ஐ.எசு.ஓ 639-2

ஐ.எசு.ஓ 639-2 (ISO 639-2) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் இரண்டாம் பகுதியாகும்.

இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 464 மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்ற நூலகம் (Library of Congress) இந்த ஐ.எசு.ஓ 639-2 குறியீடுகள் வழங்க பதிகை ஆணய(registration authority)மாக செயல்படுகிறது (referred to as ISO 639-2/RA). அந்த பொறுப்பில் பரியப்படும் மாற்றங்களை பெற்று அவைகளை ஆய்வுக்குள்ளாக்குகிறது. தவிர பதிகை ஆணையமாக ஐ.எசு.ஓ 639-RA கூட்டு பரிந்துரை குழுவில் அங்கம் வகித்து ஐ.எசு.ஓ 639 குறிகள் பராமரிப்பில் பொறுப்பேற்கிறது.

ஐ.எசு.ஓ 639-1 ஈரெழுத்துக்களைக் கொண்டு அனைத்து மொழிகளையும் அடையாளம் காட்டவியலாது என 1989ஆம் ஆண்டில் ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்திற்கான வேலை ஆரம்பித்தது. ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் முதல் பதிப்பு 1998ஆம் ஆண்டு வெளியானது.

பி(B) மற்றும் டி(T) குறிகள்

பெரும்பாலான மொழிகளுக்கு சீர்தரத்தில் ஒரு குறியே கொடுக்கப்பட்டிருந்தாலும் இருபது மொழிகளுக்கு மட்டும் இரண்டு மூன்றெழுத்து குறிகள் வழங்கியுள்ளனர். ஒன்று-"bibliographic" நூல்வழி குறி (ISO 639-2/B)-முன்னிருத்தலுடன் இணங்கியிருக்க மொழியின் ஆங்கில பெயரை ஒட்டியது. மற்றது - "terminological" சொல்லாட்சி குறி (ISO 639-2/T)- மொழியின் நாட்டுப்பெயர். இந்த 20 மொழிகளுக்கும் ஐ.எசு.ஓ 639-1இலும் குறிகள் உண்டு. பொதுவாக டி குறிகள் விரும்ப்படுகிறது; ஐ.எசு.ஓ 639-3 ஐ.எசு.ஓ 639-2/Tஐ பயன்படுத்துகிறது. ஆனால் ஐ.எசு.ஓ 15924 தனது குறிகளை ஐ.எசு.ஓ 639-2/B விலிந்து பெறுகிறது.

செயல்வீச்சும் வகைகளும்

  • தனி மொழிகள்
  • பெருமொழிகள்
  • மொழித்தொகுப்புகள்
  • வட்டார வழக்குகள்
  • உள்ளக பயன்பாட்டிற்கு ஒதுக்கியுள்ளது
  • சிறப்பு நிலைமைகள்

வகைகள் (தனிமொழிகளுக்கு மட்டும்):

  • நடப்பிலுள்ள மொழிகள்
  • அழிந்த மொழிகள்
  • பழம் மொழிகள்
  • வரலாற்று மொழிகள்
  • கட்டமைத்த மொழிகள் (9 -பாகம் 2இல்: epo, ina, ile, ido, vol, afh, jbo, tlh, zbl )

சிறப்பு நிலைமைகள்

சில சிறப்பு நிலைமைகளுக்காக குறிகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

  • mis - குறியிடப்படாத மொழிகளுக்காக
  • mul (பல்மொழிகளுக்காக) - பல மொழிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது, அவற்றின் அனைத்து தனிமொழி குறிகளையும் இடவியலாதபோது இதனை பயன்படுத்தலாம்.
  • qaa இலிருந்து qtzவரை சீர்தரத்தில் பயன்படுத்தாது பின்பயனுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • und (for undetermined) - மொழியை குறிப்பிடவேண்டியிருப்பினும் மொழியறியாத நேரத்தில் இதனை பயன்படுத்தலாம்.
  • zxx - 'எந்த மொழி உரையும் இல்லை' எனக் குறிக்க (2006-01-11) சேர்க்கப்பட்டது.

மொழித்தொகுதிகள்

சில ஐ.எசு.ஓ 639-2 குறிகள் தங்கள் மொழிகளையோ அல்லது சார்ந்த மொழிகளையோ மிகச்சரியாக குறிக்காதபோது (பெருமொழிகள் போலல்லாது), அவை மொழித்தொகுதி என அறியப்படுகிறது. அவை ஐ.எசு.ஓ 639-3வில் சேர்க்கப்படுவதில்லை.

639-3 வரைவெல்லை பரணிடப்பட்டது 2013-02-08 at the வந்தவழி இயந்திரம் தளத்தில் பெருமொழிகளுக்கும் மொழித்தொகுதிகளுக்குமான வேற்றுமை விவரிக்கப்பட்டுள்ளது.

639-2 வெளிப்படையாக மொழித்தொகுதியென அறியப்படாதவை

  • bad Banda
  • bih பீகாரி (has an ISO 639-1 code)
  • btk Batak
  • day Dayak
  • dbp Dayak Bakumpai
  • him Himachali
  • ijo Ijo
  • kar Karen
  • kro Kru
  • nah Nahuatl
  • son Songhai
  • znd Zande

பிகாரி (bih) மொழிக்கு ஐ.எசு.ஓ.639-2வில் மொழித்தொகுதியாக குறியீடு கொடுக்கப்பட்டாலும் ஐ.எசு.ஓ 639-1இல் தனிமொழியாக (bh) கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையாக பல மொழிகளை உள்ளடக்கும் எண்ணத்துடன்

மேலும் பார்க்க

  • மொழிக்குறி

வெளி இணைப்புக்கள்

Tags:

ஐ.எசு.ஓ 639-2 பி(B) மற்றும் டி(T) குறிகள்ஐ.எசு.ஓ 639-2 செயல்வீச்சும் வகைகளும்ஐ.எசு.ஓ 639-2 மேலும் பார்க்கஐ.எசு.ஓ 639-2 வெளி இணைப்புக்கள்ஐ.எசு.ஓ 639-2சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சப்தகன்னியர்குமரி அனந்தன்சிற்பி பாலசுப்ரமணியம்சரத்குமார்சிங்கம் (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்அருணகிரிநாதர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கோயில்விண்டோசு எக்சு. பி.உணவுதப்லீக் ஜமாஅத்இராமலிங்க அடிகள்தற்கொலை முறைகள்கவிதைபழமொழி நானூறுசைவ சமயம்அருங்காட்சியகம்தமிழர் நெசவுக்கலைகம்பராமாயணம்ஆகு பெயர்பெரும்பாணாற்றுப்படை2024 இந்தியப் பொதுத் தேர்தல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்அயோத்தி தாசர்விஜயநகரப் பேரரசுகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்புறப்பொருள் வெண்பாமாலைசப்ஜா விதைதிருநாவுக்கரசு நாயனார்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நவக்கிரகம்ஈரோடு மக்களவைத் தொகுதிவெண்குருதியணுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857நிலக்கடலைஆரணி மக்களவைத் தொகுதிதேர்தல்ஸ்ரீலீலாஅண்ணாமலையார் கோயில்கண்ணே கனியமுதேபாட்டாளி மக்கள் கட்சிமார்ச்சு 28பாரத ஸ்டேட் வங்கிநவரத்தினங்கள்நாயக்கர்விசுவாமித்திரர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமுத்துலட்சுமி ரெட்டிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இன்ஸ்ட்டாகிராம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைபாபுர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐ (திரைப்படம்)அழகிய தமிழ்மகன்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமன்னா பாட்டியாபித்தப்பைஇந்தியாவின் பொருளாதாரம்இந்திய நாடாளுமன்றம்லொள்ளு சபா சேசுமார்ச்சு 27கணையம்ஒலிவாங்கிசத்ய பிரதா சாகுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பனிக்குட நீர்பாரதிதாசன்தமிழர் விளையாட்டுகள்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பி. காளியம்மாள்மரகத நாணயம் (திரைப்படம்)மெட்ரோனிடசோல்🡆 More