மான்

புதிய உலக மான் பழைய உலக மான்

Deer
புதைப்படிவ காலம்:Early Oligocene–Recent
PreЄ
Pg
N
மான்
Images of a few members of the family Cervidae (clockwise from top left) consisting of the red deer, the sika deer, the சதுப்புநில மான், the reindeer, and the வர்ச்சீனிய தூவால் மான்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
உள்வகுப்பு:
Eutheria
வரிசை:
துணைவரிசை:
Ruminantia
உள்வரிசை:
குடும்பம்:
செர்விடே

Goldfuss, 1820
துணைக்குடும்பங்கள்

மான்
அனைத்து மானினங்களின் மொத்தப் பரவல்

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்காகும். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்தது. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் காட்டுமான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ கிராம் (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.

இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.

உயிரியியல்

உணவு

மான்கள் இலை தழைகளையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வயிறு சிறிதாகவும் மற்ற அசைபோடும் விலங்குகளைப் போல சிறப்பமைப்புகளைப் பெறாமலும் உள்ளது. மேலும் இவற்றுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே மாடு செம்மறி ஆடு போன்ற விலங்குகள் உண்பதைப்போல சத்துக்குறைவான நார்ச் சத்து நிறைந்த உணவை இவை தின்பதில்லை. சத்து நிறைந்த துளிர்கள், புற்கள், பழங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவற்றின் கொம்பு வளர்ச்சிக்கு கால்சியமும் பாசுப்பேட்டும் மிகவும் தேவையாக இருக்கிறது

இனப்பெருக்கம்

மான்களில் குட்டிகளைத் தாய் மானே வளர்க்கிறது. மானின் சினைக்காலம் பத்து மாதங்கள். மான்கள் ஆகத்து முதல் திசம்பர் வரையில் இணை சேர்கின்றன. ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். அரிதாக மூன்று குட்டிகளும் ஈனுவது உண்டு. மான் குட்டி பிறந்த 20 நிமிடங்களிலேயே நிற்க முடிகிறது. மேலும் ஒரு வாரம் குட்டிகள் புற்களுக்குள் மறைந்து வாழும். பின்னர் தாயுடன் நடக்கத் தொடங்கும். குட்டிகள் தாயுடன் ஓராண்டு வரை வாழும். ஆண் குட்டிகள் அதன் பின் தன் தாயை மீண்டும் சந்திப்பதில்லை. ஆனால் பெண் குட்டிகள் வளர்ந்து தங்கள் குட்டிகளுடன் வந்து கூட்டமாக வாழக்கூடும்.

தோற்றக்குறிப்பு

கொம்புகள்

நீர் மானைத் தவிர மற்ற மானினங்கள் அனைத்திலும் ஆண் மான்களுக்குக் கொம்புகள் உண்டு. பெண் மான்களுக்குப் பொதுவாக கொம்புகள் இல்லை எனினும் சில இனங்களில் சிறிய கொம்புகள் உள்ளன.

கலையின் (கலை = ஆண்மான்) கொம்பு அதன் சமூக மதிப்பு நிலையைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக பெரிய கொம்புகளை உடைய மான்கள் அதன் கூட்டத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறது. மேலும் அதன் கொம்புகள் விழுவதும் தள்ளப்போகிறது. கொம்புகள் மானின் மரபணுத் தரத்தையும் காட்டுகின்றன. பெரிய கொம்புகளை உடைய கலைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் தன் இனத்தைப் பெருக்கும் திறனும் மிகுதியாக இருக்கும்.

உள்ளினங்கள்

செர்விடீ
பழைய உலக மான்
முந்தியாசினி

ரீவா கேளையாடு

சிண்டு மான் மான் 

செர்வினி

இளம்பழுப்பு மான் மான் 

பெர்சிய இளம்பழுப்பு மான்

சாவா உருசா மான் 

கடமான் மான் 

சிவப்பு மான் மான் 

தோரோல்டு மான்மான் 

சிக்கா மான்மான் 

தாமின் மான்மான் 

பெரே டேவிட் மான்மான் 

சதுப்புநில மான்மான் 

இந்திய பன்றி மான்

புள்ளிமான்மான் 

புதிய உலக மான்
Rangiferini

துருவ மான் மான் 

American red brocket மான் 

வர்ச்சீனிய தூவால் மான் மான் 

கோவேறு கழுதை மான் மான் 

Marsh deer

Gray brocket

Southern pudu மான் 

Taruca மான் 

Capreolini

ரோ மான் மான் 

நீர் மான் மான் 

Alceini

ஐரோவாசியக் காட்டுமான் மான் 

மேற்கோள்கள்

Tags:

மான் உயிரியியல்மான் தோற்றக்குறிப்புமான் கொம்புகள்மான் உள்ளினங்கள்மான் மேற்கோள்கள்மான்பழைய உலக மான்புதிய உலக மான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கபடிஉடனுறை துணைகற்றாழைகருப்பசாமிஒட்டுண்ணி வாழ்வுவாழைப்பழம்மருந்துப்போலிதோட்டம்செயற்கை அறிவுத்திறன்பிள்ளைத்தமிழ்பெரியாழ்வார்ரக்அத்நம்ம வீட்டு பிள்ளைமார்ச்சு 27மகாபாரதம்அபூபக்கர்திருவள்ளுவர் ஆண்டுபதினெண் கீழ்க்கணக்குஇரசினிகாந்துஒயிலாட்டம்புதன் (கோள்)பெண்ணியம்இன்னொசென்ட்எல். இராஜாதமிழர்விரை வீக்கம்லக்ன பொருத்தம்கொங்கு நாடுகாளமேகம்மனித மூளைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தேம்பாவணிகர்ணன் (மகாபாரதம்)முக்கூடற் பள்ளுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ஸ்ரீவிவேகானந்தர்ரோசாப்பூ ரவிக்கைக்காரிமாமல்லபுரம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பழமுதிர்சோலைமாணிக்கவாசகர்வராகிஅரைவாழ்வுக் காலம்முதலாம் கர்நாடகப் போர்டெலிகிராம், மென்பொருள்விளையாட்டுவிட்டலர்சிறுபஞ்சமூலம்முன்மார்பு குத்தல்முல்லைப்பாட்டுஹாட் ஸ்டார்தைப்பொங்கல்அரிப்புத் தோலழற்சிஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956நாயக்கர்திருமூலர்பார்க்கவகுலம்சேரர்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)இராமர்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுதனுஷ்கோடிகடையெழு வள்ளல்கள்விஸ்வகர்மா (சாதி)டிரைகிளிசரைடுதொழுகை (இசுலாம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழரசன்பாஞ்சாலி சபதம்கபிலர் (சங்ககாலம்)பாத்திமாகுடிப்பழக்கம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய மொழிகள்நூஹ்குணங்குடி மஸ்தான் சாகிபு🡆 More