எம். பாத்திமா பீவி

நீதியரசர் எம்.

பாத்திமா பீவி (Justice M. Fathima Beevi) இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதியரசர் ஆவார்.(1989) உயர்ந்த நீதித்துறை பதவிகளை ஏற்ற முதல் முஸ்லிம் பெண்மணியாகவும் விளங்கினார். இந்தியா மட்டுமன்றி ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் உடையவர். தமது பணி ஓய்விற்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு உறுப்பினராகவும் 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீதியரசர் எம். பாத்திமா பீவி
எம். பாத்திமா பீவி
பிறப்பு30 ஏப்ரல் 1927 (1927-04-30) (அகவை 96)
பத்தனம்திட்டா, கேரளம்
இறப்பு23 நவம்பர் 2023
இருப்பிடம்8/387, அன்னவீடு, பேட்டை, பத்தனம்திட்டா, 689 645 (கேரளா)
தேசியம்எம். பாத்திமா பீவி இந்தியா
அறியப்படுவதுஇந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர், தமிழ்நாட்டின் ஆளுநர்
முன்னிருந்தவர்எம் சன்னா ரெட்டி / கிருஷண் காந்த் (கூடுதல். பொறுப்பு)
பின்வந்தவர்முனைவர் சி ரங்கராஜன் (ஆளுநர் பொறுப்பில்)
சமயம்இசுலாம்
பெற்றோர்மீரா சாகிப், கதீஜா பீபி

இளமையும் கல்வியும்

பாத்திமா பீவி கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் ஏப்ரல் 30, 1927இல் பிறந்தார். அன்னவீட்டில் மீரா சாகிபும் மற்றும் கதீஜா பீவியும் இவரது பெற்றோர்களாவர்.தமிழ் வேர்களைக் கொண்ட ராவுத்தர் குடும்பத்தில் பிறந்தார், அப்பகுதியில் உள்ள பழங்கால முஸ்லிம் சமூகமாகும். பத்தனம்திட்டையில் உள்ள கத்தோலிகேட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பெற்றார். தமது அறிவியல் இளங்கலை பட்டப் படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள யூனிவெர்சிட்டி கல்லூரியில் படித்தார். சட்ட இளங்கலைப் பட்டப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.

பணிவாழ்வு

பாத்திமா ஓர் வழக்கறிஞராக நவம்பர் 14, 1950இல் பதிந்து கொண்டார். கேரளாவின் கீழ்நிலை நீதிமன்றங்களில் தமது பணிவாழ்வைத் துவங்கினார். மே, 1958இல் கேரள கீழ்நிலை நீதித்துறை பணியில் முனிசீப்பாக நியமிக்கப்பட்டார். 1968இல் துணை நீதிபதியாக பதவியேற்றம் பெற்றார்.1972இல் முதன்மை நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்டாக உயர்வு பெற்றார். இரண்டாண்டுகளிலேயே 1974இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

சனவரி 1980இல் வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஆகத்து 4, 1983இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியில் மே 14, 1984இல் நிரந்தரம் செய்யப்பட்டார். ஏப்ரல் 29, 1989இல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றார். ஆனால் அக்டோபர் 6, 1989இல் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியிலிருந்து ஏப்ரல் 29, 1992இல் ஓய்வு பெற்றார்.

பணி ஓய்விற்குப் பிறகும் பல மூத்த நீதிபதிகளைக் கருத்தில் கொள்ளாது இவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டது ராஜீவ் காந்தியால் எடுக்கப்பட்ட அரசியல் முடிவாக கருதப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (மணமுறிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேற்சான்றுகள்

Tags:

ஆசியாஇந்திய உச்ச நீதிமன்றம்இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்தமிழக ஆளுநர்களின் பட்டியல்முஸ்லிம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான்மணிக்கடிகைசித்தர்தண்டியலங்காரம்பணவீக்கம்சாத்தான்குளம்2022 உலகக்கோப்பை காற்பந்துகீர்த்தி சுரேஷ்காயத்ரி மந்திரம்விவேக் (நடிகர்)பெரும்பாணாற்றுப்படைலோ. முருகன்சுரதாநாயன்மார் பட்டியல்பண்பாடுஜெ. ஜெயலலிதாமக்காதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇந்தியன் (1996 திரைப்படம்)பரிபாடல்இரட்டைக்கிளவிகுருதிச்சோகைகாரைக்கால் அம்மையார்தீரன் சின்னமலைகா. ந. அண்ணாதுரைலொள்ளு சபா சேசுநாமக்கல் மக்களவைத் தொகுதிஒற்றைத் தலைவலிஅ. கணேசமூர்த்திபிரேமலுகுத்தூசி மருத்துவம்இளையராஜாபெண் தமிழ்ப் பெயர்கள்இலட்சம்எம். ஆர். ராதாதஞ்சைப் பெருவுடையார் கோயில்கரணம்இந்தோனேசியாஉத்தரகோசமங்கைஉரிச்சொல்திருவண்ணாமலைபிள்ளைத்தமிழ்ஆரணி மக்களவைத் தொகுதிநாயக்கர்வினோஜ் பி. செல்வம்பத்து தலலைலத்துல் கத்ர்ஆடுபச்சைக்கிளி முத்துச்சரம்வட சென்னை மக்களவைத் தொகுதிசிதம்பரம் நடராசர் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)இட்லர்அக்பர்அன்னி பெசண்ட்பிரித்விராஜ் சுகுமாரன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கல்விசன்ரைசர்ஸ் ஐதராபாத்முகலாயப் பேரரசுதேம்பாவணிமூசாசிந்துவெளி நாகரிகம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிநரேந்திர மோதிமதுரைக் காஞ்சிசிலிக்கான் கார்பைடுகட்டுவிரியன்மு. க. ஸ்டாலின்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதி டோர்ஸ்இயேசுவின் உயிர்த்தெழுதல்ஆகு பெயர்செயற்கை நுண்ணறிவுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்எயிட்சு🡆 More