அமராவதி பௌத்த தொல்லியல் களம்

அமராவதி பௌத்த தொல்லியல் களம் பொதுவாக பெருந்தூபி என்றும் அழைக்கப்படும் இப்பௌத்தத் தூபி, அசோகர் ஆட்சிக் காலத்தில், கிமு 250ல் நிறுவப்பட்டது.

அமராவதி பௌத்த தொல்லியல் களம்
அமராவதி பௌத்த தொல்லியல் களம்
அமராவதி தூபியின் கருத்தோவியம்
அமைவிடம்அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
உயரம்ஏறத்தாழ 73 மீட்டர் (241 அடி)
கட்டப்பட்டதுகிமு 3ம் நூற்றாண்டு
அமராவதி பௌத்த தொல்லியல் களம்
தூபியின் சிதிலங்கள்
அமராவதி பௌத்த தொல்லியல் களம்
உண்மையான தூபியின் மாதிரி வடிவம்

தென்னிந்தியாவின் ஆந்திரா மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி சிற்றூரில் இப்பௌத்தத் தொல்லியல் களம் உள்ளது.

இத்தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மேலும் தொல்லியல் வளாகத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது. அமராவதி பௌத்தத் தொல்லியல் வளாகத்தில் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய பௌத்த சிற்பங்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அமராவதி கருங்கல் தூபியில் இளைஞர்கள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தொல்லியல் களத்தில் சுண்ணாம்புக்கல் பலகைகளில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள், கிபி 50 முதல் கிபி 250 முடிய, மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது. முதல் கட்டப்பணிகள் கிபி 50 முடியவும், இரண்டாம் கட்டப்பணிகள் கிபி 50 - 100 முடியவும், மூன்றாம் கட்டப் பணிகள் 200 - 250 முடியவும் நடைபெற்றுள்ளது.

தொல்பொருட்கள்

மேஜர் காலின் மெக்கன்சீ எனும் பிரித்தானியர் 1797ல், கிருஷ்ணா ஆற்றின் வலது கரையில், அமராவதியில் பௌத்த தொல்பொருட்களை கண்டுபிடித்தார்.

அமராவதி பௌத்த தொல்லியற்களத்தில் சுண்ணாம்புக்கல் பலகைகளில் செதுக்கப்பட்ட ஏராளாமான தூபிகள், சைத்தியங்கள், சிற்பங்களை கண்டுபிடித்தார்.

ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை அறிவியலாளரான சர் வால்டர் எலியட் கிபி 1845ல் அமராவதி தொல்லியல் களத்தின் மேற்குப் பகுதியில் அகழாய்வு செய்த போது கண்டெடுதத பண்டைய பௌத்த சிற்பங்கள் தற்போது அரசு அருங்காட்சியகம், சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த 75 பளிங்குக் கல் சிற்பங்களின் புகைப்படங்களை மட்டும் இந்தியாவில் வைத்துக் கொண்டு, 1859ல் அசல் பலகைச் சிற்பங்கள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராபர்ட் செவல் என்பவர் அமராவதி தொல்லியல் களத்தில் 1880ல் அகழாய்வு செய்தார்.

சிற்பங்கள்

கிருஷ்ணா ஆறு மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே உள்ள பகுதிகளில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் பௌத்த சமயம் செழிப்புடன் விளங்கியது.

கிமு 200ல் அசோகர் ஆட்சிக்காலத்தில், இப்பகுதிகளில் பௌத்த தூபிகளும், பிக்குகள் தங்குவதற்கான விகாரைகளும், கௌதம புத்தர் சிற்பங்களும் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் பௌத்த சமயம் வீழ்ச்சி அடையும் தருவாயில் இப்பௌத்த தொல்லியல் களங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டதால், மண்னில் புதையுண்டது.

அமராவதி பௌத்த தொல்லியல் களம் 
அசோகர் கல்வெட்டுக்கள்

கலை வரலாற்று ஆய்வாளர்கள், அமராவதி சிற்பங்கள் கிரேக்க-பௌத்தக் கலை, காந்தாரக் கலை மற்றும் பண்டைய இந்தியக் கலையில் நயத்தில் வடிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.

சீன பௌத்த அறிஞரும் பிக்குவுமான சுவான்சாங், கிபி 640ல் அமராவதியில் சில காலம் தங்கியிருந்த போது, அமராவதியின் விகாரைகளையும், தூபிகளையும், சிற்பங்களையும் தனது பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.

அமராவதி பௌத்த தொல்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகங்கள்

அமராவதி பௌத்த தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் உலகம் முழுவதில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள்:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

அமராவதி பௌத்த தொல்லியல் களம் 
விக்கிமீடியா பொதுவகத்தில், Buddhist art from Amaravati
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அமராவதி பௌத்த தொல்லியல் களம் 
விக்கிமீடியா பொதுவகத்தில், Stupa of Amaravati
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

16°34′31″N 80°21′29″E / 16.5753°N 80.3580°E / 16.5753; 80.3580

வெளி இணைப்புகள்

Tags:

அமராவதி பௌத்த தொல்லியல் களம் தொல்பொருட்கள்அமராவதி பௌத்த தொல்லியல் களம் சிற்பங்கள்அமராவதி பௌத்த தொல்லியல் களம் அமராவதி பௌத்த தொல்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகங்கள்அமராவதி பௌத்த தொல்லியல் களம் இதனையும் காண்கஅமராவதி பௌத்த தொல்லியல் களம் மேற்கோள்கள்அமராவதி பௌத்த தொல்லியல் களம் வெளி இணைப்புகள்அமராவதி பௌத்த தொல்லியல் களம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்தரையர்குஷி (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்மொழிபெண் தமிழ்ப் பெயர்கள்கண்ணகிசிதம்பரம் நடராசர் கோயில்தமிழ் எழுத்து முறைஇடமகல் கருப்பை அகப்படலம்நன்னூல்பாரதிய ஜனதா கட்சிதிருநெல்வேலிஅயோத்தி தாசர்திணை விளக்கம்ஸ்ரீஅறிவுசார் சொத்துரிமை நாள்மீனா (நடிகை)தமிழச்சி தங்கப்பாண்டியன்சிவாஜி கணேசன்இந்திய நாடாளுமன்றம்கருப்பைவிபுலாநந்தர்ஜோக்கர்நாயன்மார் பட்டியல்சுப்பிரமணிய பாரதிவிஷால்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மு. மேத்தாஒற்றைத் தலைவலிசமுத்திரக்கனிதேனீஇந்திய உச்ச நீதிமன்றம்கூலி (1995 திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சிவபெருமானின் பெயர் பட்டியல்சிந்துவெளி நாகரிகம்கினோவாஜன கண மனபெருஞ்சீரகம்எஸ். ஜானகிகாற்று வெளியிடைசங்கம் (முச்சங்கம்)மண்ணீரல்சுபாஷ் சந்திர போஸ்திருநங்கைகுகேஷ்சிலம்பரசன்மூகாம்பிகை கோயில்கல்விதினகரன் (இந்தியா)மாநிலங்களவைசிவாஜி (பேரரசர்)தமிழ் படம் 2 (திரைப்படம்)முதற் பக்கம்சதுரங்க விதிமுறைகள்விளக்கெண்ணெய்பரிதிமாற் கலைஞர்இந்திய தேசிய காங்கிரசுபுதினம் (இலக்கியம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இன்று நேற்று நாளைகண்டம்கிழவனும் கடலும்ஆங்கிலம்கபிலர் (சங்ககாலம்)சரண்யா பொன்வண்ணன்அமலாக்க இயக்குனரகம்கல்லீரல்தேம்பாவணிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்விசயகாந்துநிதிச் சேவைகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅருணகிரிநாதர்பூக்கள் பட்டியல்தைப்பொங்கல்விஜயநகரப் பேரரசுஎட்டுத்தொகை🡆 More