ஏதெனா

ஏதெனா என்பவர் கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னிப்பெண் கடவுள் ஆவார்.

இவர் அறிவு, போர் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஒரு கிரேக்க நகருக்கு ஏதென்சு என்று பெயரிடப்பட்டது. அந்த நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயம் ஏதெனா கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

ஏதெனா
ஏதெனா
ஏதெனா
இடம்ஒலிம்பசு மலை
பெற்றோர்கள்சியுசு மற்றும் மெட்டிசு
சகோதரன்/சகோதரிசியுசின் அனைத்துப் பிள்ளைகள்

இவர் நகரத்தின்(போலிசு) பாதுகாவலராக இருப்பதால் பெரும்பாலான கிரேக்க மக்கள் இவரை ஏதெனா போலிசு என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

பிறப்பு

நீதி கடவுள் மெட்டீசு மேல் காமம் கொண்ட சியுசு அவருடன் உறவாடினார். பிறகு மெட்டிசுக்கு பிறக்கும் குழந்தை சியுசை விட வலிமையானதாக இருக்கும் என்று முன்கணிப்பு கூறியது. இதனால் பயந்த சியுசு மெட்டீசை விழுங்கிவிட்டார். ஆனால் மெட்டீசு ஏற்கனவே கருத்தரித்து இருந்தாள். பிறகு சியுசிற்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்தது. இதனால் ப்ரோமிதீயுசு, எப்பெசுடசு, ஏரெசு மற்றும் எர்மெசு ஆகியோர் லப்ரிசு எனப்படும் இரண்டு தலை கொண்ட கோடாரியால் சியுசின் தலையை வெட்டினர். அதில் இருந்து ஏதெனா தன் உடம்பு முழுவதும் கவசத்துடன் பிறந்தார்.

எரிச்டோனியசு

ஏதெனா 
எப்பெசுடசு மற்றும் ஏதெனா

ஒருநாள் ஏதெனா ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக எப்பெசுடசு கடவுளின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள ஏதெனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் ஏதெனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த ஏதெனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது படட்டதால் அவர் கருத்தரித்தார். இதன் மூலம் எரிச்தோனியசு என்ற மகன் பிறந்தான்.

குழந்தையாக இருந்த எரிச்டோனியசை சிசுடா எனப்படும் ஒரு சிறு பெட்டியில் அடைத்த ஏதெனா, ஏதென்சில் இருந்த எர்சி, பன்ட்ரோசசு மற்றும் அக்லோலசு ஆகிய மூன்று சகோதரிகளிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்தார். அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவர்களிடம் ஏதெனா கூறவில்லை. மாறாக இந்தப் பெட்டியை திறக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அந்த சகோதரிகளுள் இருவர் ஆர்வ மிகுதியால் அந்தப் பெட்டியைத் திறந்து விட்டனர். அப்போது அந்தக் குழந்தையைச் சுற்றியிருந்த ஒரு பாம்பு வெளிப்பட்டது. அது அந்த சகோதரிகள் இருவரையும் தூக்கி அக்ரோபோலிசு நகரத்திற்கு வீசியெறிந்தது.பிறகு வளர்ந்த எரிச்டோனியசு ஏதென்சு நகரின் புகழ்பெற்ற அரசன் ஆனான்.

மேற்கோள்கள்

Tags:

அறிவுஏதென்ஸ்பன்னிரு ஒலிம்பியர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியன் பிரீமியர் லீக்தொல்காப்பியம்மாமல்லபுரம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வட்டாட்சியர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நாடகம்தொலைக்காட்சிதனுசு (சோதிடம்)தமிழ்த்தாய் வாழ்த்துஅபினிவேலு நாச்சியார்பிரேசில்புணர்ச்சி (இலக்கணம்)இடைச்சொல்அஜித் குமார்உருவக அணிமயில்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்குப்தப் பேரரசுதமிழர் பருவ காலங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருநங்கைவெண்பாகுலுக்கல் பரிசுச் சீட்டுசனீஸ்வரன்பனைஹதீஸ்நாலடியார்சிறுகதைசீரடி சாயி பாபாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பனிக்குட நீர்திருமலை நாயக்கர் அரண்மனைஅளபெடைசெண்டிமீட்டர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஆற்றுப்படைசுப்பிரமணிய பாரதிதமிழர் அளவை முறைகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நிலக்கடலைசவ்வாது மலைசடுகுடுபல்லவர்போக்கிரி (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைதிரிகடுகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிராவிட இயக்கம்வாதுமைக் கொட்டைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிநீக்ரோதருமபுரி மக்களவைத் தொகுதிகுமரி அனந்தன்ஆதம் (இசுலாம்)உவமையணிசிவனின் தமிழ்ப் பெயர்கள்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)உணவுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024கேரளம்மக்காச்சோளம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ஸ்ரீசெம்மொழிசித்த மருத்துவம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்எயிட்சுபிள்ளைத்தமிழ்தமிழச்சி தங்கப்பாண்டியன்மட்பாண்டம்மாசாணியம்மன் கோயில்செஞ்சிக் கோட்டைபத்துப்பாட்டுதிராவிட மொழிக் குடும்பம்🡆 More