பிக்குகள்

புத்த பிக்குகள் பௌத்தம் உலகம் முழுக்க பரவுவதற்குக் காரணமாயிருந்தவர்கள்.

பெளத்த மதம் காட்டும் வழிகாட்டுதல்கள் யாவும் சுய மறுப்பையும் உலகு துறப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆகையால் புத்த பிக்குகளுக்கு பல்வேறு கடினமான பயிற்சிகளை புத்தம் அறிமுகப்படுத்தியது.

பிக்குகள்
தாய்லாந்து நாட்டு பிக்குகள்
பிக்குகள்
இலங்கை தேரவாத பிக்குகள்

நான்கு விசயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.

  1. ஆண்-பெண் கலவி கூடாது.
  2. புல்லைக் கூட திருடக் கூடாது.
  3. உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.
  4. இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது.

துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு புத்தாடைகளை அணியலாகாது. குப்பைகளில் வீசப்பட்ட பழந்துணிகளையும் பிணங்களைப் போர்த்திய ஆடைகளையும் பொறுக்கி அவற்றை விரிப்பாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய கந்தலாடைகளும் மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது. வருமானம் ஈட்ட எந்த முயற்சியும் செய்யக் கூடாது. பிச்சைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும். புத்த பிக்குகளைப் பொறுத்தவரை இதுவே தூய உணவாகும். புத்த பிச்சைகள் என்பதே மருவி புத்த பிக்குகள் என மாறியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பிக்குகள்

தமிழகத்தில் புத்த பிக்குகள் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று புத்த விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆசிரமங்களையும் நிறுவினார்கள்.

மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள்.

பெண் புத்த பிக்குகள்

ஆரம்ப கால புத்த மதத்தில் பெண் புத்த பிக்குகள் இல்லை. பிற்காலத்தில் பெண்களும் புத்த பிக்குகள் ஆயினர். மணிமேகலை காப்பிய நாயகி புத்த பிக்குணி ஆவாள். மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த கோவலன்-கண்ணகி இணையரின் மகள் ஆவாள். பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தி மணிமேகலை 17ஆம் காதையில் காணப்படுகிறது. அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையில் உள்ளது.

மேற்கோள்

Tags:

பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்நெருப்புநீதிக் கட்சிஹூதுஇன்ஸ்ட்டாகிராம்பர்வத மலைகருப்பசாமிஅரைவாழ்வுக் காலம்விபுலாநந்தர்விந்துஉத்தராகண்டம்கே. அண்ணாமலைஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிவேலு நாச்சியார்இந்திய தண்டனைச் சட்டம்காலிஸ்தான் இயக்கம்குறுந்தொகைஇந்திய ரூபாய்வயாகராதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்அஜித் குமார்திருமணம்கன்னியாகுமரி மாவட்டம்வீரமாமுனிவர்மூலம் (நோய்)வெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசுபொன்னியின் செல்வன் 1கே. என். நேருசட் யிபிடிசப்தகன்னியர்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிகுப்தப் பேரரசுஸ்டீவன் ஹாக்கிங்சீறாப் புராணம்வணிகம்சினைப்பை நோய்க்குறிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கலைமருது பாண்டியர்உயர் இரத்த அழுத்தம்பெரும்பாணாற்றுப்படையூத்அண்டர் தி டோம்காதலும் கடந்து போகும்முத்துலட்சுமி ரெட்டிமூதுரைசுற்றுச்சூழல் பாதுகாப்புஇணையம்பாரதிய ஜனதா கட்சிதஞ்சைப் பெருவுடையார் கோயில்காயத்ரி மந்திரம்சைவ சமயம்கம்பராமாயணம்கதீஜாஇன்று நேற்று நாளைமுக்கூடற் பள்ளுதமிழ் நாடக வரலாறுபிள்ளைத்தமிழ்வேதம்தமிழ் படம் 2 (திரைப்படம்)விஜய் (நடிகர்)ஜெயம் ரவிவிஜய் வர்மாகீழடி அகழாய்வு மையம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அக்கி அம்மைஇந்திய அரசியல் கட்சிகள்பதிற்றுப்பத்துவில்லங்க சான்றிதழ்கட்டபொம்மன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இராமானுசர்ஏ. ஆர். ரகுமான்எச்.ஐ.விதொகைச்சொல்🡆 More