அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்

அமராவதி (Amaravathi) இந்திய மாநிலம் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூராகும்.

இது கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி மண்டலத்தில் உள்ளது.இப்பகுதியில் அசோகர் காலத்து அமராவதி பௌத்த தொல்லியல் களம் உள்ளது.

அமராவதி
అమరావతి
அம்ராவதி, அமரேசுவரம்
சிற்றூர்
அமராவதியிலுள்ள புத்தர் சிலை
அமராவதியிலுள்ள புத்தர் சிலை
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
மண்டலம்அமராவதி
பரப்பளவு
 • மொத்தம்11.70 km2 (4.52 sq mi)
ஏற்றம்38 m (125 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,400
 • அடர்த்தி1,100/km2 (3,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைதெலுங்கு
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
பின்கோடு522 020
தொலைபேசி குறி+91–254
வாகனப் பதிவுAP–7
அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்
ஆந்திராவிலுள்ள புத்தத் தலங்களின் இருப்பிடங்களைக் காட்டும் நிலப்படம்
அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்
கௌதம புத்தர் மீதான மாறனின் தாக்குதல் சிற்பம்

அமராவதி தற்போது பேரூராட்சியால் நிர்வகிக்கப்படும் சிற்றூராக இருந்தபோதிலும், வரலாற்றில் முக்கியமான நகரமாக இருந்துள்ளது. பழங்காலத்தில் சாதவாகனர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இங்கு பஞ்சராமா தலங்களில் அமரராமாவில் அமைந்துள்ள சிறீ அமரலிங்கேசுவர சுவாமி கோவில் அமைந்துள்ளதால் இந்துக்களுக்கு புனிதத்தலமாக உள்ளது. தவிரவும் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையே கட்டப்பட்ட அமராவதி மகாசைத்ய தாது கோபுரம் புகழ்பெற்ற புத்தத் தலமாக விளங்குகின்றது. இந்திய அரசால் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அமராவதி இந்திய அரசின் பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் (இருதய்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா பிரிந்தபிறகான ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரம், அமராவதி, இவ்விடத்தின் பேராலேயே பெயரிடப்பட்டுள்ளது. ஆந்திர தலைநகர் வலயத்தில் அடங்கியுள்ள பல சிற்றூர்களில் ஒன்றாக அமராவதி உள்ளது. புதிய தலைநகருக்கான அடிக்கல் இடப்பட்ட உத்தண்டராயுனிப்பாளம் சிற்றூர் அமராவதிச் சிற்றூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.

சொல்லியல்

அமராவதி என்பது உள்ளூர் மொழியில் இறப்பில்லா நகரம் எனப் பொருள்படும். இங்குள்ள அமரேசுவரர் சிவன் கோவில் கொண்டும் இது அமரேசுவரம், என அழைக்கப்படுகின்றது. முன்னதாக ஆந்திர நகரி.. என்றும் அறியப்பட்டது.

வரலாறு

அமராவதி மற்றும் அதனை அடுத்துள்ள தரணிக்கோட்டையின் வரலாறு கி.மு இரண்டாம் நூற்றாண்டில் துவங்குகின்றது. இது கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை ஆண்ட சாதவாகனர்களின் தலைநகரமாக விளங்கியது. சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கிருஷ்ணா பள்ளத்தாக்கை ஆந்திர இசுவாகுகளும் பல்லவர்களும் ஆண்டு வந்தனர். இவர்களுக்குப் பின்னால் கீழைச் சாளுக்கியர்களும் தெலுங்குச் சோடர்களும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தினர். கோடா மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர் 11ஆம் நூற்றாண்டில் காக்கத்தியர்களின் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பேரரசின் அங்கமாக அமராவதி இருந்தது.கந்த புராணத்தில் இவ்விடம் குறித்தும் இங்குள்ள சிவன்கோவில் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

தில்லி சுல்தானகம், முசுநூரி நாயக்கர்கள், பாமினி சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசுகளின் அங்கமாக அமராவதி இருந்துள்ளது. 1724ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐதராபாத் நிசாம் ஆட்சியில் உள்ளடங்கியிருந்தது. 1750இல் அமராவதியை பிரான்சுக்கு நிசாம் வழங்கினார்; ஆனால் 1759இல் அவர்களிடமிருந்து இங்கிலாந்து பறித்துக் கொண்டது. 1768இல் மீண்டும் நிசாமிற்கு தரப்பட்ட அமராவதியை 1788இல் இங்கிலாந்திற்கே மீளவும் வழங்கினார். சிறிது காலத்திற்கு ஐதர் அலியும் கைப்பற்றியிருந்தார். பிரித்தானியக் குடியேற்றவாதக் காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்தது.

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம் சொல்லியல்அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம் வரலாறுஅமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம் இதனையும் காண்கஅமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம் மேற்சான்றுகள்அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம் வெளி இணைப்புகள்அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்அமராவதி பௌத்த தொல்லியல் களம்ஆந்திரப் பிரதேசம்இந்தியாகிருஷ்ணா ஆறுகுண்டூர் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரபுச்சொற்கள்சிவம் துபேஆங்கிலம்நீரிழிவு நோய்திருக்குர்ஆன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகீழடி அகழாய்வு மையம்பாரத ரத்னாமுருகா (திரைப்படம்)இரட்டைக்கிளவிவி.ஐ.பி (திரைப்படம்)குமரகுருபரர்ஔவையார்தேவேந்திரகுல வேளாளர்தொலைக்காட்சிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கலித்தொகைபுதிய ஏழு உலக அதிசயங்கள்நவரத்தினங்கள்அளபெடைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)கூகுள்சனீஸ்வரன்தொடை (யாப்பிலக்கணம்)ஜி. யு. போப்முடக்கு வாதம்நாய்அறுசுவைஐ (திரைப்படம்)நாயக்கர்செந்தாமரை (நடிகர்)குதிரைபுதுக்கோட்டைஅபூபக்கர்போக்குவரத்துரோகித் சர்மாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசுப்பிரமணிய பாரதிஅரிப்புத் தோலழற்சிபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்கருப்பசாமிதுரைமுருகன்ஆகு பெயர்பனைதங்க தமிழ்ச்செல்வன்ஒற்றைத் தலைவலிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்உலக நாடக அரங்க நாள்தேவாங்குவெ. இராமலிங்கம் பிள்ளைகாயத்ரி மந்திரம்தென் சென்னை மக்களவைத் தொகுதிகுப்தப் பேரரசுஅண்ணாமலை குப்புசாமிதமிழ் மாதங்கள்லோ. முருகன்அரச மரம்அம்மை நோய்தங்கர் பச்சான்இந்தியப் பிரதமர்அகநானூறுபரிவர்த்தனை (திரைப்படம்)தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதிருப்பாவைஆதம் (இசுலாம்)தேவநேயப் பாவாணர்நரேந்திர மோதிநாடகம்திருமலை நாயக்கர் அரண்மனைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஉவமையணிஅனுமன்சுருதி ஹாசன்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)இந்திய அரசியல் கட்சிகள்திருத்தணி முருகன் கோயில்தமிழ் எண் கணித சோதிடம்🡆 More