மாங்குளம் கல்வெட்டுகள்

மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.

கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

மாங்குளம் கல்வெட்டுகள்
மாங்குளம் கல்வெட்டின் மாதிரி
மாங்குளம் கல்வெட்டுகள்
தற்கால தமிழில் மாங்குளம் கல்வெட்டின் செய்திகள்
மாங்குளம் கல்வெட்டுகள்
மாங்குளம் தமிழ் வெட்டழுத்துக்கள், கல்வெட்டு எண் 2 (மாதிரி)

இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர் இது பற்றிய விரிவான விளக்கங்களுடன் 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டின் மூன்றாவது அமர்வில் "பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுக்களும்" என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தார்.

கல்வெட்டுச் செய்திகள்

பெரும்பாலும் இக் கல்வெட்டுச் செய்திகள் அனைத்துமே பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன.

  • கல்வெட்டு 1
    நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை) அமைத்துக் கொடுத்துள்ளார்.
  • கல்வெட்டு 2
    நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.
  • கல்வெட்டு 3
    வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்னும் ஒரு முத்து வணிகன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது.
  • கல்வெட்டு 4
    நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.
  • கல்வெட்டு 5
    சந்திரிதன் கொடுபித்தோன்.
  • கல்வெட்டு 6
    இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மாங்குளம் கல்வெட்டுகள் கல்வெட்டுச் செய்திகள்மாங்குளம் கல்வெட்டுகள் இவற்றையும் பார்க்கவும்மாங்குளம் கல்வெட்டுகள் மேற்கோள்கள்மாங்குளம் கல்வெட்டுகள் வெளி இணைப்புகள்மாங்குளம் கல்வெட்டுகள்கிமுகிமு 3ம் நூற்றாண்டுதமிழ் பிராமிதமிழ்நாடுதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்மாங்குளம், மதுரை மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உ. வே. சாமிநாதையர்போயர்கமல்ஹாசன்செண்பகராமன் பிள்ளைசிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திருப்பாவைஉரைநடைஎஸ். ஜெகத்ரட்சகன்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிரயத்துவாரி நிலவரி முறைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்வைப்புத்தொகை (தேர்தல்)விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)இராவணன்கொன்றை வேந்தன்உமறு இப்னு அல்-கத்தாப்குண்டூர் காரம்அரண்மனை (திரைப்படம்)வன்னியர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்இந்தியாமக்காச்சோளம்சத்குருசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)காதல் மன்னன் (திரைப்படம்)உணவுவடிவேலு (நடிகர்)வசுதைவ குடும்பகம்ஆசிரியர்மணிமேகலை (காப்பியம்)தென்காசி மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇயேசுவின் உயிர்த்தெழுதல்மீனா (நடிகை)தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்அகத்தியமலைதமிழர் கலைகள்கருப்பைவெந்து தணிந்தது காடுமார்ச்சு 27பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிஇந்தியத் தேர்தல்கள்இந்திய தேசியக் கொடிதிராவிட இயக்கம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்ஹஜ்பல்லவர்அருந்ததியர்சமந்தா ருத் பிரபுவானொலிநற்கருணை ஆராதனைமருதமலைமலைபடுகடாம்கர்நாடகப் போர்கள்வெள்ளியங்கிரி மலைஜெ. ஜெயலலிதாபீப்பாய்பண்ணாரி மாரியம்மன் கோயில்ஆந்திரப் பிரதேசம்வாக்குரிமைபஞ்சதந்திரம் (திரைப்படம்)இளையராஜாஅன்புகுடும்பம்கங்கைகொண்ட சோழபுரம்ஹாட் ஸ்டார்ஆடுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கடல்இந்திரா காந்திதமிழில் கணிதச் சொற்கள்மஜ்னுசடுகுடுகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிபெரிய வியாழன்நஞ்சுக்கொடி தகர்வு🡆 More