இப்ராகிம் ரையீசி

செய்யது இப்ராகிம் ரைசோல் அல்லது (இப்ராஹீம் ரையீசி) (Sayyid Ebrahim Raisol-Sadati) (பாரசீக மொழி: سید ابراهیم رئیسالساداتی‎; பிறப்பு 14 டிசம்பர் 1960), பொதுவாக இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) என அழைக்கப்படும் இவர் ஈரான் நாட்டின் 8-வது குடியரசுத் தலைவராக 19 சூன் 2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் அரசியல்வாதியும், ஈரானின் வல்லுநர்கள் மன்ற உறுப்பினரும், இசுலாமிய அறிஞரும் மற்றும் ஈரான் நாட்டின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆவார். மேலும் இவர் ஈரான் நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் போன்ற நீதித்துறையில் பல பதவிகளில் பணிபுரிந்தவர். மேலும் இவர் பழமை வாய்ந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் அஸ்தான் கட்ஸ் ரசாவி அமைப்பின் தலைவராக 2016 முதல் 2019 முடிய பணியாற்றினார். இவர் தெற்கு கொராசான் மாகாணம் சார்பாக 2006-இல் ஈரானிய அறிஞர் சபைக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அயத்துல்லா சையத்
இப்ராகிம் ரையீசி
இப்ராகிம் ரையீசி
ஈரானின் 8-வது குடியரசுத் தலைவர்
பதவியில்
3 ஆகஸ்டு 2021
துணை குடியரசுத் தலைவர்TBA
Succeedingஅசன் ரூகானி
ஈரானின் தலைமை நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மார்ச் 2019
நியமிப்புஅலி காமெனி, ஈரானின் அதியுயர் தலைவர்
முதல் துணைத் தலைவர்குலாம்-உசைன் மொசெனி-இஜெய்
முன்னையவர்சாதிக் லாரிஜனி
ஈரானின் தலைமை அரசு வழக்கறிஞர்
பதவியில்
23 ஆகஸ்டு 2014 – 1 ஏப்ரல் 2016
நியமிப்புசாதிக் லரிஜனி
முன்னையவர்குலாம்-உசைன் மொசெனி-இஜெய்
பின்னவர்முகமது ஜாபர்
வல்லுநர்கள் மன்றம்
பதவியில்
24 மே 2016 – 21 மே 2016
தொகுதிதெற்கு கொராசான் மாகாணம்
பெரும்பான்மை325,139 (80.0%)
பதவியில்
20 பிப்ரவரி 2007 – 21 மே 2016
தொகுதிதெற்கு கொராசான் மாகாணம்
பெரும்பான்மை200,906 (68.6%)
ஈரானின் துணைத் தலைமை நீதிபதி
பதவியில்
27 சூலை 2004 – 23 ஆகஸ்டு 2014
ஈரானின் தலைமை நீதிபதிமுகமது ஹஷ்மி ஷாரூத்
முன்னையவர்முகமது-ஹாதி மார்வி
பின்னவர்குலாம்-உசைன் மொசெனி-இஜெய்
தலைவர், பொது ஆய்வு அலுவலகம்
பதவியில்
22 ஆகஸ்டு 1994 – 9 ஆகஸ்டு 2004
நியமிப்புமுகமது யாசிதி
முன்னையவர்முஸ்தபா மொககேக் தமாத்
பின்னவர்முகமது நியாசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சையத் இப்ராகிம் ரைசோல்-சதாதி

14 திசம்பர் 1960 (1960-12-14) (அகவை 63)
மஷ்தாத், ஈரானின் பகலவிப் பேரரசு
அரசியல் கட்சிஇசுலாமிய மதகுருமார்கள் சங்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
இசுலாமிய குடியரசுக் கட்சி (1987 வரை)
துணைவர்ஜாமிய அலமோல்ஹூதா
பிள்ளைகள்2
உறவினர்கள்அகமது அலமோல்ஹூதா (மாமனார்)
முன்னாள் கல்லூரிசாகித் மொதாஹரி பல்கலைக் கழகம்
கோம் செமினரி
இணையத்தளம்https://raisi.ir/

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியால், 2021 ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டுயிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட 4 வேட்பாளர்களில் இப்ராகிம் ரைசியும் ஒருவராவர். இவர் வலதுசாரி இசுலாமிய புரட்சிகர படைகளின் பாப்புலர் முன்னணி கட்சியின் சார்பாக 2021 ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். 2017-இல் இவர் ஈரானிய அதிபர் தேர்தலில் அசன் ரவ்கானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாமிடத்தில் வந்தார்.

இப்ராகிம் ரையீசி
1980களில் இப்ராகிம் ரைசி

தேர்தல் வரலாறு

2021 ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரையீசி 61.95% வாக்குகளைப் பெற்று ஈரான் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இரானில் சுமார் 5.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.8 கோடி பேர் வாக்களித்தனர். இதில் இப்ராகிம் ரையீசி சுமார் 1.8 (61.95%) கோடி வாக்குகள் பெற்றுள்ளார். மிகப் பழமையான பார்வைகளை உடைய இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசு தடை விதித்தவர்களில் ஒருவர். இரானில் அதி உயர் தலைவருக்கு அடுத்தபடியாக இராண்டாவது பெரிய அதிகாரம் மிக்க பதவி அதிபர் பதவி ஆகும்.

ஆண்டு தேர்தல் வாக்குகள் % தர வரிசை குறிப்புகள்
2006 2006 ஈரானிய வல்லுநர்கள் மன்றம் 200,906 68.6% முதலிடம் வெற்றி
2016 2016 ஈரானிய வல்லுநர்கள் மன்றம் இப்ராகிம் ரையீசி  325,139 இப்ராகிம் ரையீசி  80.0% முதலிடம் வெற்றி
2017 2017 ஈரானிய அதிபர் தேர்தல் 15,835,794 38.28% இரண்டாமிடம் தோல்வி
2021 2021 ஈரானிய அதிபர் தேர்தல் 17,926,345 61.952% முதலிடம் வெற்றி

இப்ராகிம் ரையீசி மீதான உலக நாடுகளின தலைவர்கள் கருத்துகள்

  • இரானில் இப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லியோர் ஹையட், 1988-ஆம் ஆண்டில் அரசியல் கைதிகளை கூண்டோடு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி, டெஹ்ரானின் கசாப்புக்காரர் இப்ராகிம் ரையீசி என தெரிவித்துள்ளார். இப்ராகிம் ரையீசியால் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஹையட் தெரிவித்துள்ளார் இதே எண்ணிக்கையைதான் இரானின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது. இப்ராகிம் ரையீசி த்லைமையிலான நான்கு நீதிபதி கொண்ட மரணக் குழு 5 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மரண தண்டனை விதித்ததாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவிக்கிறது.
  • இரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள "பாரம்பரியமான நட்பு மற்றும் நல் உறவை" சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இப்ராஹிம் ரையீசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சிரியா, இராக், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாட்டின் தலைவர்களும் இதே போன்றதொரு வாழ்த்து செய்தியையும் தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்திதொடர்பாளர், இரான் வளமும் வளர்ச்சியும் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

ஈரானின் குடியரசுத் தலைவர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இப்ராகிம் ரையீசி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ebrahim Raisi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இப்ராகிம் ரையீசி தேர்தல் வரலாறுஇப்ராகிம் ரையீசி மீதான உலக நாடுகளின தலைவர்கள் கருத்துகள்இப்ராகிம் ரையீசி ஈரானின் குடியரசுத் தலைவர்கள்இப்ராகிம் ரையீசி இதனையும் காண்கஇப்ராகிம் ரையீசி மேற்கோள்கள்இப்ராகிம் ரையீசி வெளி இணைப்புகள்இப்ராகிம் ரையீசிஈரான்தெற்கு கொராசான் மாகாணம்பாரசீக மொழிவல்லுநர்கள் மன்றம் (ஈரான்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுப்பிரமணிய பாரதிபோதி தருமன்மக்காச்சோளம்தண்ணீர்சோழர் காலக் கட்டிடக்கலைவல்லினம் மிகும் இடங்கள்இயற்கை வளம்தேவேந்திரகுல வேளாளர்சுற்றுச்சூழல்நன்னீர்தேர்தல்சிங்கப்பூர்மு. மேத்தாகுலுக்கல் பரிசுச் சீட்டுகொங்கு நாடுவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்வெண்குருதியணுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்செம்மொழிபாரத ரத்னாசிவன்உயிர்மெய் எழுத்துகள்மயங்கொலிச் சொற்கள்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்அறிவியல் தமிழ்புரோஜெஸ்டிரோன்சிறுபஞ்சமூலம்பி. காளியம்மாள்தமிழர் விளையாட்டுகள்ஆனந்தம் விளையாடும் வீடுவிலங்குஇந்தியாவின் பொருளாதாரம்அருங்காட்சியகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்வேலு நாச்சியார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இசுலாமிய வரலாறுதமிழ்நாடு அமைச்சரவைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பத்துப்பாட்டுஎருதுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்நாமக்கல் மக்களவைத் தொகுதிமட்பாண்டம்நீலகிரி மாவட்டம்வேதம்ஹாட் ஸ்டார்தஞ்சைப் பெருவுடையார் கோயில்போதைப்பொருள்போக்கிரி (திரைப்படம்)கணியன் பூங்குன்றனார்கன்னியாகுமரி மாவட்டம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மூவேந்தர்வட்டார வளர்ச்சி அலுவலகம்நெல்மாணிக்கம் தாகூர்கணினிதமிழச்சி தங்கப்பாண்டியன்கட்டுவிரியன்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தட்டம்மைநம்மாழ்வார் (ஆழ்வார்)சங்க காலம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்வாக்குரிமைபழனி பாபாமக்களாட்சிதொல்காப்பியம்பட்டினப் பாலைபல்லவர்சிலம்பம்🡆 More