கலர்சு தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.
முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்சு தமிழ் & கலர்சு தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றது.
கலர்சு தமிழ் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 19 பிப்ரவரி 2018 |
உரிமையாளர் | வயாகாம்-18 |
பட வடிவம் | 576i (SD) 1080i (HD) |
கொள்கைக்குரல் | "இது நம்ம ஊரு கலரு" |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | Channel 778 |
டாட்டா ஸ்கை (இந்தியா) | Channel 1555 |
சன் டைரக்ட் (இந்தியா) | Channel 128 |
வீடியோகான் டி2எச் (இந்தியா) | Channel 553 |
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) | Channel 647 |
டிஷ் டிவி (இந்தியா) | Channel 1808 |
மின் இணைப்பான் | |
அரசு டிஜிட்டல் (தமிழ்நாடு) | Channel 108 |
டிசிசிஎல் (தமிழ்நாடு) | Channel 4 |
எஸ்சிவி (தமிழ்நாடு) | Channel 139 |
இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது. மேலும் கலர்சு தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.
கலர்சு தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார். Voot என்ற செயலி மூலமாக கலர்சு தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.
This article uses material from the Wikipedia தமிழ் article கலர்சு தமிழ் தொலைக்காட்சி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.