அறிவு

அறிவு (Knowledge) அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல்.

ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல்.

அறிவு என்பது ஒரு பொருள் சார்ந்த கோட்பாட்டு அல்லது நடைமுறை ரீதியான புரிதலைக் குறிக்கலாம். இது மறைமுகமானதாகவோ (செயலாக்கத் திறன் அல்லது நிபுணத்துவம் போன்றது) அல்லது வெளிப்படையானதாகவோ (ஒரு கருத்தின் கோட்பாட்டைப் புரிதலைப் போல) இருக்கலாம். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது மரபுசார்ந்த்தாகவோ அல்லது திட்டமிட்ட முறைப்படியானயானதாகவோ இருக்கலாம்.

தத்துவத்தில், அறிவைப் பற்றிய ஆய்வு என்பது ஒளிர்வுக் கோட்பாடு (epistemology) என்று அழைக்கப்படுகிறது. மெய்யியலாளர் பிளேட்டோ (Plato), அறிவை "நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை" என்று வரையறுத்துக் குறிப்பிட்டுள்ளார். கெட்டியர் (Gettier) பிரச்சினைகள் சிக்கலாக இருப்பதால், இப்போது சில தத்துவவாதிகள், பகுப்பாய்வுக் கருத்துகளின் அடிப்படையில், பிளாட்டோனிக் வரையறையை எதிர்க்கின்றனர். இருப்பினும் சிலர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்.

அறிவைப் பெறுதல் நிகழ்வானது பின்வரும் சிக்கலான அறிவாற்றல் செயல்முறைகளை உள்ளடக்கியது:

  • பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் புலக்காட்சி
  • கருத்துக்களை பரிமாறுதல் 
  • உணர்வு,
  • காரணங்காணல் மற்றும்
  • பகுத்தறிதல்

அறிவு பற்றிய கொள்கைகள்

அறிவு 
வாஷிங்டன். டி. சி. என்னும் இடத்தில், தாமஸ் ஜாஃபர்சன் (Thomas Jefferson) கட்டிடத்தில், 1896-ஆம் ஆண்டு ராபர்ட் ரீய்டு(Robert Reid) என்ற ஓவியரை அறிவு என்ற தலைப்பில் வரைந்த ஓவியம்

மெய்யியல் துறையில் ஒளிர்வுக் கோட்பாடு பற்றி தத்துவவாதிகளிடையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதம் சார்ந்த ஒரு விஷயமே அறிவின் வரையறை ஆகும். இந்த மரபார்ந்த  வரையறை பிளாட்டோவால் ஆதரிக்கப்படவில்லை

அதே சமயத்தில் அறிவு என்பது மனிதர்களிடமிருந்து பெறும் ஒப்புதலுக்கான திறனுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.

அறிவு 
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு கடத்தி மூலம்  கடத்தப்படுவதை அடையாளப் படுத்த அன்னா ஹியாத் ஹன்டிங்டன் (Anna Hyatt Huntington)செதுக்கிய தீவட்டி ஒளி ஏந்தும் மாந்தர் - லாஸ் போர்டா டி லா அன்டார்கா (Los portadores de la antorcha) சிற்பம் இடம்: சியுடாட், யூனிவர்சிடாரியா, மாட்ரிட், ஸ்பெயின் (Ciudad Universitaria, Madrid, Spain)

ஒரு அறிக்கையினை பின்வரும் மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து ஆய்ந்து, "அறிவுக் கருத்தை" உறுதி செய்ய வேண்டும். என்று குறிப்பிடுகிறது:

  • நியாயமானது
  • உண்மையானது மற்றும்
  • நம்பிக்கையானது.

கெட்டியர் ஆய்வுக் கூறு எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்தி, சிலர், இந்த நிலைமைகள் மற்றும் சீர் கட்டுவரம்புகள்  போதாதென்று கூறுகின்றனர்,

இதைச் சார்ந்து முன்மொழியப்பட்ட பல மாற்றுகள் உள்ளன.

 ராபர்ட் நோஸிக்(Robert Nozick) வாதங்கள்: 'அறிவு என்பது உண்மையைக் கண்காணிக்கும்'

சைமன் பிளாக்பர்னின் (Simon Blackburn): நிறைவுறா நிலை, பழுது தொழில், தோல்வி.பொன்றவற்றில் ஏதாவது ஒன்று அல்லது பலவற்றை எட்டியவர்கள் அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது தவறு.

ரிச்சர்ட் கிர்கம் (Richard Kirkham) வழங்கிய அறிவு பற்றிய வரையறை: சான்றுகளை உறுதிப்படுத்தி, நம்பிக்கை பெறுவதற்கு அதன் உண்மை அவசியமாகிறது.

மூரின்(Moore) ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும், முரண்படாத உண்மைகள் பற்றி லுட்விக் விட்கன்ஸ்டைன் (Ludwig Wittgenstein) கருத்து, ஒருவர் சொல்லக்கூடிய வாக்கியங்கள்:

  • "அவர் அதை நம்புகிறார், ஆனால் அது அப்படி இல்லை"
  • "அவர் அதை அறிந்திருக்கிறார், ஆனால் அது அப்படி இல்லை"

இவை முற்றாக மாறுபட்டுள்ள தெளிவாகத் தோன்றுகிற மனநிலைகள் பொது மனநிலைகளுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக தண்டனைக்குத் தீர்வு காண்பதற்கான வேறுபட்ட வழிகளாகும் என்று அவர் வாதிடுகிறார். இங்கே வித்தியாசமாக இருப்பது பேச்சாளரின் மனநிலை அல்ல. ஆனால் அவர்கள் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளில் தான் மாறுபாடுகள் உள்ளன.

"அறிவு" என்பது "கருத்துகளின் தொகுப்பு" என மீண்டும் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது எந்த வரையறையிலும் போதுமான அளவு பதிவதாகவோ அல்லது பொருந்துவதாகவோ இல்லை.

அறிவு சார்ந்த, ஆரம்பகால மற்றும் நவீன கோட்பாடுகள், குறிப்பாக தத்துவவாதியான ஜான் லாக்ஸின் (John Locke) செல்வாக்குள்ள பட்டறிவுடன் கூடிய துய்ப்பறிவுக் கொள்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவர்கள், அறிவு, விரும்பிய எண்ணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ, ஒப்புருவாக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவார்கள்.

சூழ்நிலை அறிவு

ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது தருணம் அல்லது நிலைமையைப் பற்றி கொண்ட அறிவு சூழ்நிலை அறவு எனப்படுகிறது.

சன்ட்ரா ஹார்டிங் (Sandra Harding) பரிந்துரைத்த, "பின்வருநர் எனப்படும் பின்னவரின் அறிவியல்" என்ற தொகுப்பில் வழங்கப்பட்ட பெண்ணிய அணுகுமுறைகளின் நீட்டிப்பாக டோனா ஹாராவே(Donna Haraway)வால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவுக்கூறு ஆகும். இது உலகில், போதுமானநிலை உடைய, வளம் மிகுந்த, மேம்பட்ட கோட்பாடு ஆகும். நெருக்கடியான சூழ்நிலைகளிலும், நுண்ணாய்வுடைய அறிவுடன், நன்றாக வாழ வழி செய்கிறது.

எல்லாநிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தன்வயப்பட்ட, நம் உறவுகள், பிற உறவுகள், மற்றவர்கள் நம் மீது செலுத்தும் மேம்பட்ட செல்வாக்குடன் கூடிய ஆதிக்க நடைமுறைகள் மற்றும் வழக்கங்கள், பொறுத்தமற்ற சமமற்ற சிறப்புரிமை சலுகைக் கோரல்கள், கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றை சரி செய்து முன்னேறுவது குறித்து விரித்துரைக்கப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றது. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூடச் சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது.

இயற்கையறிவு

இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முலைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலருந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.[சான்று தேவை]

அறிவும் உணர்வும்

தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே, ஆங்கிலச் சொல்லான Knowledge என்ற வார்த்தை கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ ஐந்தாம் புலன் (Five Sense), ஆறாம் புலன் (Sixth Sense) என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த புலன் "sense" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புகொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.[சான்று தேவை]

கல்வி அறிவு

ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காகப் பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைகொண்டதாகவும், ஒரே அளவினதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.[சான்று தேவை]

எழுத்தறிவு

எழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரைச் சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் முறைப்படி கற்றுக்கொள்பவர்களும், பெற்றுக்கொள்பவர்களும் உள்ளனர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உள்ளனர்.[சான்று தேவை]

ஆழ்மனப்பதிவறிவு

ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவு ஆகும். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துகொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துகொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.[சான்று தேவை]

பட்டறிவு

பட்டறிவு பற்றி மேலும் பார்க்க, பட்டறிவு

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :அறிவு

அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும்.

இந்த அறிவைப் பெறும் வழிகள்:

  1. கூரிய நோக்கு(perception)
  2. கல்வி கற்கும் முறை(learning process)
  3. விவாதித்து முடிவுக்கு வருதல்(debates)
  4. செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு
  5. தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)

நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ, அறிவைப் பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.

ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience).

ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.[சான்று தேவை]

மெய்யறிவு

ஆன்மீகத் துறையில் மெய்யறிவு என்பது உண்மையை உணர்ந்து கொள்வது என்ற பொருள் படுமாறு கூறப்படுகிறது. இந்து மதத்தில் மெய்யறிவு என்பது மாயையை கடந்து உண்மையைக் காண்பது என்பதாகும். இதை மெய்ஞானம் என்றே கூறுகின்றனர். சமூகவியல் வல்லுநர் மெர்வின் கூறிய கருத்தின் படி, அறிவு மதங்களால் நான்கு முறையில் சுட்டப்படுகிறது. அவை

  • உள்ளடக்கம்,
  • அடர்த்தி,
  • மையத்தன்மை மற்றும்
  • அதிர்வு என்பவை ஆகும்.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

பட்டறிவு

Tags:

அறிவு பற்றிய கொள்கைகள்அறிவு சூழ்நிலை அறிவு இயற்கையறிவுஅறிவு ம் உணர்வும்அறிவு கல்வி அறிவு எழுத்தறிவுஅறிவு ஆழ்மனப்பதிவறிவுஅறிவு பட்டறிவுஅறிவு மெய்யறிவுஅறிவு மேற்கோள்கள்அறிவு மேலும் பார்க்கஅறிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பனிக்குட நீர்அறுபது ஆண்டுகள்பிரேமலுஎச்.ஐ.விதிருமந்திரம்பாரதிதாசன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்காச நோய்கொடைக்கானல்நரேந்திர மோதிவிந்துசீரடி சாயி பாபாஆடுஜீவிதம் (திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிம. கோ. இராமச்சந்திரன்வாலி (கவிஞர்)சிட்டுக்குருவிதமிழ் எழுத்து முறைஒற்றைத் தலைவலிமதுரைக் காஞ்சிஅன்னி பெசண்ட்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவடிவேலு (நடிகர்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பாண்டியர்தமிழ்நாடு சட்ட மேலவைசீமையகத்திதிட்டக் குழு (இந்தியா)கருட புராணம்ஜலியான்வாலா பாக் படுகொலைஇராவணன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்புங்கைமறவர் (இனக் குழுமம்)இரசினிகாந்துஇடைச்சொல்கபிலர் (சங்ககாலம்)தமிழ் இலக்கியம்இரா. இளங்குமரன்கார்லசு புச்திமோன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சினைப்பை நோய்க்குறிதனிப்பாடல் திரட்டுபால் (இலக்கணம்)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சிவன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)கோயம்புத்தூர்வெள்ளியங்கிரி மலைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)நவரத்தினங்கள்நேர்பாலீர்ப்பு பெண்ஜெ. ஜெயலலிதாதங்கராசு நடராசன்நான் ஈ (திரைப்படம்)சூளாமணிஇந்து சமயம்சுற்றுச்சூழல்வைதேகி காத்திருந்தாள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வெ. இராமலிங்கம் பிள்ளைபர்வத மலைதிரவ நைட்ரஜன்பெயர்கள்ளுதமிழக மக்களவைத் தொகுதிகள்பரிபாடல்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்பருவ காலம்ஸ்டீவன் ஹாக்கிங்மு. மேத்தாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பொன்னியின் செல்வன்சிவபெருமானின் பெயர் பட்டியல்கி. ராஜநாராயணன்சச்சின் டெண்டுல்கர்🡆 More