மலாலா யூசப்சையி

மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார்.

இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

மலாலா யூசப்சையி
மலாலா யூசப்சையி
தாய்மொழியில் பெயர்ملاله یوسفزۍ
பிறப்பு12 சூலை 1997 (1997-07-12) (அகவை 26)
மிங்கோரா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
இனம்பஷ்தூன்
பணிபெண்களின் உரிமைகள், கல்வி, வலைப்பதிவர்
அறியப்படுவதுதாலிபானின் கொலை முயற்சி
சமயம்சன்னி இசுலாம்
உறவினர்கள்Ziauddin Yousafzai (தந்தை)

மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது.

மலாலா யூசப்சையி
மலாலா யோசப்சையி

2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

திருமணம்

மலாலா யூசுப்சையி, நவம்பர் 15, 2021 அன்று, பர்மிங்காமில் பாக்கித்தான் துடுப்பாட்ட கழக மேலாளரான அசர் மாலிக்கை மணந்தார்.

விருதுகள்

மலாலா தினம் அனுசரிப்பு

2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மலாலா யூசப்சையி திருமணம்மலாலா யூசப்சையி விருதுகள்மலாலா யூசப்சையி மலாலா தினம் அனுசரிப்புமலாலா யூசப்சையி மேற்கோள்கள்மலாலா யூசப்சையி வெளி இணைப்புகள்மலாலா யூசப்சையிஉருதுதாலிபான்பாகிசுத்தான்பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்பி.பி.சி.வடமேற்கு எல்லைப்புற மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் பசுமைப் புரட்சிதிவ்யா துரைசாமிஇரட்சணிய யாத்திரிகம்ஜன்னிய இராகம்சுபாஷ் சந்திர போஸ்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பெ. சுந்தரம் பிள்ளைதிட்டக் குழு (இந்தியா)கட்டுவிரியன்தனுசு (சோதிடம்)அங்குலம்அபிராமி பட்டர்உயிர்ச்சத்து டிஅப்துல் ரகுமான்உத்தரகோசமங்கைகாற்றுமதராசபட்டினம் (திரைப்படம்)மெய்ப்பொருள் நாயனார்இமயமலைசங்க காலம்கொடைக்கானல்சாகித்திய அகாதமி விருதுவெட்சித் திணைதொல்காப்பியம்இன்ஸ்ட்டாகிராம்முல்லைப்பாட்டுராஜா ராணி (1956 திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்மதீச பத்திரனஜெ. ஜெயலலிதாமாரியம்மன்வேதம்பகிர்வுகண்ணனின் 108 பெயர் பட்டியல்சிறுபாணாற்றுப்படைநயினார் நாகேந்திரன்எயிட்சுகலாநிதி மாறன்விளக்கெண்ணெய்சபரி (இராமாயணம்)பாரத ரத்னாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருமலை நாயக்கர்முல்லைக்கலிசதுரங்க விதிமுறைகள்தேவநேயப் பாவாணர்குணங்குடி மஸ்தான் சாகிபுநெருப்புதேனீதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மனித வள மேலாண்மைஉப்புச் சத்தியாகிரகம்வெண்குருதியணுஅகரவரிசைஇந்திய நிதி ஆணையம்தமிழர் அளவை முறைகள்ஆய்த எழுத்து (திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைமரம்சேரன் செங்குட்டுவன்இந்தியப் பிரதமர்முடக்கு வாதம்தமிழ் இலக்கணம்வைரமுத்துஇட்லர்ஐங்குறுநூறுமறவர் (இனக் குழுமம்)பகத் பாசில்ஏலாதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ் எழுத்து முறைஜோதிகாவல்லினம் மிகும் இடங்கள்கல்விக்கோட்பாடுகுற்றாலக் குறவஞ்சிவிஸ்வகர்மா (சாதி)மு. வரதராசன்தஞ்சாவூர்🡆 More