ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை

ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை (ஆங்கிலம்: United States House of Representatives) என்பது ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் கீழவையாகும்.

இது மேலவையுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்காவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை
117ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேரவை
Seal of the U.S. House of Representatives
அவையின் சின்னம்
Flag of the United States House of Representatives
அவையின் கொடி
வகை
வகை
ஆட்சிக்காலம்
ஏதுமில்லை
வரலாறு
புதிய கூட்டத்தொடர் தொடக்கம்
சனவரி 3, 2019 (2019-01-03)
தலைமை
அவைத்தலைவர்
நான்சி பெலோசி ()
சனவரி 3, 2019 முதல்
பெரும்பான்மைத் தலைவர்
ஸ்டெனி ஹோயர் ()
சனவரி 3, 2019 முதல்
சிறுபான்மைத் தலைவர்
கெவின் மெக்கார்த்தி (கு)
சனவரி 3, 2019 முதல்
பெரும்பான்மைக் கொறடா
ஜிம் கிளைபர்ன் ()
சனவரி 3, 2019 முதல்
சிறுபான்மைக் கொறடா
ஸ்டீவ் ஸ்கேலிஸ் (கு)
சனவரி 3, 2019 முதல்
மூத்த உறுப்பினர்
டான் யங்க் (கு)
டிசம்பர் 5, 2017 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்435 வாக்களிக்கும் உறுப்பினர்கள்
6 வாக்களிக்கா உறுப்பின்ரகள்
மொத்தம் 441 உறுப்பினர்கள்
பெரும்பான்மை 218
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை
அரசியல் குழுக்கள்
பெரும்பான்மை (218)

சிறுபான்மை (212)

வெற்றிடம் (5)

         வெற்றிடம் (5)
ஆட்சிக்காலம்
2 ஆண்டுகள்
தேர்தல்கள்
Varies in 5 states
Plurality voting in 45 states
  • Washington & California: Nonpartisan blanket primary
  • Georgia: Two-round system
  • Maine: Ranked-choice voting
  • Louisiana: Louisiana primary
அண்மைய தேர்தல்
நவம்பர் 6, 2020
அடுத்த தேர்தல்
நவம்பர் 3, 2022
மறுவரையறைState legislatures or redistricting commissions, varies by state
கூடும் இடம்
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை
சார்பாளர்கள் அவை கூடம்
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
வாசிங்டன், டி. சி.
ஐக்கிய அமெரிக்கா
வலைத்தளம்
www.house.gov

இந்த அவையின் அமைப்பு குறித்து ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 1இல் வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அளவிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 50 மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பேரவை மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்களால் இந்த அவை அமைக்கப்படுகிறது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சார்பாளர் உண்டு. 1789இல் தொடங்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவையின் அனைத்து சார்பாளர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவையில் வாக்களிக்கும் சார்பாளர்களின் எண்ணிக்கை சட்டப்படி 435ஆக நிறுவப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது ஆறு வாக்களிக்காத உறுப்பினர்களும் உள்ளனர். எனவே அமெரிக்க சார்பாளர்கள் அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 441 ஆகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஐம்பத்து மூன்று சார்பார்களைக் கொண்டுள்ள கலிபோர்னியா, அதிகளவு சார்பாளர்களைக் கொண்டுள்ள மாநிலமாகும். ஏழு மாநிலங்கள் ஒரேயொரு சார்பாளரை மட்டும் கொண்டுள்ளன. அவை அலாஸ்கா, டெலவெயர், மொன்ட்டானா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வெர்மான்ட் மற்றும் வயோமிங் ஆகியனவாகும்.

மசோதாக்கள் என அழைக்கப்படும் கூட்டாட்சி சட்டங்களை நிறைவேற்றுவதே சார்பாளர்கள் அவையின் பணியாகும். இங்கு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மேலவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அதிபரின் பரீசிலனைக்கு அனுப்பப்படும். இந்த அடிப்படை அதிகாரத்திற்கு மேலாக, இந்த அவைக்கென்று சில தனித்துவ அதிகாரங்களும் உள்ளன. அவற்றில் வருவாய் தொடர்பான அனைத்து மசோதாக்களையும் கொண்டுவருவது, விசாரணைக்காக மேலவைக்கு அனுப்பப்படும் முன்பு கூட்டாட்சி அதிகாரிகளை பதவிநீக்கம் செய்வது, எந்தவொரு வேட்பாளரும் அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான வாக்காளர்களைப் பெறாத சூழலில் அதிக வாக்காளர்களைப் பெற்ற முதல் மூன்று வேட்பாளர்களில் இருந்து அதிபரைத் தேர்ந்தெடுப்பது ஆகியன குறிப்பிடத்தக்க அதிகாரங்களாகும். இந்த அவையின் கூட்டம் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடத்தின் தெற்குப் பிரிவில் நடைபெறுகிறது.

அவையின் தலைமை அதிகாரியாக அவைத்தலைவர் செயல்படுகிறார். இவர் அவை உறுப்பினார்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே இவர் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்.

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கிலம்ஐக்கிய அமெரிக்கப் பேரவைமேலவை (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மென்பொருள்தேசிய அடையாள அட்டை (இலங்கை)வேலுப்பிள்ளை பிரபாகரன்நீக்ரோபசுமைப் புரட்சிதிணையும் காலமும்விபுலாநந்தர்யானைகல்லணைநவரத்தினங்கள்சினேகாபச்சைக்கிளி முத்துச்சரம்மாமல்லபுரம்தலைவி (திரைப்படம்)திரிகடுகம்அகமுடையார்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருமலை நாயக்கர் அரண்மனைகேரளம்ரெட் (2002 திரைப்படம்)எஸ். ஜானகிசமணம்போக்குவரத்துபுணர்ச்சி (இலக்கணம்)பி. காளியம்மாள்ஸ்ரீலீலாசங்க இலக்கியம்அப்துல் ரகுமான்அகரவரிசைதிரு. வி. கலியாணசுந்தரனார்ஆற்றுப்படைகூகுள்ஐஞ்சிறு காப்பியங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்திருட்டுப்பயலே 2மாணிக்கவாசகர்இலங்கையின் மாவட்டங்கள்சங்கம் (முச்சங்கம்)பெயர்ச்சொல்திராவிட முன்னேற்றக் கழகம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்அண்ணாமலையார் கோயில்பதினெண் கீழ்க்கணக்குசீமையகத்திமெய்யெழுத்துசூல்பை நீர்க்கட்டிகோத்திரம்குடலிறக்கம்நாலடியார்ஆண்டு வட்டம் அட்டவணைசோழர்கால ஆட்சிமறவர் (இனக் குழுமம்)ஆயுள் தண்டனைகடவுள்கலைபாம்புவிஜய் வர்மாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ்நாடு சட்டப் பேரவைவாட்சப்சேக்கிழார்காற்றுபெண்ணியம்நெடுநல்வாடைகலித்தொகைகன்னி (சோதிடம்)சச்சின் டெண்டுல்கர்சொல்முகம்மது நபிஆவாரைசன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திருப்பூர் குமரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழில் சிற்றிலக்கியங்கள்🡆 More