எண்ணெய்

எண்ணெய் (oil) என்பது முனைவுத்தன்மையற்ற, சூழல் வெப்பநிலையில் பிசுக்குமை தன்மை கொண்ட நீர்மமாக இருக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும்.

இது நீரில் கரையாததும், கொழுமியங்களில் கரையும் தன்மை கொண்டதுமாகும். இவை உயர் கார்பன், ஐதரசன் அளவைக் கொண்டிருப்பதுடன், இலகுவில் எரியும் தன்மை கொண்டதாகவும், மேற்பரப்புச் செயலியாகத் தொழிற்படுவதாகவும் காணப்படும்.

எண்ணெய்
புட்டியில் அடைக்கப்பட்ட இடலை எண்ணெய்

எண்ணெய் & Oil சொல் மூலம்

தமிழில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எண்ணெய் வந்தது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே முதலில் குறித்தது எனினும், இப்போது எல்லா தாவர நெய்களையும் குறிக்கும் பொது தமிழ் சொல்லாக மாறிவிட்டது. Oil என்ற சொல் Olive என்ற ஆங்கில சொல்லில் இருந்து வந்தது. இன்று Oil என்ற சொல் தாவர எண்ணெய்கள், விலங்கு எண்ணெய்கள் மற்றும் கனிம எண்ணெய்களை குறிக்கும் பொது ஆங்கில சொல்லாக மாறிவிட்டது.

எண்ணெய் கிடைக்கும் வழிகள்

தாவரங்களில் கிடைக்கும் எண்ணெய்கள், விலங்குகளில் கிடைக்கும் எண்ணெய்கள், பூமியில் தோண்டி எடுக்கப்படும் எண்ணெய்கள் என வெவ்வேறு வகை எண்ணெய்கள் கிடைக்கின்றன

சமையலில் எண்ணெய்

தமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும். அவை எண்ணெய் வித்துகளில் இருந்து பெறப்படுகின்றன.

எண்ணெய் வித்துகள்

நல்லெண்ணெய்

எண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.

விளக்கெண்ணெய்

ஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

புன்னை எண்ணெய்

புன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.

கடலை எண்ணெய்

நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கடலை எண்ணெய் என அழைக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய்

தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெயாகும்.

சளம்பனை எண்ணெய்

பனையின் ஒரு வகையான சளம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சளம்பனை எண்ணெய் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

எண்ணெய் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எண்ணெய்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

எண்ணெய் & Oil சொல் மூலம்எண்ணெய் கிடைக்கும் வழிகள்எண்ணெய் சமையலில் எண்ணெய் மேற்கோள்கள்எண்ணெய் வெளி இணைப்புகள்எண்ணெய்ஐதரசன்கார்பன்கொழுமியம்நீர்மம்பிசுக்குமைவேதிப்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலங்கையின் பொருளாதாரம்திருவண்ணாமலைவேலூர்க் கோட்டைஆண்டு வட்டம் அட்டவணைமு. அ. சிதம்பரம் அரங்கம்வயாகராகந்தர் அலங்காரம் (திரைப்படம்)அன்புமணி ராமதாஸ்சித்திரகுப்தர் கோயில்பறவைக் காய்ச்சல்நாயன்மார் பட்டியல்ஹர்திக் பாண்டியாகன்னத்தில் முத்தமிட்டால்சீரடி சாயி பாபாசுற்றுலாகாடுதமிழிசை சௌந்தரராஜன்காளமேகம்வேதம்சீறாப் புராணம்சுற்றுச்சூழல் கல்விநடுக்குவாதம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஜன கண மனசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்திய விடுதலை இயக்கம்தாயுமானவர்மகரம்எ. வ. வேலுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மழைகைப்பந்தாட்டம்திவ்யா துரைசாமிஞானபீட விருதுநாயக்கர்கண்டம்கட்டுவிரியன்காவிரிப்பூம்பட்டினம்முதுமொழிக்காஞ்சி (நூல்)மஞ்சள் காமாலைகுண்டலகேசிசங்கம் (முச்சங்கம்)நயன்தாராமோகன்தாசு கரம்சந்த் காந்திகிருட்டிணன்ஈரோடு தமிழன்பன்முதலாம் இராஜராஜ சோழன்பத்து தலஅருந்ததியர்ஏப்ரல் 24இராவணன்நற்றிணைஜே பேபிசித்திரைஇணையம்பிள்ளையார்அன்னம்திரிசாஇந்தியாவில் இட ஒதுக்கீடுவெண்பாவிளம்பரம்கோத்திரம்ராஜா (நடிகர்)சின்ன மாப்ளேசரண்யா துராடி சுந்தர்ராஜ்கணினிகில்லி (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நீக்ரோபாரதிதாசன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கங்கைகொண்ட சோழபுரம்தீபிகா பள்ளிக்கல்தோஸ்த்அனுமன் ஜெயந்திபிரேமம் (திரைப்படம்)அகமுடையார்கொடுக்காய்ப்புளி🡆 More