அரசியல் கட்சி (Political party) என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு.
அரசறிவியலில், அரசியல் கட்சிகளுக்கான பல வரைவிலக்கணங்கள் உள்ளன. வரலாற்று அடிப்படையில் முதலாவது வரைவிலக்கணம், அவற்றின் அமைப்புமுறை, செயல்பாடு, கூட்டமைவு என்பவற்றில் கவனம் செலுத்தியது. 1770 ஆம் ஆண்டில் எட்மண்ட் புர்க்கே (Edmund Burke) என்பார் எழுதிய இன்றைய முரண்பாடுகளுக்கான காரணங்கள் தொடர்பிலான எண்ணங்கள் (Thoughts on the Cause of the Present Discontent) என்னும் அவரது நூலில் அரசியல் கட்சி என்பது, தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில், தேசிய நலனுக்காக ஒன்றாக உழைக்கும் நோக்கில், ஒன்றுபட்டவர்களின் குழு. என்று குறிப்பிட்டுள்ளார். 1816 ஆம் ஆண்டில், பெஞ்சமின் கான்ஸ்டண்ட் என்பவர் அரசியல் கட்சி தொடர்பான கருத்தியல் வரைவிலக்கணத்தை உருவாக்கினார். ஆனால் இது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தி வருகிறதேயன்றி, கொள்கைகள் அற்ற அதிகாரத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சந்தர்ப்பவாத அல்லது நடைமுறைசார்ந்த கட்சிகளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை. இவருடைய கருத்துப்படி கட்சி என்பது, ஒரே அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களின் கூட்டமைப்பு ஆகும். மார்க்சியவாதிகள், அரசியலை ஒரு வர்க்கப் போராட்டமாகக் கொள்ளும் தமது அடிப்படைக் கொள்கைக்கு ஏற்ப, அரசியல் கட்சி என்பது, சமுதாய வர்க்கத்தினரில் கூடிய வர்க்க உணர்வு கொண்டவர்களின் அமைப்பு என்றனர். மக்ஸ் வெப்பர் (Max Weber) கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த புரூக்கின் கருத்தை ஏற்றுக்கொண்டு வரைவிலக்கணத்தை மேலும் விரிவுபடுத்தினார். இவர் கூற்றுப்படி, கட்சி என்பது சுதந்திரமாகச் சேர்ந்து கொள்ளுதலின் அடிப்படையில், ஒன்று சேர்தலும் இணைந்து செயற்படுதலும் ஆகும். அமைப்புமுறையிலான ஒரு குழுவுக்குள் அடங்கும் அதன் தலைவர்களுக்கு அதிகாரத்தைப் பெறுவதை இதன் இலக்காகவும், கட்சிக்குள் தீவிரமாக இயங்குபவர்களுக்கு பொருள்சார் நலன்களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகவும் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அரசறிவியலாளரும் பிற ஆய்வாளர்களும், கட்சிகளின் நுட்பியல் மற்றும் தேர்தல் சார்ந்த இயல்புகளில் கூடிய கவனம் செலுத்தினர். அந்தனி டோன்ஸ் (Anthony Downs) என்பார், ஒரு அரசியல் கட்சியென்பது, முறையான தேர்தல் முறையொன்றில் பதவிகளைப் பெறுவதன் மூலம் அரச எந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும் மனிதர்கள் குழு என்று கூறினார்.
விடுதலை தமிழ் தேசிய புலிகள் கட்சி
ஒத்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் தோற்றுவிக்கப்படும் அமைப்பு அரசியல் கட்சி எனப்படும்.
மக்களாட்சி வழியிலான அரசியலில், அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு கடமைகள் உள்ளன. இவை மக்களாட்சி முறையை நிலைத்திருக்கச் செய்யவும், அதைச் சிறப்பாக செயற்படவும் பெரிதும் உறுதுணை புரிகின்றன.
மக்களாட்சி முறையின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படும். அவையாவன:
ஒரு கட்சி முறையின் கீழ் ஒரே ஒரு கட்சி மட்டும் அரசியல் முறையில் இருக்கும். இக் கட்சி முறை மக்களாலும் அரசியலமைப்புச் சட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாகக் காணப்படும். எத்தகைய எதிர்ப்பும் மாற்றுக் கருத்தும் இன்றி அரசு அதிகாரத்தைப் பெற்று இயங்கும். ஒரு கட்சி ஆட்சி முறையில் மற்ற கட்சிகள் செயல்படாமல் இருக்கும். சீனா மற்றும் கியூபா போன்ற நாடுகளில் இந்த ஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கிறது.
இரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும். இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது. ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் தொழிலாளர்கள் கட்சி மற்றும் பழமைவாத கட்சி ( Conservative Party) என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.
இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஆட்சிமுறைக்குப் பல கட்சி முறை எனப்படும். பல கட்சி முறையானது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
எதிர்கட்சிகளின் செயற்பாட்டை ஒட்டியே மக்களாட்சியின் வெற்றி உள்ளது. மக்களாட்சியில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைப்பதென்பது அரிது. இச்சமயங்களில் குறைவான இடங்களைப் பிடித்த அரசியல் கட்சிகள் மக்களாட்சி நடைமுறையில் எதிர்கட்சியாக அமையும். மத்திய அரசின் மக்களவை, மாநில அளவில் சட்டசபை ஆகியவற்றில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக இடங்களைப் பெறும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எதிர் கட்சி என்றழைக்கப்படுகிறது. ஓர் ஆளும் கட்சி அமைச்சருக்கு நிகரான மற்றும் சமமான அதிகாரங்களை எதிர்கட்சித் தலைவர் பெறத் தகுதியுடையவராவார்.
அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சிகள் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற்று முக்கியமானதாகத் திகழும். அது போலவே எதிர்கட்சிகளின் பங்கும் கடமையும் குடியாட்சியில் இன்றியமையாததாக இருக்கும். ஆளும் கட்சி அல்லது கட்சிகள் எதேச்சதிகார மனப்பான்மையோடு நடந்து கொள்ளாமல் இருக்கவும், அவர்களின் அதிகாரங்களை வரைமுறைப்படுத்திடவும், தொடர்ந்து கண்காணித்திடவும் எதிர் கட்சிகளின் பங்கு இன்றியமையாதது. இதுதவிர, ஆளும் கட்சியின் கொள்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனம் செய்வதென்பது எதிர்கட்சிகளின் தலையாயப் பணியாகும். மேலும், ஆளும் கட்சியின் கொள்கைகள், தவறுகள், அநீதிப் போக்குகள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் முதலானவற்றை நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளுக்கு அப்பால் ஊடகங்கள் வழியாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இவர்களின் இன்றியமையாதப் பணிகளாகும்.
எதிர்கட்சிகளுக்கு அரசாங்க செலவினங்களை அறிந்து கொள்ள முழு அதிகாரமும் உரிமையும் உள்ளது. இரு அவைகளின் கூட்டத் தொடர்களின்போது, கேள்வி நேரங்களில், ஆளும் கட்சியினரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்து விமர்சனம் செய்வதன் மூலம், அவ் ஆளும் கட்சியினரின் தவறான அதிகார மேலாதிக்கத்திற்கு எதிர்கட்சியினர் தடை போட்டு மக்களாட்சியை நிலைப்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்டுக்கோப்பையும் தனித்துவத்தையும் பெற்றிருத்தல் இன்றியமையாதது ஆகும். அதுபோல், பின்வரும் அடிப்படைகள் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான ஒன்றாகும். அவையாவன:
அரசியல் கட்சி எனப்படுவது, சில குறிக்கோள்களுடன் அமையப்பெற்ற வாக்காளர்களின் ஓர் ஒப்பற்ற நிறுவன அமைப்பாகும். இதன் வேறு சில அடிப்படைகள் என்பன,
This article uses material from the Wikipedia தமிழ் article அரசியல் கட்சி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.