இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு என்பது லூக்கா நற்செய்தி 1:26-3இல் உள்ள படி கபிரியேல் தேவதூதர், கன்னி மரியாவுக்கு தோன்றி, அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதை அறிவித்த நிகழ்வாகும்.

இந்த நிகழ்வின் போதே மரியாவிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் மரியாவிடம் எடுத்தியம்பினார். மரியாவின் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாவுக்கு அறிவித்தார்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (பொட்டிச்செல்லி)

பல கிறித்தவ பிரிவுகள் இந்த நிகழ்வை மார்ச் 25இல் கொண்டாடுகின்றனர். இது கிறித்துமசுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் என்பதும் இது இயேசுவின் பாடுகளின் காலத்தில் நிகழ்கின்றது என்பதும் குறிக்கத்தக்கது. இத்தேதியினை முதன் முதலில் இவ்விழாவுக்கென கொண்டவர் இரனேயு (காலம்.130-202) ஆவார்.

முக்காலத்தில் சம இரவு நாளினை ஒட்டி இவ்விழா நிகழ்ந்ததால், இது புத்தாண்டாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையினரால் இந்த நிகழ்வு முன்னறிவிப்பு பேராலயத்தில் நடந்ததாக நம்பப்படுகின்றது. ஆயினும் பிற கிறித்தவ சபைகளிடையே இது குறித்த ஒத்த கருத்தில்லை.

கத்தோலிக்க திருச்சபையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் முதல் மறைபொருள் ஆகும்.

மேற்கோள்கள்


இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
முன்னர்
கபிரியேல் தேவதூதர், செக்கரியாவிடம் திருமுழுக்கு யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவித்தல்
புதிய ஏற்பாடு
நிகழ்வுகள்
பின்னர்
மரியா எலிசபத்தை சந்தித்தல்

Tags:

கபிரியேல் தேவதூதர்கருக்கட்டல்திருமுழுக்கு யோவான்தூய ஆவிமரியாள் (இயேசுவின் தாய்)லூக்கா நற்செய்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேரன் (திரைப்பட இயக்குநர்)யோகிசெஞ்சிக் கோட்டைசெக்ஸ் டேப்பச்சைக்கிளி முத்துச்சரம்கள்ளுபோதைப்பொருள்ஆப்பிள்திருப்பதிபழனி முருகன் கோவில்எச்.ஐ.விபுறப்பொருள் வெண்பாமாலைகா. ந. அண்ணாதுரைதிருமணம்பி. காளியம்மாள்பறவைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நுரையீரல் அழற்சிபீப்பாய்வாணிதாசன்தீரன் சின்னமலைகுகேஷ்நீர் மாசுபாடுபாரத ஸ்டேட் வங்கிதமிழக மக்களவைத் தொகுதிகள்புணர்ச்சி (இலக்கணம்)நீதி இலக்கியம்சூல்பை நீர்க்கட்டிதினமலர்ஸ்டீவன் ஹாக்கிங்வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குடும்ப அட்டைபாரதிய ஜனதா கட்சிராஜேஸ் தாஸ்சட்டம்உவமையணிவரலாறுதிருமுருகாற்றுப்படைதளபதி (திரைப்படம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்கட்டுரைநற்றிணைகுதிரைதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மரபுச்சொற்கள்காகம் (பேரினம்)தூது (பாட்டியல்)யானைவிஷால்அகரவரிசைஇடைச்சொல்புவிகொல்லி மலைசென்னைகொன்றைநாட்டு நலப்பணித் திட்டம்பொருளாதாரம்கீழடி அகழாய்வு மையம்கொன்றை வேந்தன்பரதநாட்டியம்மலேரியாமுன்னின்பம்பெயர்வெ. இராமலிங்கம் பிள்ளைபுதுக்கவிதைசாகித்திய அகாதமி விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)காடுவெட்டி குருகோயம்புத்தூர்கலிங்கத்துப்பரணிசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஉணவுகள்ளழகர் கோயில், மதுரைகூலி (1995 திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்கோத்திரம்திருச்சிராப்பள்ளி🡆 More