ஐரோவாசியக் காட்டுமான்: பாலூட்டி

ஐரோவாசியக் காட்டுமான் (elk அல்லது moose, Alces alces) என்பது புதிய உலக மான் வகைகளில் ஒன்று.

Teleostomi

பூமியில் வாழும் மான் குடும்ப உயிரினங்களில் மிகப் பெரியதாகும். இவை கனடா, அலாஸ்கா, நியூ இங்கிலாந்து, பென்னோஸ்காண்டியா, பால்டிக் நாடுகள் மற்றும் உருசியாவில் காணப்படுகின்றன. இவை ஓநாய், கரடிகள் மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. மற்ற வகை மான்களைப் போல் இல்லாமல் மூஸ்கள் தனியாக வாழ்கின்றன, கூட்டமாக வாழ்வது இல்லை. இவை பொதுவாக மெதுவாக நகரக் கூடியவை, ஆனால் கோபப்படுத்தப்பட்டால் வேகமாகவும், மூர்க்கத்தனத்துடனும் நடந்து கொள்ளும்.

ஐரோவாசியக் காட்டுமான்
ஐரோவாசியக் காட்டுமான்: பாலூட்டி
ஆண்
ஐரோவாசியக் காட்டுமான்: பாலூட்டி
பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
கிரே, 1821
இனம்:
A. alces
இருசொற் பெயரீடு
Alces alces
(லின்., 1758)
ஐரோவாசியக் காட்டுமான்: பாலூட்டி
வாழிடப் பரவல்
வேறு பெயர்கள்

Cervus alces Linnaeus, 1758

பண்புகள்

சுமாா் 7-8 அடி உயரமிருக்கும். ஆண்களுக்கு விரிந்த கொம்புகளுண்டு. இந்தக் கொம்புகள் சிலவற்றில் 6அடி அகலம்கூட உண்டு. உலகத்திலேயே மிகவும் பரந்த கொம்புள்ள பிராணி இது. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் இந்தக்கொம்புகள் உதிர்ந்து ஆறு மாதத்தில் மீண்டும் முளைத்துவிடும். இதன் கழுத்தடியில் மண் போன்ற ஒரு தோல் மடிப்பு தொங்கும். வெயில் காலத்தில் நீர் நிலைகளுக்கு அருகே வசிக்கும். இவை வெகுவேகமாக நடப்பது மட்டுமல்ல நன்றாக நீந்தவும் செய்யும். தழைகளே இவற்றின் உணவு. பாசிகளையும் நீர்செடிகளையும் உண்ணும். பின் கால்களால் நின்று கொண்டு 12-15 அடி உயரத்தில் இருக்கும் தழைகளைக்கூட உண்ண முடியும். ஒரு முறைக்கு ஒரு குட்டி போடும். ஒரு வயதுவரை குட்டி தாயுடனேயே இருக்கும். இவற்றிற்கு காது மிகவும் கூர்மை. இவற்றிற்கு அதிகரோமம் இருப்பதால் குளிரை தாங்கும் திறன் உண்டு. ஆனால் திடீர் என குளிர் அதிகரித்தால் காய்ச்சல் வந்து விடும். இவற்றிற்கு மூளைக்கோளாறு, கண்வலி, வயிற்று வலி போன்ற நோய்கள் கூட வருவதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

  • பத்மா ராஜகோபால்,டிசம்பா் 2000,"உலக விலங்குகள்".சென்னை,திருமுருக பதிப்பகம்,பக்க எண் 103-104.
  • The Book of Animal Ignorance: Everything You Think You Know Is Wrong By John Mitchinson, John Lloyd—Harmony Books 2007 Page 141

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயற்கைமகேந்திரசிங் தோனிநுரையீரல் அழற்சிபுவியிடங்காட்டிமாணிக்கவாசகர்சைவ சமயம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கட்டுவிரியன்வீரமாமுனிவர்முத்துலட்சுமி ரெட்டிவைதேகி காத்திருந்தாள்தமிழர் தொழில்நுட்பம்தேவயானி (நடிகை)கோவிட்-19 பெருந்தொற்றுபதிற்றுப்பத்துதமிழ்விடு தூதுமுதலாம் இராஜராஜ சோழன்ஆறுவிருமாண்டிதிதி, பஞ்சாங்கம்சமூகம்பூக்கள் பட்டியல்சினைப்பை நோய்க்குறிதிருவரங்கக் கலம்பகம்வைர நெஞ்சம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்இயேசுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமுத்தரையர்மலையாளம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)ஐம்பெருங் காப்பியங்கள்சூல்பை நீர்க்கட்டிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திரு. வி. கலியாணசுந்தரனார்கொன்றைபெரியாழ்வார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பிள்ளையார்கள்ளர் (இனக் குழுமம்)புலிபிள்ளைத்தமிழ்காயத்ரி மந்திரம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுநாலடியார்இசுலாமிய வரலாறுதமிழர்ஆழ்வார்கள்வணிகம்சாகித்திய அகாதமி விருதுசுற்றுச்சூழல் பாதுகாப்புவிஸ்வகர்மா (சாதி)கிராம சபைக் கூட்டம்சேரன் (திரைப்பட இயக்குநர்)சுடலை மாடன்தமிழ்நாடு அமைச்சரவைதண்டியலங்காரம்இந்திய நாடாளுமன்றம்இன்ஸ்ட்டாகிராம்பரணி (இலக்கியம்)சோமசுந்தரப் புலவர்மனித வள மேலாண்மைபுதன் (கோள்)விஷால்புறநானூறுகொல்லி மலைகலம்பகம் (இலக்கியம்)கற்றாழைவெள்ளி (கோள்)சிவாஜி கணேசன்ஆய்த எழுத்துமனித மூளைரஜினி முருகன்தீரன் சின்னமலை🡆 More