வடகிழக்கு இந்தியா

ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா (Seven Sister States) என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எட்டு சிறிய மாநிலங்களைக் குறிக்கும்.

அவையாவன: அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர். பிற மாநிலங்களில் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் அரசு பேருந்துகள், தொழில்சாலைகள் ஆகியவை குறைந்த அளவே உள்ளன. அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள். அசாம் மாநிலம் மட்டும் வளர்ச்சியில் சற்று உயர்ந்தவை.

வடகிழக்கு இந்தியா
Northeast india map.png
நாடுஇந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வடகிழக்கு இந்திய மாநிலங்கள்
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
சிக்கிம்
திரிபுரா
பெரிய நகரம்குவகாத்தி
பரப்பளவு
 • மொத்தம்262,230 km2 (1,01,250 sq mi)
மக்கள்தொகை (இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011)
 • மொத்தம்45,772,188
 • அடர்த்தி170/km2 (450/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம்
அலுவல் மொழிகள்அசாமிய
போடோ
காரோ
தாமாங்
காசி
கொக்பரோக்
மணிப்புரி
நேபாளி
இந்தி
ஆங்கிலம்
வங்காளி
வடகிழக்கு இந்தியா
இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்கள்
வடகிழக்கு இந்தியா
இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையின் கீழ் அமைந்த வடகிழக்கு இந்தியாவின் தன்னாட்சிப் பகுதிகள்

பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் இப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேழு மாநிலங்களும் “வட கிழக்கு மாநிலங்கள்” என்றும் கூட்டாக வழங்கப்படுகின்றன.

வடகிழக்கு இந்திய மாநிலங்களின் உருவாக்கம்

தற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்தியப் பிரதேசங்கள் வந்தன.

1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.

அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது. மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.

தனி நாடாக இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு மண்டலக் குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது. அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது.

மாநிலம் வரலாற்றுப் பெயர் தலைநகரம் மாநிலத் தகுதி
அருணாச்சலப் பிரதேசம் நேபா இட்டாநகர் 1987 (1956 முதல் 1987 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)
அசாம் பிராக்ஜோதிஷ்புரம் திஸ்பூர் 1947
மணிப்பூர் கங்கெலய்பாக் இம்பால் 1972 (1956 முதல் 1972 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)
மேகாலயா சில்லாங் 1972
மிசோரம் லுசாய் அய்சால் 1987 (1956 முதல் 1987 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)
நாகாலாந்து கோகிமா 1963
சிக்கிம் கேங்டாக் 1975
திரிபுரா திப்பெரா அகர்தலா 1972 (1956 முதல் 1972 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

அசாம்அருணாசலப் பிரதேசம்இந்தியாசிக்கிம்திரிபுராநாகாலாந்துமணிப்பூர்மிசோரம்மேகாலயா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நிதி ஆணையம்திரிகடுகம்கொன்றை வேந்தன்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பரிபாடல்பயண அலைக் குழல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருநாவுக்கரசு நாயனார்விஜய் ஆண்டனிஏலாதிசிறுநீரகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குற்றியலுகரம்முகலாயப் பேரரசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஅரிப்புத் தோலழற்சிஆ. ராசாமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வைகோகொல்லி மலைஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுமுதலாம் இராஜராஜ சோழன்மேற்குத் தொடர்ச்சி மலைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய ரிசர்வ் வங்கிமொழிபெயர்ப்புசேலம் மக்களவைத் தொகுதிமுகம்மது நபிவெந்து தணிந்தது காடுபறையர்கட்டுவிரியன்ரோசுமேரிஇனியவை நாற்பதுகார்லசு புச்திமோன்இந்தோனேசியாகாயத்ரி மந்திரம்நாட்டார் பாடல்தற்கொலை முறைகள்சேரர்கோத்திரம்சித்தர்கள் பட்டியல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பகவத் கீதைஇந்திய நாடாளுமன்றம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிநஞ்சுக்கொடி தகர்வுராச்மாசோழர்சிவம் துபேஸ்ருதி ராஜ்மனித உரிமைதமிழ்நாடு அமைச்சரவைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கிராம ஊராட்சிமேழம் (இராசி)சேக்கிழார்சுரதாமுப்பத்தாறு தத்துவங்கள்திருமுருகாற்றுப்படைகா. ந. அண்ணாதுரைஇரண்டாம் உலகப் போர்விசயகாந்துவேதம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஜெயம் ரவிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மதயானைக் கூட்டம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆதலால் காதல் செய்வீர்இந்திய அரசியலமைப்புமுகம்மது நபியின் இறுதிப் பேருரைதமிழ் தேசம் (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிறுதானியம்🡆 More