செஞ்சேரிமலை

செஞ்சேரிமலை என்பது தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில், சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும்.

இங்கு மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு நல்ல தோற்றத்துடன் காணப்படுகிறது. இப்பகுதியானது தென்னை விவசாயத்திற்குப் பெயர் பெற்று விளங்குகின்றது.

செஞ்சேரிமலை
—  சிற்றூராட்சி  —
அமைவிடம்
நாடு செஞ்சேரிமலை இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப
ஊராட்சித் தலைவர் முத்துமாணிக்கம்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி சூலூர்
சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

மக்கள் தொகை 2,458
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


வரலாறு

தன்னை அடைந்தார்க்கு மட்டும் இன்றி மனதில் நினைத்தார்க்கும் இன்பங்களையும் நல்வாழ்வையும் அளிக்கும் பொருட்டு அருள்மிகு மந்திரகிரிவேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் ஆறுமுகப்பெருமானாய் எழில்மிகு மேனி தாங்கி அருளும் தலம் தென்சேரிமலை என்பதாகும். இத்தலம் கொங்கு வள நாட்டில் கோவை மாவட்டம்,சூலூர் வட்டம்,சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இத்தலம் குன்றுதோறடல் என்ற சிறப்பின் படியும் ஆதிபடைவீடு என்றும் சிறப்பாக வழங்கப்படுகிறது.

தேவர்களைத் துன்புறுத்தும் அசுர மன்னன் சூரபத்மனை அழிக்க முருகன் படைக்கப்பட்டான். முருகன் போருக்குப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பார்வதி சிவபெருமானால் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசிக்க விரும்பினார். முருகன் தந்தையை அணுகியபோது, ​​கடும் தவம் செய்த பிறகுதான் முடியும் என்றும், கடம்ப மரம், கங்கை நீர், தர்பை, மகாவிஷ்ணுவுக்கு சிவ தீக்ஷை பெற்ற சந்நிதி என நான்கு வேதங்கள் இருக்கும் இடத்தில்தான் செய்ய வேண்டும் என்றும் கூறினார்

முருகப்பெருமான் பூமிக்கு வந்து இத்தனை குணாதிசயங்கள் கொண்ட இடத்தைத் தேடத் தொடங்கினார். செஞ்சேரிமலையில் - கடம்ப மரம், தர்பை, ஞான தீர்த்த சுனை வடிவில் கங்கை நீர் மற்றும் மகாவிஷ்ணு சிவ தீக்ஷை பெற்ற சின்னமலை ஆகிய இடங்களில் எல்லாம் நேர்கோட்டில், அருகருகே அமைந்துள்ளன. அவர் இங்கே தவம் செய்தார், முழு திருப்தியடைந்த பிறகு, சிவன் மந்திரத்தை உபதேசித்தார் மற்றும் வெல்ல முடியாத சக்திகளையும் வழங்கினார். மந்திரம் இங்கு பரிபாலனம் செய்யப்பட்டதால், அது மந்திரகிரி ஆனது.

இந்த கோவில் முதலில் கரிகால சோழனால் கட்டப்பட்டது மற்றும் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் வீர பல்லாலனால் புதுப்பிக்கப்பட்டது

இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மூலவர் மந்திராசலமூர்த்தி / தண்டாயுதபாணி / வேலாயுத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். வேலாயுதம் தனது 12 கைகளுடன், சேவல் சின்னம் கொண்ட கொடியையும், இடது கையில் சேவலையும் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். உற்சவர் முத்துக்குமாரர். விஷ்ணு பகவான் வலது கையில் சிவலிங்கத்துடன் அருள்பாலிப்பது இக்கோயிலின் சிறப்பு. நவகிரக சன்னதியில் சூரிய பகவான் மேற்கு நோக்கிய நிலையில் மற்ற கிரகங்கள் அவருக்கு எதிராக உள்ளன.

சாயிலோக தீர்த்தம், ஞான தீர்த்த சுனை, சரஸ்வதி தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கனர் சுனை மற்றும் வள்ளி தீர்த்தம் ஆகியவை இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தங்களாகும். கோடையில் கூட வறண்டு போகாத வற்றாத நீரூற்று இந்த மலையில் உள்ளது. ஸ்தல விருட்சம் என்பது கடம்ப மரம் (நியோலமார்க்கியா கடம்ப).

பொருளாதாரம்

  • இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கோழிப்பண்ணை தொழிலையே நம்பி உள்ளனர்.
  • மேலும் இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலையே நம்பி உள்ளனர்.
  • மேலும் அரசு பள்ளி இங்கு உள்ளது.
  • தனியார் பள்ளிகள் இங்கு உள்ளது.

போக்குவரத்து

இங்கிருந்து மாவட்ட தலைநகரான கோயமுத்தூருக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் பல்லடம், காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, சூலூர், உடுமலைப்பேட்டை, பெதம்பம்பட்டி என அருகாமை நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

மக்கள் தொகை

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இங்கு 1,765 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 49.02% பேர் ஆண்களும் 50.98% பேர் பெண்களும் வசிக்கின்றனர்.[சான்று தேவை]

தை பூச தேர் திருவிழா

இங்கு மலைமேல் அமைந்துள்ள மந்தரகிரி வேலாயுத சுவாமிக்கு வருடாவருடம் தேர்த் திருவிழா மிகவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 2 தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. முதல் தேர் செஞ்சேரிப்புத்தூர் தேர் இழுக்கப்படும். பிறகு இரண்டாவது தேர் செஞ்சேரிமலை தேர் இழுப்பர். இவ்விரு தேர்களையும் புதுப்பிக்க வருடாவருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் தேர்த் திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதுண்டு.

சின்ன மலை

செஞ்சேரிமலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மற்றொரு கோவில் சின்ன மலை பெருமாள் கோவில் ஆகும். இங்கு புரட்டாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கோவில் மலைமேல் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

செஞ்சேரிமலை வரலாறுசெஞ்சேரிமலை பொருளாதாரம்செஞ்சேரிமலை போக்குவரத்துசெஞ்சேரிமலை மக்கள் தொகைசெஞ்சேரிமலை தை பூச தேர் திருவிழாசெஞ்சேரிமலை சின்ன மலைசெஞ்சேரிமலை மேற்கோள்கள்செஞ்சேரிமலைகோயம்புத்தூர் மாவட்டம்சூலூர்ஜெயலலிதாதமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்கிட்டி ஓ'நீல்வீரப்பன்ஆதி திராவிடர்முடக்கு வாதம்திருப்பதிதமிழ் மன்னர்களின் பட்டியல்திருவாதிரை (நட்சத்திரம்)இராசேந்திர சோழன்பதினெண்மேற்கணக்குமுப்பரிமாணத் திரைப்படம்பிரம்மம்ஐயப்பன்மாதுளைகாப்சாகாதலும் கடந்து போகும்பரிபாடல்நெல்திருப்பாவைசட் யிபிடிஅதியமான் நெடுமான் அஞ்சிஇஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்வைணவ சமயம்டி. எம். சௌந்தரராஜன்இந்திய மொழிகள்அரிப்புத் தோலழற்சிவேலு நாச்சியார்சூரரைப் போற்று (திரைப்படம்)நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)நம்ம வீட்டு பிள்ளைகம்பராமாயணம்சீரடி சாயி பாபாமுதலாம் உலகப் போர்உடனுறை துணைநெடுஞ்சாலை (திரைப்படம்)கயிலை மலைமுதலுதவிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாளிதழ்சிறுநீரகம்சுந்தரமூர்த்தி நாயனார்இணையம்சுடலை மாடன்மனித மூளைகுதிரைநவதானியம்மனித நேயம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திய வரலாறுமார்பகப் புற்றுநோய்பணவீக்கம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஎட்டுத்தொகை தொகுப்புஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956நுரையீரல் அழற்சிமயக்கம் என்னவிளம்பரம்வரிவீரமாமுனிவர்சுரைக்காய்டொயோட்டாநான் சிரித்தால்விஸ்வகர்மா (சாதி)தமிழர் விளையாட்டுகள்வேற்றுமையுருபுஇந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்கலித்தொகைதிருவாரூர் தியாகராஜர் கோயில்பால்வினை நோய்கள்மூதுரைஏ. ஆர். ரகுமான்ஓரங்க நாடகம்அல்லாஹ்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மிருதன் (திரைப்படம்)தைப்பொங்கல்🡆 More