வு ஆகிய விவரங்களை கொடுக்கிறது. ஐந்து வயதில், குரு நானக் தெய்வீக பாடங்களில் விருப்பம் தெரிவித்தார் என கூறப்படுகிறது. இவரது தந்தை, களு மேத்தா, வழக்கத்தைப் போல கிராம பள்ளியில் இவரை சேர்த்தார்..ஒரு குழந்தையாக இவர், தன் ஆசிரியரின் வியப்புக்கு, அகரவரிசையின் முதல் எழுத்து, அரேபிய வழக்கில் கணித ஒன்றை ஒத்து இருப்பதை வைத்து கடவுள் ஒன்று என்ற வாதத்தை முன்வைத்தார்.. நானக்கின் பிற குழந்தைப் பருவ குறிப்புகள் , ஒரு விஷப் பாம்பு, கடுமையான சூரிய ஒளியில் தூங்கும் குழந்தையின் தலை கவசமாக இருப்பதை ராய் புலர் பார்த்தது போன்ற விசித்திரமான மற்றும் அதிசயமான நிகழ்வுகளை கூறுகிறது.

சுயசரிதைகள்

குரு நானக் 

குரு நானக் பற்றிய மிகப் பழைய வாழ்க்கைச் சுயசரிதை ஆதாரங்கள், ஜனம்சகிஸ் (வாழ்க்கை நிகழ்வுகள்) மற்றும் எழுத்தர் பாய் குர்தாஸ் என்பவர் எழுதிய வர்ஸ் (விளக்கவுறைகள் ).மிகவும் பிரபலமான ஜனம்சாக்கி, குருவின் நெருங்கிய தோழமையன பாய் பாலாவால் எழுதப்பட்டதாக கூறப்படுகிரது. எனினும்,பயன்படுதப்பட்ட எழுத்து பாணி மற்றும் மொழி ஆகியவை மாக்ஸ் ஆர்தர் போன்ற சில அறிஞர்களை , அவை அவரது இறப்புக்கு பிறகு இசையமைக்கபட்டதென கருதச் செய்கிறது. பாய் குர்தாஸ்,குரு கிரந்தின் ஒரு நம்பிக்கையான எழுத்தர், அவரது வர்ஸில் குரு நானக் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். இது ,குரு நானக் வாழ்ந்ததிற்கு சில காலம் கழித்து தொகுக்கப்பட்டது என்றாலும் அவை ஜனம்சகிஸ்யை விட குறைவாக விவரங்கள் கொண்டுள்ளது.ஜனம்சகிஸ்,அவரது பிறப்பின்போது அவர் ஜாதகத்தை எழுத வந்த ஒரு ஜோதிடர், குழந்தையை பார்க்க வலியுறுத்தினார் என்றும்,பார்த்தவுடன் கைகளால் அவரை வழிபட்டதாகவும் மற்றும் "நான் இளம் குரு நானக்கை பெரியவனாக காண முடியாதே என்று தான் வருந்துகிறேன்" என குறிப்பிட்டதாகவும் கூறுகிறது.

சீக்கியம் மற்றும் அவரது பயணங்கள்

ராய் புலர் பாட்டி, உள்ளூர் உரிமையாளர், மற்றும் குரு நானக் சகோதரி பீபி நானகி, இவரிடம் தெய்வீக குணங்கள் இருப்பதை அறிந்த முதல் நபர்கள் ஆவர். அவர்கள், இவருக்கு மேலும் ஊக்கம் அளித்து படிப்பு மற்றும் பயணம் தொடர துணைபுரிந்தனர். சீக்கிய பாரம்பரியம் படி, கி.பி. 1499 அளவில்,30 வயதில், இவர் அறிவு விளக்கம் பெற்றதாக கூறுகிறது. இவர் நீருள் சென்று திரும்பாத பிறகு, இவரது ஆடைகள் பெயின் காளி என்ற உள்ளூர் ஓடை அருகே கண்டுபிடிக்கப்பட்டன. ஊர் மக்கள், இவர் ஆற்றில் மூழ்கி போனார் என்று கருதினர். தௌலத் கான் ஓடையில் தேடச் சொன்னார். ஆனால் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு, குரு நானக் அமைதியாக மீண்டும் தோன்றினார்.

அடுத்த நாள், இவர் பேசினார் "யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் " என்றார். குரு நானக், தான் கடவுளின் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார். அங்கு, தனக்கு தேன் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரம் வழங்கப்பட்டு, "இது கடவுளின் ஆற்றல் நிறப்பட்ட கோப்பை, இதை குடி, நான் உன்னுடன் இருக்கிறேன், நான் உன்னை ஆசீர்வதித்து உன்னை உயர்த்துகிரேன். யார் உன்னை நினைக்கிறார்களோ, அவர்கள் என் ஆசிற்வாதம் பெறுவர்" என்று கடவுள் சொன்னதாக அவையினரிடம் சொன்னர். இந்நிகழ்வுக்குப் பிறகு இவர் "குரு" என அழைக்கப்பட்டு சீக்கியம்தோன்றியது..

இவரின் பயணம் பற்றிய துல்லியமான கணக்குகள் விவாதத்திற்குரியதாகவே உள்ளது என்றாலும், இவர் பரவலாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடந்த 4 பயணம், அதாவது, வங்காளம், அசாம் நோக்கி கிழக்கு முதல் சுற்றும், இரண்டாம் பயணம் தெற்கு தமிழ்நாடுக்கும், காஷ்மீர், லடாக், திபெத் நோக்கி மூன்றாவது பயணம் வடக்கு நோக்கியும், அரேபிய தீபகற்பத்தில் உள்ள பாக்தாத், மெக்கா மற்றும் மதினா நோக்கி இறுதி பயணம் மேற்கும் சென்றார்..

குரு நானக், அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இவர் லாசா (திபெத்) செல்லும்போது, தவாங் வழியாக பூடானைக் கடந்து சம்துராங் சு வழியாக திபெத்துள் நுழைந்தார். இவர் லாசாவிலிருந்து திரும்பி, புகழ்பெற்ற மடாலயமான சமிய் சென்று பின்னர் அருணாச்சல பிரதேசத்தின் பெமொசுபு மென்சுக்கா நுழைந்தார். இவர் இந்த இடத்தில் சில காலம் தவம் இருந்தார். இவர் மென்சுக்காவிலிருந்து திபெத் சென்று, தெற்கு திபெத் குடிமக்களை அழைத்து வந்து அவர்களை மென்சுக்காவில் குடியேற்றினார். பின்னர் அசாமுக்கு மீண்டும் செல்லும் முன்னர், சைத்யா மற்றும் பிரம்-குந்த் சென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

குரு நானக்,16 வயதில் சுலக்கினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. இவருடைய திருமணம் பட்டாலா நகரத்தில் நடைபெற்றது. பெண் வீட்டார், சுல்தான்பூர் லோதி நகரத்தில் இருந்து வந்தனர். இவர்களுக்கு சிரீசந்த், இலட்சுமிசந்த் இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

கடவுளுடன் ஐக்கியம் (ஜோதி ஜொயொத் சமயி)

குரு நானக் தனக்கு அடுத்து, குருவாக பை லென்னா என்பவரை "குரு ஆங்க்" என மறுபெயரிட்டு நியமித்தார். விரைவில், அடுத்த குரு என பாய் லென்னா பிரகடனப்படுத்தியதுக்கு பிறகு, குரு நானக் தனது 70 வயதில், தற்போதைய பாக்கித்தான் நாட்டின் கர்த்தார்பூரில், 22 செப்டம்பர் 1539 அன்று கடவுளுடன் இணைந்தார்..

போதனைகள்

குரு நானக்கின் போதனைகள் குர்முகியில் பதிவுச் செய்யப்பட்டதைப் போல, சீக்கிய மத இலக்கியமான குரு கிரந்த் சாஹிப்யில் காணலாம். இதில் சில பொதுவான கொள்கைகள் அறிந்துகொள்ளவேண்டியவை. புரிந்துகொள்ளமுடியாத,உருவற்ற,அழிவில்லாத, அனைத்து முக்கிய மதங்களிலும் குறிப்பிடப்படும் கடவுள் ஒருவரே.

குரு நானக், "தான்" என்ற எண்ணத்தால் விளையும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி ,தன் பக்தர்களை "கடவுள்"-ன் நாமத்தால் வழிபட வேண்டும் என்றும், சமயங்களில் குருவின் வழிகாட்டலின் படி செயல்பட வேண்டும் என்றார்.ஆனால் அந்த வழிபாடுகள் தன்னலமற்றதாக இருக்க வேண்டும் .இவை, கடவுளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும் ,அவர் இல்லையேல் இவ்வுலகில் எதுவும் இல்லை, என்ற கொள்கையை தழுவியது. குரு நானக், இந்த மனித நேயத்தில் பரவலாக உள்ள மற்றும் சமய நடவடிக்கைகளை கூட வீணாக்க முடிந்த , பாசாங்குத்தனம் மற்றும் பொய்யான பாசம் குறித்து எச்சரித்தார்.நானக்கை பொறுத்தவரை, துறவி நடைமுறைகளை புறக்கணித்து, இல்லற வாழ்வில் ஈடுப்பட்டு ,தெய்வப் பற்று பெற்று வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

பிரபல பாரம்பரியத்தில், குரு நானக்கின் போதனைகள் மூன்று வழிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது:

  • வந்த் சக்கோ: தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.
  • கிரட் கரோ: சுரண்டல் அல்லது மோசடி இல்லாமல், நேர்மையாக ஒரு வழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதல்.
  • நாம் ஜப்னா: பரிசுத்த நாமத்தை ஜபித்தல், இதனால் எல்லா நேரங்களிலும் கடவுளை (இறைவன் -ஓயாத பக்தி) நினைவில் கொள்ளுதல்.

குரு நானக், கடவுளின் நாமத்தால் செய்யப்படும் வழிபாட்டுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வைத்தார்.(நாம் ஜப்னா). ஒரு மனிதன், ஞானம் பெற்ற பெரியவர்களின் (குர்முக் அல்லது கடவுள் சித்தித்தது) வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்றும்,தன் சுய புத்தியின்(மன்முக்) அடிப்படையில் நடக்கக் கூடாது என்றும் போதித்தார்.இல்லையேல், வாழ்க்கை ஏமாற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.

குறிப்புகள்

Tags:

குரு நானக் ஆரம்ப வாழ்க்கைகுரு நானக் சுயசரிதைகள்குரு நானக் சீக்கியம் மற்றும் அவரது பயணங்கள்குரு நானக் தனிப்பட்ட வாழ்க்கைகுரு நானக் கடவுளுடன் ஐக்கியம் (ஜோதி ஜொயொத் சமயி)குரு நானக் போதனைகள்குரு நானக் குறிப்புகள்குரு நானக்சீக்கிய மதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செஞ்சிக் கோட்டைஆங்கிலம்தேவாரம்தமிழர் பருவ காலங்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)108 வைணவத் திருத்தலங்கள்இந்திய அரசியலமைப்புஅம்பேத்கர்சிவாஜி (பேரரசர்)முகலாயப் பேரரசுமதுரைவிஷ்ணுகார்த்திக் (தமிழ் நடிகர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)இலங்கைதிரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய மக்களவைத் தொகுதிகள்அவதாரம்நெடுநல்வாடைபூலித்தேவன்குணங்குடி மஸ்தான் சாகிபுதொல். திருமாவளவன்போதைப்பொருள்வெண்பாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)காற்றுஆழ்வார்கள்ஆண்டாள்வயாகராஇளையராஜாகண்ணனின் 108 பெயர் பட்டியல்அகத்தியம்வெந்தயம்சுற்றுலா2024 இந்தியப் பொதுத் தேர்தல்சென்னை சூப்பர் கிங்ஸ்சாத்துகுடிகடல்திருவாசகம்முதற் பக்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)முக்குலத்தோர்பூக்கள் பட்டியல்உலா (இலக்கியம்)திதி, பஞ்சாங்கம்மாற்கு (நற்செய்தியாளர்)அகநானூறுஇராசாராம் மோகன் ராய்புதன் (கோள்)வேலு நாச்சியார்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇயேசுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்காதல் கொண்டேன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நீர்நிலைசுடலை மாடன்கவலை வேண்டாம்பறையர்அறுபது ஆண்டுகள்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாட்டு நலப்பணித் திட்டம்ஆத்திசூடிகொல்லி மலைதஞ்சைப் பெருவுடையார் கோயில்மாதவிடாய்பிரேமம் (திரைப்படம்)கோயில்கள்ளுடி. என். ஏ.ஜோக்கர்அமலாக்க இயக்குனரகம்வெப்பம் குளிர் மழைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கைப்பந்தாட்டம்🡆 More