ஒலி மாசு

இக்கட்டுரை, Noise pollution எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.


ஒலி மாசு
லண்டனிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் போயிங் 747-400 விமானம் குடியிருப்புகளின் அருகாமையில் பறக்கிறது.

ஒலி மாசுறுதல் (Noise pollution) என்பது மனிதன் அல்லது விலங்கின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் தீங்கு விளைவித்து இடையூறு செய்யும் இரைச்சலைக் குறிக்கிறது. வேண்டத்தகாத இந்த இரைச்சல் உலகெங்கிலும் இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களின் இயந்திரங்கள், தொடர் வண்டிகள் போன்ற போக்குவரத்து அமைப்பால் உண்டாகிறது . குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.பொதுப் பணிக் குழு ஆட்சியமைப்பு, மிகையான சத்தத்தினால் ஏற்படும் மாசுபாடு மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான 1972 ஆண்டுச் சட்டம், ஆ. ப. எண் 1160, 92 ஆவது கா. 2ஆம் வேளை. ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.

உலகெங்கும் பரவலாக இரைச்சல் சத்தம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகின்றன. தானுந்து, பேருந்துகளில் இருந்து வரும் சத்தம் மட்டும் அல்லாமல் இதில் விமானங்கள் பறப்பதாலும், ரயில் வண்டிகள் ஓடுவதாலும் விளையும் சத்தம் அடங்கும். குறைகள் நிறைந்த நகரத் திட்டங்களாலும் மிகுந்த இரைச்சல் காரணமாக ஒலி மாசு ஏற்படுவதுண்டு, ஏனெனில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அருகில் தொழில் செய்யும் பட்டறை, கட்டிடங்கள் இருந்தால் குடியிருப்பு பகுதிகளில் சத்தம் மிகுதியால் ஒலி மாசு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும்.

வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், தரையை சுத்தம் செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒளிபரப்பு கருவிகள், விசைகள், ஒலிபெருக்கி, மின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்.

மனித உடல் நல பாதிப்புகள்

ஒலியால் உடல் நலன் பாதிப்பு, உடல் நலக்குறைவு காரணமாகவும், நடத்தை காரணமாகவும் ஏற்படலாம். நமக்கு தேவைப்படாத ஒலியை நாம் சத்தம் என்கிறோம். இந்த தேவை இல்லாத சத்தம் உடல் கூறு வகையிலும், அந்தக்கரணம் அல்லது மனஉளைச்சல் காரணமாகவும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இடை விடாது கேட்கும் சத்தம் காரணமாக நம் உடல் சோர்வடைகிறது, அதனால் உபத்திரவம் அடைந்து முன் கோபம், அல்லல்படுதல், அதிகமான மன அழுத்தம், மிகையான உளைச்சல் அல்லது அயர்வு, டின்னிடஸ், கேட்கும் திறனில் குறைபாடு, சரியான உறக்கம் இல்லாய்மை போன்ற பாதிப்புகளுடன் இதர உடல் நலக்குறைவுகளும் ஏற்படலாம். மேலும் அயர்வுடன் அதிகமான மன அழுத்தமும் சேர்ந்து உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன, ஆனால் டின்னிடஸ் காரணமாக மறதி, தீவிரமான மனத்தோய்வு மேலும் சில நேரங்களில் பீதியால் பிறரை தாக்குதவதற்கும் முனையலாம்.

விடாப்பிடியாக தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால், சத்தத்தால் ஏற்படும் காது கேட்பதில் மந்த நிலை, அதனால் மிகையான சத்தம் காரணம் காது கேளாமலும் போகலாம். தொழில்துறையால் ஏற்படும் சத்தம், பணியிடத்தில் மிகையான சத்தத்திற்கு ஆளாகும் வயதான பணியாளர்கள் அது போன்று அல்லாத பணியாளர்களை விட குறைவாக காது கேட்கும் திறனை பெறுகின்றனர், இருந்தாலும் காது கேட்கும் திறன் நேரம் செல்ல செல்ல குறைந்தும், சம வயதினர்கள் அடங்கிய குழுக்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த குறைபாடுகள் உணராமலும் போக வாய்ப்புக்கள் உண்டு.. போக்குவரத்துச் சத்தம், ஆலைகளின் இயந்திரங்களின் சத்தத்திற்கு உட்படாத மாபன் தேசத்து குலக்குடியினரை, அமெரிக்காவின் மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், நித்தமும் தவறாமல் மிகையான சத்தம் எழும் சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு படிப்படியாக காது கேட்கும் திறன் குறைந்து வரும் என்பது தெளிவாகி உள்ளது.

மிகையான சத்தம் காரணமாக இதய நரம்புகள் சார்ந்த இதய பாதிப்பு ஏற்படும் மேலும் ஒரே ஒரு தடவை எட்டு மணி நேரத்திற்கு மிகையான சத்தம் கூடிய சூழ்நிலையில் இருந்தால் இரத்த அழுத்தம் அழுத்தத்தில் ஐந்து முதல் பத்து புள்ளிகளுக்கான கணிசமான ஏற்றத்துடன் அயர்வு அதிகமாக காணப்படும் மேலும் நரம்புகள் இறுகுவதால் இரத்த அழுத்தமும் அதனால் கூடுகிறது, இதனால் இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

ஒலி மாசு ஒருவனை எரிச்சல் அடைய வைக்கிறது. 2005 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் படி நகரரப்புரங்களில் வசிக்கும் மக்கள் சத்தத்தின் அளவில் ஒரு டெசிபெல் ஒரு ஆண்டுக்கு குறைந்தாலும், அதற்காக நான்கு யூரோ வரை அளிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

சுற்றுச் சூழலில் பாதிப்புகள்

சத்தம் காரணமாக விலங்குகளிலும் அயர்வு அல்லது உளைச்சல் ஏற்பட்டு, இதனால் இரையை தேடி செல்லும் வினங்கினங்களிலும் அதன் இரையாக உள்ள விலங்குகளின் எண்ணிக்கையிலும் ஏற்படும் துல்லியமான சமநிலை வேறுபாடுகள் அவற்றின் அழிவுக்கு காரணமாக ஆகலாம், மேலும் விலங்குகளுக்கிடையே இனப்பெருக்கம் நடைபெறவும், தொலை தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கும் இயற்கையான சத்தங்களை ஊடுருவி குலைப்பதால் பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்ற மிகையான சத்தம் நிறைந்த சூழ்நிலையினால் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ காது கேட்காமலேயே போகலாம்.

மிகையான சத்தம் காரணமாக விலங்குகளின் வாழ்க்கை இயற்கையாக பயன்படுத்தக்கூடிய குடியிருப்பிற்கான வெட்ட வெளியிடங்கள் சுருக்கத்தினாலும், அதன் பயனாக ஆபத்தான சூழ்நிலையில் வாழும் சில விலங்கினங்களின் பேரழிவுக்கும் வித்தாக அமைகிறது. இதற்கான ஒரு எடுத்துக்காட்டு, கடலில் ஆயுதக் கப்பல்கள் எழுப்பிய மிகுந்த ஒலியால் கடல் வாழ் திமிங்கலங்கள் யாது செய்வது என்பதறியாமல் பரிதவித்து கடற்க் கரை ஓரம் விரைந்து அங்கு கூண்டோடு கூண்டாக மாண்ட நிகழ்ச்சியாகும்.

சத்தம் அல்லது இரைச்சல் காரணமாக விலங்குகள் தமது குரலை உயர்த்தி பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, இதனை லம்பார்ட் வோகல் ரெஸ்போன்ஸ் என்பர். கடலுக்கடியில் நீர் மூழ்கி கப்பல்களை வேவு பார்க்கும் மின்விசைகள் செயல்படும் பொது, கடல் திமிங்கலங்கள் பாடும் பாடல்கள் அதிகமான நீளம் கொண்டவையாக இருப்பதை விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். விலங்கினங்கள் உயர்ந்த குரலில் "பேச" வில்லை எனில், அவர்கள் எழுப்பிய கூக்குரல் சைகை மனிதர்கள் எழுப்பிய சத்தங்களால் மறைக்கப்படும். காதிற்கு எட்டாத இந்த சைகைகளால் வினங்கினங்களுக்கு இடையே நிலவும் எச்சரிக்கை பரிமாற்றங்கள் (இரையினை கண்டுபிடித்ததற்காகவோ, அல்லது நெட் பப்ளிங் செய்வதற்கான ஏற்பாடுகள்) பாதிக்கப்படுகிறது. எப்போது ஒரு விலங்கு உரக்க குரல் கொடுக்க தொடங்குகிறதோ, அப்போது அக்குரல் மற்ற உயிரினங்களின் குரலோசையை மறைத்துவிடுகிறது, அதனால் எழும் சூழ்நிலை காரணம் எல்லா உயிரனங்களும் உரக்க குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

யூரோப் நாட்டின் ராபின் பறவைகள் நகர் வாழ் சூழ்நிலையில் பகல் நேரத்தில் அதிகமான சத்தம் விளையும் இடங்களில், இரவில் தான் அவை கூவிப் பாட தொடங்குகின்றன, ஏன் என்றால் இரவில் தான் அமைதி நிலவுகிறது, அப்போது தான் அவர்கள் எழுப்பும் குரலில் உள்ள சைகை தெளிவாக மற்ற இடங்களுக்கு சென்றடைகிறது. இதே ஆய்வில் இருந்து மற்றொன்று தெரிய வருவது என்ன என்றால் பகலில் நிலவும் மிகையான சத்தமே இரவில் கூவுவதற்கான காரணமாக அமைகிறது, இரவு நேர ஒளியின் காரணம் ஏற்படும் மாசினால் இப்படி நடப்பதாக கணித்தது சரி அல்ல என்பதும் தெளிவாகிறது.

போக்குவரத்தின் இரைச்சலுக்கு ஆளாகும் வரிக்குதிரை சிட்டுக் குருவிகள், இந்த ஆரவாரத்தினால் தமது இணைகளிடம் இருந்து பிரிந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் உயினங்களின் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்காக தேவைப்படும் ஜீவாதாரப் பொருட்களின் பற்றாக்குறையாலும், இதர பணிகள் செய்வதற்கு இயலாமல் போவதாலும், அதனால் உயிரங்களின் வாழ்வதற்கான ஆதாரங்களில் குறைகள் தோன்றி, மிகுந்த உயிரியல் மற்றும் உருவாக்கம் சார்ந்த வாழ்க்கை வழி முறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

சத்தத்தின் அளவை தணிப்பது மேலும் அதனை கட்டுப்படுத்துவது

ஒலி மாசு
ஆஸ்திரேலியாவில் உள்ள மேல்போர்ன் நகரத்தில் சத்தக் குறைப்பிற்கான குழல், இடத்தின் தன்மையை குறைக்காமல் போக்குவரத்து எரிச்சலை கட்டுப்படுத்துவதற்காக மேம்படுத்தியது.

விஞ்ஞானம் மூலமாக சத்தத்தின் அளவினை இவ்வாறு குறைக்கவோ, இல்லாமலோ செய்யலாம்:

சாலையில் இரைச்சலை குறைப்பதற்கு பல விதமான யோசனைகள் உள்ளன, அவை: இரைச்சலை தடுக்கும் கருவிகளை பயன்படுத்துதல், வண்டிகளின் வேகத்தை கட்டுப் படுத்துவது, சாலையின் மேல பாகத்தை மாற்றி அமைத்தல், கனரக வண்டிகளை வரையறுத்தல், பிரேக் (தடை) பிடிப்பது, வேகத்தை கூட்டுவது ஆகியவற்றை கட்டுப்படுத்தி போக்குவரத்தினை சீராக சமன் செய்வது, வண்டி சக்கரத்தை மாற்றி அமைப்பது போன்றவையாகும்.

இந்த யுக்திகளை செயல்படுத்த முக்கியமாக கணினியை பயன்படுத்தி சாலையில் நிலவும் போக்குவரத்து இரைச்சலை கட்டுப்படுத்துதல், அதன் மூலமாக சாலையில் இயற்கையாக அமைந்துள்ள மேடு பள்ளங்களின் தன்மை, வானிலை மாற்றங்கள், போக்குவரத்து அடர்த்தி, போக்குவரத்து இடைஞ்சல் நிலவரங்கள், பயணம் மேற்கொள்ளும் நேரம், காலம் மற்றும் வேளை, மேலும் இரைச்சலை குறைக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சீராக போக்குவரத்தை செயல் படுவதற்கு வழி வகுப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

இவை சாலை போக்குவரத்து திட்டத்தின் திட்டத்தை துடங்கும் தருவாயில் இருந்தே செயல்படுத்தினால், செலவுகளை குறைப்பதோடு, போக்கு வரத்து நெரிசலினால் ஏற்படும் இடைஞ்சல்கள், கால விரயம் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்து, பயணிகளின் பயணத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.

விமானப் போக்குவரத்தில் ஏற்படும் இரைச்சலை ஜெட் இயக்கியை மாற்றி அமைப்பதால் குறைக்க வழி உண்டு, 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் இதற்காக மும்முரமாக பாடுபட்டனர். இந்த யுக்தியால் நகர்ப் புறங்களில் இரைச்சலின் அளவு குறைந்துள்ளது.

மேலும் பறக்கும் பாதையை மாற்றி அமைத்தல், பகல் நேரத்தில் ஓட்ட பாதையின் நேர அட்டவணையை சீர் செய்தல் போன்ற திட்டங்களை அமல்படுத்தியதால், விமான தளத்தின் அருகாமையில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நேட்டம் ஏற்பட்டுள்ளது.

எப்ஏஏ (FAA) நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் உட்புறங்களை மாற்றி அமைக்கும் திட்டம் அமலாக்கியதால், இந்த குடியிருப்புகளில் இரைச்சலை குறைக்கும் பணி வெற்றிகரமாக 1970 ஆண்டுகளில் செயல்படுத்தப் பெற்றது.

1930 ஆண்டுகளில் இருந்தே பணியாளர்களின் மேம்பாட்டிற்காக தொழிற்துறை ஏற்படுத்தும் சத்தத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர். இவற்றில் தொழில் கருவிகளை இயந்திரங்களை மாற்றி அமைத்தல், அதிர்ச்சியை குறைக்கும் கருவிகளை கூடுதலாக அமைத்தல் மற்றும் செயற் கூடத்தில் தடுப்புகளை அமைத்தல் போன்றவை அடங்கும்.

சத்தத்தில் இருந்து விடுபட்ட அமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனம், இதற்காக அரசுடன் அடிக்கடி பேச்சு வார்த்தைகள் நடத்தி அதற்கான அரசு ஆணைகளை பிறப்பிக்கும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சட்டத் தகுநிலை

சத்தத்தை பொறுத்த வரை பல அரசுகள் 1970 ஆண்டு வரை, இதனை ஒரு அருவருப்பான பொருளாகவே கண்டார்கள், சுற்று சூழல் பாதிப்பாக இதனை கருதவில்லை. அமெரிக்க நாட்டில் தற்போது நெடுஞ்சாலை மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சத்தம் விளையும் அளவைக் குறைப்பதற்கான கட்டடப் பணி களுக்கான சூத்திரங்கள், சட்ட குறியிடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு தனி நாட்டின் அரசும் கட்டிடப் பணிகள், நகரத் திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்கான சிறப்பு அரசாணைகளை செயல்படுத்தி வருகின்றன. கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சத்தத்தை கட்டுப்படுத்தும் வகையிலான தேசிய, உள்ளாட்சி மற்றும் நகர்புற அளவிலான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

சத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைத்துள்ள சட்ட சீர் திருத்தங்கள் மற்றும் அமைப்பு, நகராட்சிக்கு நகராட்சி வேறுபடுவதோடு சில நகரங்களில் இல்லாமலும் உள்ளன. மிகையான அளவில் சத்தம் பிறக்க வைக்கும் செயல்களை தடுக்கும் வகையில் பொதுவான ஆணை ஒன்றினை சில நகராட்சிகள் பிறப்பித்து இருக்கலாம், அல்லது குறிப்பாக சில செயல்பாடுகளுக்கு மற்றும் நேரங்களில் ஏற்படக்கூடிய சத்தத்தின் அளவினை நிர்ணயித்து இருக்கலாம்.

டாக்டர் பால் ஹெர்மான் என்பவர் 1975 ஆம் ஆண்டில் ஈபிஏ சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் எச்யுடி (குடியிருப்பு மற்றும் நகர மேம்பாடு) நிறுவனங்களிருந்து நிதி உதவி பெற்று போர்ட்லன்ட் (ஒரிகன்) மாநிலத்தில் உள்ள போர்ட்லன்ட் நகரத்திற்கான சத்தத்தின் அளவை கட்டுப் படுத்துவதற்கான அளவுகோள்களுடன் செயல் விதி முறைகளை விளக்கமாக எழுதி வைத்தார். இந்த போர்ட்லன்ட் சட்ட விதி முறைகளே நாளடைவில் அமெரிக்காவிலும், கானடா நாட்டிலும் உள்ள மாநகரங்கள் பின்பற்றுவதற்கான ஆதாரமாக அமைந்தது.

பல நகர அமைப்புகள் சத்தத்தின் டெசிபெல் அளவினை வாசர்படியாக அமைத்து, இரவில அதனை 10 மணி முதல் காலை 6 மணி வரை குடியிருப்புகளில் மீறாமல் இருக்க உள்நாட்டு அரசு சார்பான உத்தரவுகள், அரசாணை கள் சட்டப்படி வகை செய்துள்ளனர், மேலும் பகல் நேரத்தில் இந்த அளவினை சிறிது அதிகப்படுத்தியும் செயல்படுத்தி உள்ளனர், இருந்தாலும் இது சரியான முறையில் அமுல்படுத்தவில்லை. பல நகராட்சிகள் புகார்களை சரி வர கவனிப்பதில்லை. சில நகராட்சிகளில் இதனை கட்டுப்படுத்துவதற்கான தனிப்பட்ட அலுவலர் இருந்தும், அவர்கள் தவறு செய்பவர்களிடம் எச்சரிக்கையை மட்டும் விடுக்கின்றனர், ஏன் என்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு போடுவதற்கு அதிக செலவாகும்.

இதற்கு விதி விலக்காக தனிப்பட்ட எடுத்துக் காட்டு ஒரிகன் மாநிலத்து போர்ட்லன்ட் நகரமாகும், அங்கே மக்களை பாதுகாப்பதற்காக விரைந்து அரசு செயல் படுகிறது மற்றும் ஒவ்வொரு தவறு இழைத்தலுக்கும் தலா டாலர் 5000 வரை அபராதக் கட்டணம் வசூலிக்கின்றனர், மேலும் ஒரே நாளில் பலமுறை தவறு செய்தாலும் தனித் தனியாக அபராதம் வசூலிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

சத்த்தால் ஏற்படும் பல வழக்குகள் சத்தம் விளைவிப்பவன் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவன் இடையிலான பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன. நிலைமை கட்டுக்கடங்கவில்லை என்றால், இதன் தீர்வு நாட்டுக்கு நாடு வேறுபடும், இதனை தீர்க்க உள்ளூர் அதிகாரிகளும் அழைக்கப்படுவர், மிக்கவாறும் அது காவல் துறையாக இருக்கும். சத்தத்தால் ஏற்படும் மாசுபாட்டிற்கு இன்னும் சரியான தீர்வு காணவில்ல ஏன் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து முதல் பத்து விழுக்காடு உறுப்பினர்களே புகார் எழுத முன் வருகின்றனர். பல மக்களுக்கு சட்டத்தில் நிசப்தம் நிலவுவதற்கான உரிமை உண்டு என்பது தெரிவதில்லை மேலும் அவர்களுக்கு எப்படி புகார்களை அளிக்க வேண்டும் என்பதும் புரிவதில்லை.

கூடுதல் பார்வைக்கு

  • ஒலி சார்ந்த சுற்று சூழலியல்
  • ஒளி மாசுபாடு
  • உடல் நலத்தை பாதிக்கும் சுற்றுச்சூழலியலுக்கான பட்டியல்
  • லம்பார்ட் எபெக்ட்
  • சத்தம் (ஒலி)
  • ஒலியை கட்டுப்படுத்தும் கருவி
  • மெல்லிய ஓசை
  • நீடமைதி
  • நகர் வாழ் உயரியல்
  • சத்தத்தில் இருந்து விடுதலை பெற்ற அமெரிக்கா

ஒலி மாசு

இக்கட்டுரை, Noise pollution எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

புற இணைப்புகள்

வார்ப்புரு:Pollution

Tags:

ஒலி மாசு மனித உடல் நல பாதிப்புகள்ஒலி மாசு சுற்றுச் சூழலில் பாதிப்புகள்ஒலி மாசு சத்தத்தின் அளவை தணிப்பது மேலும் அதனை கட்டுப்படுத்துவதுஒலி மாசு சட்டத் தகுநிலைஒலி மாசு கூடுதல் பார்வைக்குஒலி மாசு குறிப்புகள் =ஒலி மாசுen:Noise pollution

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுபடைவீடுகள்கிருட்டிணன்கேரளம்கலைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஜீரோ (2016 திரைப்படம்)இந்தியன் பிரீமியர் லீக்பிரேமலுஇலங்கைஆபுத்திரன்வெப்பநிலைவிடுதலை பகுதி 1உ. வே. சாமிநாதையர்புதுமைப்பித்தன்பரிதிமாற் கலைஞர்நாயக்கர்தலைவாசல் விஜய்பட்டினப்பாலைஅண்ணாமலை குப்புசாமிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நீரிழிவு நோய்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பக்கவாதம்கம்பராமாயணம்தமிழ் இலக்கணம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இராவண காவியம்இந்தியக் குடியரசுத் தலைவர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்தொகைநிலைத் தொடர்பர்வத மலைஅட்சய திருதியைமுத்துராமலிங்கத் தேவர்வன்னியர்அக்கினி நட்சத்திரம்விளம்பரம்குற்றியலுகரம்சுந்தர் பிச்சைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்மொழிஆனைக்கொய்யாசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கணினிஏறுதழுவல்நாகப்பட்டினம்பட்டினத்தார் (புலவர்)சங்கம் (முச்சங்கம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)பூலித்தேவன்கள்ளர் (இனக் குழுமம்)சுற்றுச்சூழல் கல்விஞானபீட விருதுஅத்தி (தாவரம்)குக்கு வித் கோமாளிஎழுத்து (இலக்கணம்)மே நாள்ஷபானா ஷாஜஹான்காயத்ரி மந்திரம்நிணநீர்க்கணுதசாவதாரம் (இந்து சமயம்)மருதமலைமாதம்பட்டி ரங்கராஜ்கருக்காலம்பியர்நாயன்மார்குண்டலகேசிபழமொழிஏப்ரல் 30காடழிப்புசிவனின் தமிழ்ப் பெயர்கள்வட்டார வளர்ச்சி அலுவலகம்குறிஞ்சிப்பாட்டுபுற்றுநோய்அம்மனின் பெயர்களின் பட்டியல்திருத்தணி முருகன் கோயில்🡆 More