எழுத்தாளர் சுஜாதா: தமிழ் எழுத்தாளர்

சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.

இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

எஸ். ரங்கராஜன்
எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா
பிறப்புஎஸ். ரங்கராஜன்
(1935-05-03)மே 3, 1935
திருவல்லிக்கேணி, சென்னை, இந்தியா
இறப்புபெப்ரவரி 27, 2008(2008-02-27) (அகவை 72)
சென்னை, இந்தியா
புனைபெயர்சுஜாதா
தொழில்பொறியாளர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
துணைவர்சுஜாதா ரங்கராஜன்
பிள்ளைகள்கேசவா பிரசாத், ரங்கா பிரசாத்
இணையதளம்
http://www.writersujatha.com

வாழ்க்கைக் குறிப்பு

சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி தூய வளனார் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி தூய வளனார் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993-ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

புனைபெயர்

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962-ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

ஆக்கங்கள்

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

புதினங்கள்

அகரவரிசையில் . . .

குறும்புதினங்கள்

  1. தீண்டும் இன்பம்
  2. குரு பிரசாத்தின் கடைசி தினம்
  3. ஆகாயம்
  4. காகித சங்கிலிகள்
  5. மண்மகன்
  6. மெரினா
  7. மோதாமல் ஒரு நாளும் இரக்க வேண்டாம்
  8. டி.என்.ஏ; 1995, குமுதம் தொடர்

சிறுவர் இலக்கியம்

  1. "பூக்குட்டி"

சிறுகதைத் தொகுப்புகள்

  1. அப்பாவின் ஆஸ்டின்
  2. இரயில் புன்னகை
  3. ஓலைப்பட்டாசு
  4. சில சிறுகதைகள்
  5. சில வித்தியாசங்கள்
  6. தூண்டில் கதைகள்
  7. நகரம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
  8. நிஜத்தைத் தேடி
  9. மத்திமர்
  10. மீண்டும் தூண்டில் கதைகள்
  11. வானமென்னும் வீதியிலே, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
  12. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்

சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள்

  1. நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்

கவிதைத் தொகுப்பு

  1. நைலான் ரதங்கள்

நாடகங்கள்

நீள்நாடகங்கள்

  1. அடிமைகள்
  2. அன்புள்ள அப்பா
  3. ஊஞ்சல்
  4. கடவுள் வந்திருந்தார்
  5. சிங்கமைய்யங்கார் பேரன்
  6. டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
  7. பாரதி இருந்த வீடு

குறுநாடகங்கள்

  1. ஆகாயம்
  2. இடையன் மகள்
  3. கதைகேளு பெண்ணே, கதைகேளு
  4. கிருஷ்ணா! கிருஷ்ணா!
  5. சரளா
  6. சேகர்
  7. பிரயாணம்
  8. பெட்டி
  9. மந்திரவாதி
  10. மறுமணம்
  11. மாறுதல்
  12. முதல் நாடகம் (ஒரு கொலை)
  13. முயல்
  14. வந்தவன்
  15. வாசல்

கட்டுரைத் தொகுப்புகள்

  1. இன்னும் சில சிந்தனைகள்
  2. உயிரின் ரகசியம்
  3. எழுத்தும் வாழ்க்கையும்
  4. கணையாழியின் கடைசி பக்கங்கள்
  5. கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]
  6. கடவுள்; 2008
  7. கடவுள் இருக்கிறாரா?
  8. கடவுள்களின் பள்ளத்தாக்கு
  9. சுஜாதா'ட்ஸ்
  10. செய்தி சொல்லும் செயற்கைக்கோள்கள்
  11. தமிழ் அன்றும் இன்றும்; உயிர்மை பதிப்பகம், சென்னை
  12. தலைமை செயலகம்
  13. திரைக்கதை எழுதுவது எப்படி?
  14. நானோ டெக்னாலஜி
  15. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்
  16. ஜீனோம்
  17. சிலிகான் சில்லு புரட்சி

வினா விடை

  1. ஏன் ? எதற்கு ? எப்படி ? [பாகம் 1,2]
  2. சுஜாதா பதில்கள் (பாகம் 1, 2, 3)

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

பணியாற்றிய திரைப்படங்கள்

மறைவு

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.[1],

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கைக் குறிப்புஎழுத்தாளர் சுஜாதா புனைபெயர்எழுத்தாளர் சுஜாதா ஆக்கங்கள்எழுத்தாளர் சுஜாதா திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்எழுத்தாளர் சுஜாதா பணியாற்றிய திரைப்படங்கள்எழுத்தாளர் சுஜாதா மறைவுஎழுத்தாளர் சுஜாதா மேற்கோள்கள்எழுத்தாளர் சுஜாதா வெளி இணைப்புகள்எழுத்தாளர் சுஜாதா193519532008அறிவியல்கட்டுரைகவிதைசிறுகதைதொலைக்காட்சிபுதினம்பெப்ரவரி 27மே 3

🔥 Trending searches on Wiki தமிழ்:

வடிவேலு (நடிகர்)நாடகம்திக்கற்ற பார்வதிஇடைச்சொல்ராஜா ராணி (1956 திரைப்படம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)அவுன்சுகொன்றைதேவாரம்மார்க்கோனிர. பிரக்ஞானந்தாசீறாப் புராணம்தொழிற்பெயர்உத்தரகோசமங்கைவினைச்சொல்மழைநீர் சேகரிப்புவைரமுத்துகார்ல் மார்க்சுநிதி ஆயோக்இராமானுசர்பட்டினத்தார் (புலவர்)மண்ணீரல்காடுவெட்டி குருசுற்றுச்சூழல் பாதுகாப்புரயத்துவாரி நிலவரி முறைபி. காளியம்மாள்தன்யா இரவிச்சந்திரன்பாலின விகிதம்தமிழ்நாடு காவல்துறைகொல்லி மலைகரிசலாங்கண்ணிஜெயம் ரவிதிருவாசகம்பாலை (திணை)வெப்பம் குளிர் மழைசின்ன வீடுபுதுச்சேரிஹரி (இயக்குநர்)தமிழர் நிலத்திணைகள்திருப்பாவைஒன்றியப் பகுதி (இந்தியா)அக்பர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்இனியவை நாற்பதுகன்னி (சோதிடம்)சாகித்திய அகாதமி விருதுதமிழர் அளவை முறைகள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பெண்களின் உரிமைகள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நிலாபாரதிதாசன்தொல்காப்பியம்சேரர்சிறுகதைமதுரை நாயக்கர்தமிழர் பண்பாடுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திராவிட முன்னேற்றக் கழகம்தொல். திருமாவளவன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடலோரக் கவிதைகள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மீனா (நடிகை)தமிழ்நாடுஇசுலாமிய வரலாறுஅஸ்ஸலாமு அலைக்கும்திருக்குர்ஆன்வேற்றுமையுருபுவயாகராசிவனின் 108 திருநாமங்கள்புனித யோசேப்புதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சைவத் திருமணச் சடங்குவானிலைஇந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)🡆 More