பாண்டியர் வழுதி

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.

இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும் தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும் போற்றப்படுகின்றனர்.

கூடல் , மருங்கை , கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.

வழுதி பல கோட்டைகளை வென்றவன். வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர் தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன் புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான்

வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல். இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன் வாணன் என்னும் வள்ளல்கள் வாழ்ந்துவந்தனர்.

வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்

  1. காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
  2. பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
  3. மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
  4. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
  5. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
  6. பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
  7. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
  8. பாண்டியன் மாறன் வழுதி
  9. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
  10. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
  11. பெருவழுதி
  12. குறுவழுதி
  13. நல்வழுதி
  14. அண்டர்மகன் குறுவழுதியார்

வழுதி - ஒப்புநோக்கு

வழுதி என்னும் பெயர் அடைமொழியுடனும், அடைமொழி இல்லாமலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யாரைக் குறிக்கின்றன என்பத்தை நோக்குவது வரலாறு.

பெயர் பாடல் குறிப்பு
அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி நற்றிணை 150 -
பசும் பூண் வழுதி நற்றிணை 358 மருங்கூர் அரசன்
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி அகநானூறு 93 கூடல் அரசன்
நல் தேர் வழுதி அகநானூறு 130 கொற்கை அரசன்
நல் தேர் வழுதி அகநானூறு 204 வெற்றிக்குப் பின்னர் பாசறையில் துன்பப்பட்டவன்
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி அகநானூறு 312 வேல் வீசி வென்றவன்
பெரும் பெயர் வழுதி அகநானூறு 315 கூடல் அரசன்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி புறநானூறு 3 பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
சினப்போர் வழுதி புறநானூறு 51 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
இயல்தேர் வழுதி புறநானூறு 52 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
தகைமாண் வழுதி புறநானூறு 59 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
அண்ணல் யானை வழுதி புறநானூறு 388 தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன்

அடிக்குறிப்பு

Tags:

பாண்டியர் குடிப்பெயர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல். திருமாவளவன்ஆழ்வார்கள்பகத் சிங்குதிரைமலை (இலங்கை)மகாபாரதம்தீரன் சின்னமலைஆற்றுப்படைமறவர் (இனக் குழுமம்)கருமுட்டை வெளிப்பாடுதிருப்போரூர் கந்தசாமி கோயில்அன்னை தெரேசாதமிழ்நாடுகண்டி மணிக்கூட்டுக் கோபுரம்கார்லசு புச்திமோன்இயற்கைசிவாஜி (பேரரசர்)தேவ கௌடாமருதமலை முருகன் கோயில்மண் பானைநுரையீரல்சமயக்குரவர்இன்று நேற்று நாளைஇலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்தாவீது அரசர்குக்கு வித் கோமாளிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திருநங்கைஒத்துழையாமை இயக்கம்வேற்றுமைத்தொகைமரகத நாணயம் (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிஔரங்கசீப்காதல் கோட்டைபஞ்சாப் கிங்ஸ்திருமலை நாயக்கர் அரண்மனைஅளபெடைதொடை (யாப்பிலக்கணம்)காடுஜெய்தொலெமிகிரியாட்டினைன்நுரையீரல் அழற்சிதண்டியலங்காரம்ஆந்திரப் பிரதேசம்தமிழ்விடு தூதுநிதி ஆயோக்பரிபாடல்அண்ணாமலை குப்புசாமிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்யாவரும் நலம்பரிதிமாற் கலைஞர்சங்க இலக்கியம்புரோஜெஸ்டிரோன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)புவிகமல்ஹாசன்மரபுச்சொற்கள்சிவபுராணம்பாரதிதாசன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்விலங்குஸ்ரீஆத்திசூடிகாவிரிப்பூம்பட்டினம்சீமான் (அரசியல்வாதி)இயேசுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருக்குறள்இலங்கையின் தலைமை நீதிபதிதமிழ்ப் பருவப்பெயர்கள்ஆங்கிலம்மருத (திரைப்படம்)புலிவிநாயகர் அகவல்திருமூலர்மயில்புற்றுநோய்கர்ணன் (மகாபாரதம்)🡆 More